ஜெயா அரசே!!
பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!!
விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விழிபிதுங்கி அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயா அரசு பேருந்து, பால், மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி மக்கள் வயிற்றில் பேரிடியை இறக்கியுள்ளது. சாதாரண பேருந்துக் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ 6.25 ஆகவும் உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ 11000 கோடியளவில் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இதனால் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் மாதம் ஒன்றுக்கு ரூ 1000த்திலிருந்து 1500 வரை கூடுதலாக செலவழிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.