Friday, January 23, 2015

ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்த்த கடலூர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரள்வோம்!


ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!



ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ஜனநாயகவாதிகளே!

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, இந்துத்துவ பாசிச மோடியின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுகிறார். சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திக்கு குறுநில மன்னன் அளிக்கும் விருந்தைப்போல் தலைநகரமே வெள்ளை மாளிகையாக மாற்றப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறது. 2012-ல் இரண்டாம் எலிசபெத் ராணியை வரவேற்க அரசு அலுவலகங்களில் ’சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கைவிட்டது மன்மோகன் கும்பலின் காங்கிரஸ் ஆட்சி. ‘குடியரசு தினத்தன்று எஜமானன் ஒபாமாவை மலர்ப் பல்லக்கில் சுமந்து வருவதன் மூலம் புதியகாலனிய சேவையில் மன்மோகன் கும்பலையும் விஞ்சிவிட்டது மோடிகும்பல்.

ஒபாமாவின் இந்திய வருகை மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்த்து இந்தியாவை தனது கூட்டணிக்குள் கொண்டுவருவது; அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது; இந்திய நாட்டின் நிதித்துறை, பாதுகாப்புத் துறை, அணுசக்தித் துறை போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திப்பதுடன் இந்துத்துவ மதவெறிப் பாசிச அமைப்புகளுக்கு ஊக்கம் அளித்தல் போன்றவைகளே அவை.