நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!!
அன்னா அசாரே தலைமையிலான ‘ஊழல் எதிர்ப்பு இந்தியா’ என்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான “ஜன் லோக்பால்” சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதிலிமிருந்து நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி டெல்லியில் நடந்த உண்ணா விரதத்தின்போது பல லட்சம் பேர் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது, சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சிக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.