இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!
- மன்மோகன் கும்பலே சில்லரை வணிகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்து விடாதே!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தேசபக்திகொண்ட ஜனநாயகவாதிகளே!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 16ஆம் தேதி இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை அமெரிக்கக் கம்பெனிகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கூறினார்” வெளிப்படையாக சில்லரை வர்த்தகம் என்று கூறினாலும் பாதுகாப்புத்துறை, பென்சன் திட்டம், காப்பீட்டுத்துறைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முழுவதுமாக திறந்துவிட வேண்டும், அதற்கானத் தடைகளை முழுவதுமாக அகற்றவேண்டும் என்பதே ஒபாமாவின் கோரிக்கையாகும்.