Sunday, December 13, 2015

வெள்ளம், வறட்சியால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!


வெள்ளம், வறட்சியால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

மத்திய அரசே!
  ê  தமிழக வெள்ள இழப்புகளை தேசிய பேரிடராக அறிவி!

  ê  இராணுவத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறை!

  ê  நீர்ப்பாசனம், மராமத்து, நதிநீர் இணைப்பு, நீர்வழிச் சாலைத்
 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரி!

  ê  மக்களின் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீட்டுக்காக,
  பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும்
  அளித்து வரும் ஊக்கத் தொகை, வரிச் சலுகைகளை ரத்துச் செய்!
  அவர்கள் மீது வெள்ள நிவாரண வரி போடு!

தமிழக அரசே!
  ê  ரியல் எஸ்டேட், மணல், கல்விக் கொள்ளையர்களின் ஆறுகள்,
  ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்று! அரசுடைமையாக்கு!

  ê  நிவாரணப் பொருள் விநியோகத்தையும், மறுசீரமைப்புப் பணிகளையும்
  அனைத்துக் கட்சிக் கமிட்டிகள் மூலம் அமல்படுத்து!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

டிசம்பர் 2015

வெள்ளம், வறட்சியினால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!



வெள்ளம், வறட்சியினால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற
புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும்
எதிர்த்துப் போராடுவோம்!

·  நாட்டின் பாதுகாப்பு என்ற பேரால் ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் இராணுவத்திற்கு பட்ஜெட்டில் 51 சதவீதம்.
      மக்களுக்கான நீர்ப்பாசனம் மராமத்துப் பணிகளுக்காக
      3 சதவீதத்திற்குக் குறைவான நிதி ஒதுக்கீடு.
     வெள்ளம் வறட்சியால் விவசாயம் அழிவு,
     விவசாயிகளுக்கோ பஞ்சம், பசி, பட்டினிச் சாவு.

·        பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும்
      ஊக்கத் தொகை,  வரிச் சலுகை ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் கோடி,
      வரி ஏய்ப்பின் மூலம் அவர்கள் பெரும் ஆதாயம் பல லட்சம் கோடி.
      ஆனால்….. குடிசை வாசிகளுக்கோ குந்த இடமில்லை!
      மக்களுக்கான கல்வி, மருத்துவம், சுகாதாரத் துறைகளை
      தனியார்மயமாக்கி அரசு பொறுப்பைக் கைவிடல்.

·        தொழில்மயம் என்ற பேரால் நாட்டின் இயற்கை வளங்களையும்,
      மூலவளங்களையும் சூறையாட
      ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகளை அனுமதித்து
      கிராம, நகரக் கட்டமைப்புகள் தகர்க்கப்படுவதால்,
      வெள்ளம் வறட்சி பேரிடர்கள்.

·        ரியல் எஸ்டேட், மணல், கிரானைட், கல்வி கொள்ளையர்கள் மற்றும்
     அரசு அதிகார மாஃபியா கும்பலின் சூறையாடல்களாலேயே,
     வெள்ளம், வறட்சி, பேரிடர்கள்.

·      வெள்ளம், வறட்சி, பேரிடர் சுமைகளை மக்கள் மீது
     சுமத்துவதை அனுமதியோம்.
     அரசு ஆளும் வர்க்கங்களின் தோள்களில் சுமத்தப் போராடுவோம்.

மேற்கண்ட நிலைமைகளின் கீழ் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரிடர்களிலிருந்து மீளபின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுவோம்.

இந்திய அரசே!
ê  தமிழக வெள்ள இழப்புகளை தேசிய பேரிடராக அறிவி!

ê  இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை! நீர்ப்பாசனம்
  மராமத்து, நதிகள் இணைப்பு, நீர்வழிச் சாலை திட்டங்களுக்கு
  நிதி ஒதுக்கீட்டை அதிகரி!

ê  மக்களின் மறுவாழ்விற்காக நிதி ஒதுக்கீடு செய்ய,
  பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும்
  அளித்துவரும்  ஊக்கத் தொகை, வரிச்சலுகையை ரத்துச் செய்!
  அவர்கள் மீது வெள்ள நிவாரண வரி போடு!

தமிழக அரசே!
ê  ரியல் எஸ்டேட், மணல், கிரானைட், கல்விக் கொள்ளையர்களின்
  ஆறு, ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்று! அரசுடைமையாக்கு!

ê  கோவில், மடங்கள், நிலப்பிரபுக்களின் நிலங்களில் பயிரிடும்
  விவசாயிகளுக்கு, குத்தகை வாரத்தை ரத்து செய்!
  கந்து வட்டியை ஒழி!
  விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கு!

ê  வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை
  விவசாயிகள் மீது சுமத்துவதை எதிர்ப்போம்!
  பன்னாட்டு வேளாண் கார்ப்பரேட்டுகள்மீது
  சுமத்தப் போராடுவோம்!

ê  விவசாயிகளுக்கு அறிவித்துள்ள நிவாரணத்
  தொகையை அதிகப்படுத்து !
  இழப்பிற்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்கு!

ê  பெரும்பான்மை வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய தேசிய
  முதலாளிகள், சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் வழங்கு!
  வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடனுக்கு உத்தரவாதம் வழங்கு!’

ê  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு!
  வட்டியில்லா கடன் வழங்கு
  ஆன்-லைன் வர்த்தகத்தைத் தடை செய்!

ê  வீடற்றவர்கள் மற்றும் குடிசைவாழ் மக்களுக்கு
  கல் வீடு கட்டிக் கொடு!
ê வேலையற்றோர் மற்றும் ஏழை எளிய விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கு!

ê  தனியார் நிறுவனங்களால் தொற்று நோயை ஒழிக்க முடியாது!
  கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்து!

ê  அரசு, தனியார், அரசுசாரா நிறுவனங்கள் வழங்கும்
  அனைத்து நிவாரணப் பொருட்கள் விநியோகத்தையும்,
  மறுசீரமைப்புப் பணிகளையும்
  அனைத்துக் கட்சிக் கமிட்டிகள் மூலம் அமல்படுத்து!

       மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு