« இளவரசனின்
மரணம் தற்கொலை அல்ல, கொலை!
« கொலையாளிகள்
மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
காதலித்துக் கலப்புமணம் புரிந்த இளவரசனின் உடல், கடந்த 4ஆம் தேதியன்று தர்மபுரியில் இரயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாகக் காவல்துறையும், ஊடகங்களும் அது தற்கொலைதான் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. ஆனால் இளவரசனின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல; அது ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று அனைவராலும் கருதப்படுகிறது.
இளவரசன் மரணம் என்பது ஒரு தனித்த சம்பவம் அல்ல. இராமதாசு, குரு போன்றோரின் தலைமையிலான பா.ம.க.வினரும், வன்னியர் சங்கக் காடையர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுத்துவரும் சாதிவெறித் தாக்குதல்களின் ஒரு பகுதியேயாகும்.