Saturday, July 21, 2018

இந்திய மூல வளங்களை ஏகாதிபத்தியவாதிகள் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வதற்காகவே ‘எட்டுவழிச் சாலை’ திட்டங்கள் பயன்படும்! அந்நிய நிதி மூலதனம் சாராத சுதேசியத் திட்டங்களுக்காகப் போராடுவோம்!!



இந்திய மூல வளங்களை ஏகாதிபத்தியவாதிகள் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வதற்காகவேஎட்டுவழிச் சாலைதிட்டங்கள் பயன்படும்!
அந்நிய நிதி மூலதனம் சாராத சுதேசியத் திட்டங்களுக்காகப் போராடுவோம்!!


·   ஏகாதிபத்திய புதிய காலனியாதிக்கத்தை வீழ்த்துவோம்! நிலவளம், நீர்வளம், கனிம வளங்களைக் காப்போம்!
·  ஏகாதிபத்திய கார்ப்பரேட் நலன்களுக்கான மோடி -எடப்பாடி கும்பலின் பாசிசக் கூட்டை முறியடிப்போம் !
· அந்நிய நிதி மூலதனத்தால் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்ற ஏகாதிபத்திய அடிமைத்தன அரசியலை முறியடிப்போம்
 அமெரிக்க ஏகாதிபத்திய புதிய காலனியத்தைப் பாதுகாக்கும் இந்திய தரகு முதலாளித்துவநிலவுடமைக் கும்பலின் ஆட்சியைத் தூக்கியெறி, புதிய ஜனநாயக -விவசாயப் புரட்சியை முன்னெடுப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, June 16, 2018

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம், பு.இ.மு. போராளிகள் மற்றும் வேல்முருகனை விடுதலை செய்!


பா.ஜ.க.வின் எடுபிடி எடப்பாடி அரசே!

* தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம், பு.இ.மு. போராளிகள் மற்றும் வேல்முருகனை விடுதலை செய்!

* தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப்பெறு!

* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறு! விடுதலை செய்!

* தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!

* தூத்துக்குடியில் குவித்துள்ள காவல்படையைத் திரும்பப் பெறு!

* கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்துப் போராட புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Tuesday, May 8, 2018

புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!



புதியகாலனிய உயர்கல்விக் கொள்கைக்கு சேவை செய்யும் “நீட்” தேர்வை எதிர்ப்போம்!!

ê கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும், சமூக நீதியை ஒழிக்கும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நீட் தேர்வைத் திரும்பப் பெறு!
ê  புதிய காலனிய உயர்கல்விக் கொள்கையை எதிர்ப்போம்!
ê  இந்திய அரசே! உலக வர்த்தகக் கழகத்தை (WTO) விட்டு வெளியேறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

அக்டோபர், 2017, முதல் பதிப்பு
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
தொடர்புக்கு: தோழர் டேவிட் செல்லப்பா,
3/20, அண்ணா தெரு, மேட்டுக் குப்பம், வானகரம், சென்னை-98
செல்: 8098538384
விலை: ரூ. 20/-

புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!

புதிய காலனிய உயர்கல்விக் கொள்கைக்குச் சேவை செய்யும் ‘நீட்’ தேர்வை எதிர்ப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
இந்துத்துவப் பாசிச பாஜக-வின் மோடி தலைமையிலான அரசு இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் 10 D என்ற பிரிவைச் சேர்த்து மருத்துவக் கல்வியில் சேருவதற்கான ‘நீட்’ (NEET) நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கி அமல்படுத்தியுள்ளது.
ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் இந்தியாவின் உயர்கல்வியைக் கொள்ளையடிப்பதற்காக மிகவும் மோசடியாக நடத்தப்பட்ட இந்த ‘நீட்’ தேர்வு முறைதான் அனிதா போன்ற ஏழைஎளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கியது. படுகொலை செய்தது. இந்த நீட் தேர்வுமுறை எதற்காக கொண்டுவரப்பட்டது? யார் தீர்மானித்தது? இதற்கு பின்னுள்ள அரசியல் பொருளியல் காரணிகள் என்ன?.
புதியதாராளக் கொள்கை மற்றும் உலகமயமாக்களால் 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டது. இதன் விளைவாக அந்நாடுகளில் உயர்கல்வி கடும் நெருக்கடியைச் சந்தித்தது. உயர்கல்விக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவிகள் குறைக்கப்பட்டன. கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளக்குறைப்பு, லே-ஆப், ஆட்குறைப்பு என கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. நெருக்கடிக்குள்ளான உயர்கல்வி நிறுவனங்களை மீட்பதற்கு, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் கல்விச் சந்தையைக் கைப்பற்றவேண்டும். இதன் காரணமாகவே, உலகளவில் அமெரிக்க மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கல்விச் சந்தையாகத் திகழும் இந்தியாவின் சந்தையைக் கைப்பற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறது. இந்நெருக்கடியானது இந்தியக் கல்விச்சந்தையைக் கைப்பற்ற வேகப்படுத்தினாலும், இது 2005ஆம் ஆண்டு WTO-GATS ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் உயர்கல்விச் சந்தையில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்கான தொடர் நிகழ்வுபோக்கின் வெளிப்பாடாகும். இந்தியாவின் கல்விச் சந்தை 2016இன் கணக்குப்படி 140 பில்லியன் டாலர்களாகும். இந்தச் சந்தையின் மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவச்செய்வதுதான் WTO-GATS ஒப்பந்தமும் ‘நீட்’ தேர்வும்.

Tuesday, May 1, 2018

மே நாள் ஊர்வல முழக்கங்கள்


மே நாள் ஊர்வல முழக்கங்கள்

மேதினி போற்றும்…       மேநாள்!
பாட்டாளி வர்க்கப்….     போர்நாள்!!

