Wednesday, April 30, 2014

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்


«  
மே நாள் வாழ்க மே நாள் வாழ்க!
மேதினி போற்றும் மேநாள் வாழ்க!
போர்நாள் வாழ்க போர் நாள் வாழ்க
பாட்டாளி வர்க்கப் போர்நாள் வாழ்க!

மே நாளில் சூளுரைப்போம்!

மே நாளில் சூளுரைப்போம்!

கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற மக்களே!

                உலக முதலாளித்துவ நெருக்கடி மீளமுடியாமல் மென்மேலும் புதை குழியில் ஆழ்ந்து வருகின்றது. அதே வேளையில் நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மென்மேலும் சுமத்துகின்றனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். இத்தகைய சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் கடுமையாகப் போரிட்டு வருகின்ற ஒரு சூழலில்தான் நாம் இந்த மே நாளை எதிர்கொள்கிறோம்.