கூடங்குளம் அணு உலையைத் திற!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!
அணுசக்தி ஆபத்து என்று பீதியூட்டி கூடங்குளம் அணு உலையை
எப்படியாவது இழுத்து மூடிவிடவேண்டும் என்று அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார்
தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி
வருகின்றனர். அக்டோபர் 29ல் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும்
மிரட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ கூடங்குளம் அணு
உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, அவர்களின்
மாற்று வாழ்வாதாரப் பிரச்சனைகளை முறையாகத் தீர்த்துவைக்க இன்று வரை முழுமையாக
முயற்சி செய்யவில்லை. இத்தகைய ஒரு சூழலில், நாட்டில் நிலவும் மின்வெட்டு, மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு
கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்துடன் அணு உலையைத் திறக்க
வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.