Friday, January 25, 2013

அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கமும் “அரபு வசந்தமும்”


சமரன் வெளியீட்டகம் : தொடர்புக்கு: 9941611655

முன்னுரை
                அமெரிக்க ஏகாதிபத்தியம், வடக்கு ஆப்பிரிக்கா முதல் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வரை தனது புதிய காலனிய ஆதிக்கத்தை திணிக்கவும், தனது உலக மேலாதிக்கத்தை நிறுவவும் அந்நாடுகளின் மீது அரசியல் பொருளாதார, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்றும்; சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமைகளை காப்பது, ஊழல் ஆட்சியை ஒழிப்பது என்றும் நாமகரணங்களை சூட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் துவங்கி, ஈராக், லிபியா இன்று சிரியா என்று ஒவ்வொரு நாடாக தனது பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உண்மையில் அந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்காக நடத்துவதுதான் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்புகளும் ஆக்கிரமிப்புப் போர்களும்.

Monday, January 21, 2013

இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!


இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!

«  கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!
«  சாதி தீண்டாமை ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!
«  சாதி ஆதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!
«  ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி 2013

Friday, January 4, 2013

கூடங்குளம் அணு உலையைத் திற! - ஆர்ப்பாட்டம்


கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

          கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்திக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆனபின்பும், எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமும் எப்படியாவது அணு உலையை மூடிவிடவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசாங்கமோ நட்ட ஈடு, மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்துவைத்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அணுமின் நிலையத்தை திறப்பதற்கு முழுமுயற்சி செய்யவில்லை. உச்சநீதிமன்றம் அணுசக்தி அரசியலையோ, தொண்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையோ புரிந்துகொள்ள மறுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அணு உலையை மூடச்சொல்வோம் எனக் கூறியது. அணு உலை மீதானத் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு என்பது சிந்துபாத் கன்னித்தீவு கதைப்போல் தொடர்கிறது.