Friday, April 17, 2015

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை! ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை! 
 ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!

செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவின் அதிரடிப்படை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது.
“சரண் அடையாததாலும், திருப்பி எங்களைத் தாக்கியதாலும் என்கவுண்ட்டர் நடத்தவேண்டிய சூழ்நிலை” என்று ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசாங்கமும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் பேருந்தில் பயணம் சென்றவர்களைக் கைது செய்து சித்தரவதை செய்துதான் கொன்றார்கள் என்பதை “தோல் உரிக்கப்பட்ட கைகள், கருக்கப்பட்ட உடல்கள், அடித்துத் துன்புறுத்திய காயங்கள்” என்று தமிழ்த் தொழிலாளர்கள் உடலில் இருந்த அத்தனை ரணங்களையும்” நேரடியான சாட்சிகளையும் கொண்டு தடய அறிவியல் அறிஞர்களும், ஆந்திரப்பிரதேச சிவில் உரிமை அமைப்புகளும் நிரூபித்துள்ளன. எனவே தமிழ்த் தொழிலாளர்கள் 20 பேர்களின் பச்சைப் படுகொலை சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் “அரச பயங்கரவாதம்தான்” என்பது அம்பலப்பட்டுவிட்டது. 

20 தமிழ்த் தொழிலாளர்களைச் சந்திரபாபுநாயுடு அரசாங்கம் சுட்டுக் கொன்றதற்கான காரணம் என்ன?

20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை செய்த ஆந்திர அரசின் “அரசு பயங்கரவாதத்தைக்” கண்டித்து...