Wednesday, November 6, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடுத்துவது எதிர்த்து...



நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்! தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!


நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்!

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 

தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது, வன்னியச் சாதி வெறியர்கள் சாதி கலவரத்தை நடத்தி நாசப்படுத்தியது வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் ஓராண்டு காலம் முடிவடைகிறது. கலவரம் நடந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது முறையாக நடக்கவுமில்லை, அம்மக்களைச் சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவுமில்லை. சாதிக் கலவரத்தைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பேரில் ஓராண்டு காலமாகத் தர்மபுரியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள 144-தடை சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் அடக்குமுறைகளை ஏவி ஒரு போலீஸ் இராஜ்ஜியமே நடந்து வருகிறது.