ஒடுக்கப்பட்ட…               மக்களின்
உரிமைகளைக்…              காத்திடும்
கடமைகளைக் …              காட்டிடும்
மே தினத்தைப்…              போற்றுவோம்!!

Monday, April 30, 2018

2018-மே நாளில் சூளுரைப்போம்!


மே நாளில் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உலகப் பாட்டாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும், ஏகாதிபத்திய நிதி மூலதனத் தாக்குதலி லிருந்து உடனடி நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடுவதோடு சோசலிசம், ஜனநாயகம், விடுதலைக்காக போராட சூளுரைக்கும் நாளே மே நாள்!! தற்போது ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடிகளை உலக மக்கள் மீது சுமத்த பாசிசத்தை திணிப்பது; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்கான பனிப்போர் தீவிரமடையும் சூழலில் இம்மேநாளை எதிர்கொண்டுள்ளோம்!

தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி

2008ல் அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியிலிருந்து உலகம் இன்னமும் மீளவில்லை. 2020ல் அமெரிக்காவும், உலகமும் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியில் வீழும் என்றும், அது 2008 ஐ விட கடுமையானதாக இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதிய செயலாளர் எச்சரித்துள்ளார்.

Tuesday, March 13, 2018

கார்ப்பரேட் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற் உரிய நீரின் அளவைக் குறைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிப்போம்!


கார்ப்பரேட் நலனுக்காக காவிரியில் தமிழகத்திற் உரிய நீரின் அளவைக் குறைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தனது தீர்ப்பில் தமிழகத்திற்கான 14.75 டி.எம்.சி தண்ணீரைப் பறித்து பெங்களூர் குடிநீர் என்று கூறி கர்நாடகத்திற்குக் கொடுத்து தமிழகத்தை வஞ்சித்துவிட்டது. கர்நாடக அரசாங்கமோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து காவிரி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று இனவெறியோடு செயல்படுகிறது. உச்சநீதிமன்றமோ, ஹெல்சிங்கி கோட்பாட்டின் அடிப்படையில் காவிரிபாயும் மாநிலங்களுக்கு சமபங்கீடு, மேலாண்மை வாரியம் என்ற தீர்ப்பை அளித்துவிட்டு, கேம்பியோன் விதிகள் மற்றும் பெர்லின் விதிகளைக் காட்டி காவிரி நான்கு மாநிலங்களின் சொத்து என்பதற்குப் பதிலாக தேசிய சொத்து என்று அறிவித்து பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு காவிரி நீரை தாரை வார்த்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்தை மட்டுமல்ல இந்தியா முழுவதையும் தண்ணீர் பிரச்சினையில் ஒரு கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தமிழகத்தை வஞ்சிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு!

காவிரி நடுவர்மன்றம் ஹெல்சிங்கி கோட்பாட்டின் அடிப்படையில் நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை என்றும், காவிரி பாயும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் 20 டி.எம்.சி நீரையும் கணக்கில் கொண்டு பெங்களூரு குடிதண்ணீரின் தேவைக்காக என்று கூறி தமிழகத்தின் 14.75 டி.எம்.சி நீரை எடுத்து கர்நாடகாவுக்கு கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

Saturday, February 3, 2018

தமிழக அரசே! பேருந்து கட்டண உயர்வை முழுவதுமாகத் திரும்பப் பெறு!


தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!

தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

கிரிமினல் மாஃபியா ஜெயாவின் சிஷ்ய கோடிகள் எடப்பாடி-பன்னீர் ஆட்சி பேருந்துக் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தி ஏழை எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாத சம்பளத்தில் 25 சதவீதத்தை பேருந்துக் கட்டணத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளால் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள மக்கள் மீது பேரிடியாக இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு இறங்கியுள்ளது.

தற்போதைய இந்தக் கட்டண உயர்வுமட்டுமல்ல, எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்கவும், டீசல் விலை உயர்வு அல்லது பிற காரணங்களால் பேருந்துக் கட்டணங்களை ஆண்டுதோறும் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் அரசாங்கத்தைக் கேட்காமல் அதிகாரிகளே உயர்த்திக் கொள்ளலாம் என்ற துரோகத்தையும் துவக்கி வைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பொம்மைகளாக்கி கட்டணங்களை உயர்த்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைத்துவிட்டது. நித்தம்நித்தம் கட்டண உயர்வு என்ற அதிர்ச்சியில் மக்களைத் தள்ளியுள்ளது. இந்த அநியாய பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!

தமிழக அரசே! உயர்சாதி வெறியர்களின் மீது நடவடிக்கை எடு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

தருமபுரியில் பா.ம.க மற்றும் வன்னிய சாதி அமைப்புகள் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன. நல்லம்பள்ளி வன்னியர் சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ராஜ்குமாரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாரை சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

சாதிக் கலவரத்தைத் தூண்டும் வன்னிய சாதி அமைப்புகள்

உடனடியாக வன்னிய சாதியைச் சேர்ந்த 300 பேர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நல்லம்பள்ளி சந்தையின்போது சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டினர். பிரியங்காவை ராஜ்குமார் கடத்திவிட்டதாகவும், உடனடியாக பிரியங்காவை ஒப்படைக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் பிரியங்காவை ஒப்படைக்காவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தனர். அன்று இரவே சாதி வெறியர்கள் 6-பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்தனர். அதில் மூன்று பேர் ராஜ்குமார் வீட்டையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியதுடன் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திருப்பித் தாக்கவே ஓடிவிட்டனர்.