Friday, March 7, 2014

இந்திய அரசே! ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமல்படுத்து!!



இந்திய அரசே! ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமல்படுத்து!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
     உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், குற்ற விசாரணை சட்டத்தின்படி அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி மாநில அரசே முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
   உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழக முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி இம்மூவரையும் விடுதலை செய்வதுடன், இவ்வழக்கில் ஏற்கனவே ஆயுள்தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் இரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடிவு எடுத்தது. அது பற்றி மத்திய அரசின் முடிவை 3 நாட்களுக்குள் அறிவிக்கவேண்டும், இல்லையேல் தமிழக அரசு இவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்யும் என்று அறிவித்தது.