இன அழிப்பு போர்க்குற்றவாளி இராஜபட் சேவைக் கூண்டிலேற்றவும், தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்புக்கோரியும்
நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா ஒரு உப்பு சப்பில்லாத தீர்மானத்தை முன்வைத்துள்ளது. அந்தத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையிலான "டெசோ'' அமைப்பினரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசை நிர்பந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் போராடும் பெரும்பான்மை
மாணவர்கள் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் வெறும் நாடகம் என்றும் இலங்கையில் சர்வதேச விசாரணை வேண்டியும் தமிழீழ தனிநாடு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கானத் தீர்மானத்தை இந்தியா தனியாக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகின்றனர். இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழரின் விடுதலைக்கான ஒரு சரியான நிலைபாட்டை எடுக்கவும், மாணவர்களின் போராட்டத்தை ஒரு பொது இயக்கமாக மாற்றுவதற்கும் மேற்கண்ட போக்குகளை பற்றி ஒரு பரிசீலனை செய்வது அவசியமாகும்.