அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கை”களே!
« உலகமக்களுக்கு ஆபத்து – அணு உலைகளால் மட்டுமல்ல! அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களால்தான் பேராபத்து!
« அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களை நிர்மூலமாக்கப் போராடுவோம்!
« அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் மின்னுற்பத்தியைப் பெருக்க அல்ல! நாட்டை அடிமைப்படுத்தவே!
« இந்திய அரசே! அமெரிக்காவுடனான அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ரத்துச் செய்!
« பாதுகாப்பற்ற பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை மூடு! பாதுகாப்பு அம்சங்கள் உள்ள புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை அனுமதி!
« உரியபாதுகாப்பு மற்றும் இழப்பீட்டை உத்தரவாதம் செய்து கூடங்குளம் அணு உலையைத் திற!
« நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் அணுசக்தி ஒப்பந்தங்கள் செய்த காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்ப்போம்!
« ஏகாதிபத்தியங்களிடம் நிதி பெற்று இயங்கும் தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்ய மறுக்கும் புதியகாலனிய தாசன் மன்மோகன் கும்பலை எதிர்ப்போம்!
« நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அனல், புனல், காற்றாலை, அணு மின்சாரம் என அனைத்தும் தழுவிய “தேசிய மின்கொள்கை” உருவாக்கப் போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
மார்ச் 2012