மே
நாளில் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகவாதிகளே!
அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள்
ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள் உக்கிரம்
அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து
நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள் எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள்
இயக்கத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.