Wednesday, April 30, 2014

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்


«  
மே நாள் வாழ்க மே நாள் வாழ்க!
மேதினி போற்றும் மேநாள் வாழ்க!
போர்நாள் வாழ்க போர் நாள் வாழ்க
பாட்டாளி வர்க்கப் போர்நாள் வாழ்க!

«  
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!
«  
ஒடுக்கப்பட்ட   மக்களின்
உரிமைகளைப்    போற்றிடும்
உறுதியினை    ஏற்றிடும்
கடமைகளை    காட்டிடும்
மேதினத்தை  வாழ்த்துவோம்!
«  
சிகாகோ நகர வீதியிலே
இரத்தம் சிந்திப் போராடி
தொழிலாளி வர்க்கம் வென்றெடுத்த
எட்டுமணி நேர வேலை நாளை
பறிக்கின்ற கொடுமைகளை
அனுமதியோம் அனுமதியோம்!
12 மணி நேர வேலை நாளை
முறியடிப்போம் முறியடிப்போம்!



«  
நிரந்தர வேலையை ஒழித்துக்கட்டி
காண்டிராக்ட் முறையைப் புகுத்துகின்ற
மூலதனக் கும்பல் சதிகளையே
முறியடிப்போம்! முறையடிப்போம்!
«  
மூலதனக் கும்பலின் இலாபமோ
மலைபோலக் குவியுது!
தொழிலாளிகளின் கூலியோ
பாதாளத்தில் கிடக்குது!
குறைந்தபட்சக்  கூலிச் சட்டம்
குறட்டைவிட்டு தூங்குது
உண்டு கொழுத்தவன் மாடியிலே
உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே!
குறைந்தபட்சக் கூலி சட்டத்தை
உடனடியாக அமல்படுத்து
«  
சங்கம் சேரும் உரிமையினை
கூட்டுப் பேர உரிமையினை
தொழிற்சங்க உரிமையினை
பறிக்கின்ற கொடுமையினை
பாடையில் ஏற்றுவோம்!
பாடையில் ஏற்றுவோம்!
தொழிற்சங்க உரிமைக்காகப்
போராடுவோம் போராடுவோம்!




«  
தொழிலாளி வர்க்கத்தை
கொத்தடிமையாய் ஆக்குகின்ற
உலகமய, தாராளமய
தனியார்மயக் கொள்கைகளை
திரும்பப் பெறப் போராடுவோம்!
போராடுவோம்! போராடுவோம்
திரும்பப் பெறப் போராடுவோம்!
«  
நாட்டின் அனைத்துத் துறைகளையும்
அமெரிக்கவிற்கு திறந்துவிட்டு
அமெரிக்க ஏகாதி பத்தியத்தின்
புதியகாலனி நாடாக
இந்தியாவை மாற்றுகின்ற
தேசத் துரோக ஒப்பந்தங்களை
கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்கக் கொள்கைகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
«  
ஏகாதிபத்திய அமெரிக்காவுடன்
செய்து கொண்ட ஒப்பாந்தத்தை
அணுசக்தி ஒப்பந்தத்தை
இராணுவ ஒப்பந்தத்தை
கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!
«  
உலகமயக் கொள்கைகளால்
வாழ்விழந்த விவசாயி
தனியார்மய கொள்கைகளால்
நலிந்து கிடக்கும் நெசவாளி
தாராளமயக் கொள்கைகளால்
வாடி நிற்கும் வியாபாரி
ஒடுக்கப்பட்ட அனைவரும்
ஒன்றுபட்டுப் போராடுவோம்!
«  
அடிமை விலங்கை ஒழித்திடவே
நாட்டை விடுதலை செய்திடவே
புதிய ஜனநாயக அரசமைக்க
புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
அணிதிரள்வோம் அணிதிரள்வோம்
புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!!
«  
உலகத் தொழிலாளர்களே
ஒடுக்கப்பட்ட தேசங்களே
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!
ஏகாதிபத்திய வாதிகளை
சவக்குழிக்கு அனுப்பிடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.