Monday, November 26, 2012

தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!

தருமபுரி அருகே செல்லன் கொட்டாய் வன்னிய சாதியைச் சேர்ந்த இளம்பெண் திவ்யாவும், நத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் என்பவரும் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டார்கள். அதை எதிர்த்து பா.ம.க.வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ஒரு கொடிய சாதி வெறித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இனிமேல் யாரும் காதலித்து கலப்புத் திருமணம் புரியக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்த சாதிக் கலவரம்.

Sunday, November 11, 2012

சாதி வெறியை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்.



தர்மபுரியில்... சாதி வெறியை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்!


«  காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் ஜனநாயக உரிமை!
«   தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய பா.ம.க வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடு!
«  தாழ்த்தப்பட்டோர் மீது சாதி வெறியர்கள் தொடுக்கும் வன்கொடுமைகளை முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவோம்!
«  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் சாதியத்தையும் ஒழிக்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு

Thursday, October 4, 2012

கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!
       அணுசக்தி ஆபத்து என்று பீதியூட்டி கூடங்குளம் அணு உலையை எப்படியாவது இழுத்து மூடிவிடவேண்டும் என்று அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். அக்டோபர் 29ல் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் மிரட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, அவர்களின் மாற்று வாழ்வாதாரப் பிரச்சனைகளை முறையாகத் தீர்த்துவைக்க இன்று வரை முழுமையாக முயற்சி செய்யவில்லை. இத்தகைய ஒரு சூழலில், நாட்டில் நிலவும் மின்வெட்டு, மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்துடன் அணு உலையைத் திறக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Thursday, September 20, 2012

கூடங்குளம் அணு உலையைத் திற!


முழு புத்தகத்தையும் படிப்பதற்கு கீழே சொடுக்கவும்
http://senthalamsamaran.blogspot.in/2012/09/80.html

புத்தகம் வேண்டுவோர்:

விலை             :   ரூ. 30 /-

முதற்பதிப்பு : ஆகஸ்ட், 2012
நூல் கிடைக்கும் இடங்கள்:
தோழர் டேவிட் செல்லப்பா
3/20, அண்ணா தெரு, மேட்டுக்குப்பம்,
வானகரம், சென்னை - 600098
பேசி : 8098538384
------------------------------------------------------------
சமரன் வெளியீட்டகம்,
28/141, மாதவரம் நெடுஞ்சாலை,
பெரம்பூர், சென்னை-600011
செல்: 9941611655
Samaranpublisher@gmail.com
Samaranvelietagam@yahoo.com

Monday, September 17, 2012

ஈழத் தமிழரின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு புத்தர் வழிபாடா?

ஈழத் தமிழரின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு புத்தர் வழிபாடா?

« பிணம் தின்னிக் கழுகு இராஜபட்சேவே, இந்தியாவில் கால்வைக்காதே!

« ஈழத் தமிழின அழிப்புக்கான மன்மோகன் – சோனியா, சுஷ்மா, இராஜபட்சே கூட்டணியை முறியடிப்போம்!

« தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday, September 16, 2012

சில்லரை வணிகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டிற்கான அனுமதியைத் திரும்பப் பேறு!

சில்லரை வணிகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டிற்கான அனுமதியைத் திரும்பப் பேறு!

« நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் மன்மோகன் ஆட்சியைத் தூக்கி எறிவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலையைத் திற!

கூடங்குளம் அணு உலையைத் திற!

« அணு உலையால் மக்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளை, அனைத்து அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகளுடன் பேசித் தீர்வுகாண்!

« அணு உலை மீதான தாக்குதலை முறியடிக்க நடவடிக்கை எடு!

« தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து நிதி வருவதைத் தடைசெய்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Friday, September 7, 2012

ஒடுக்கப்பட்ட, சார்பு நாடுகளில் அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப் பாதை குறித்து ....

பதிப்புரை

அந்நிய முதலீடுகளின் உதவியின்றி அதாவது ஏகாதிபத்திய நாடுகளின் முதலீடுகள் இன்றி எந்த ஒரு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாட்டிலும் தொழிற்துறை வளர்ச்சியை உருவாக்கவே முடியாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. ஏகாதிபத்தியத்தியவாதிகளும், அவர்களின் தாசர்களான மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். தீவிர வலதுசாரி பிரிவினர் முதல், திருத்தல்வாத போலிக்கம்யூனிஸ்டுகள் வரை அந்நிய முதலீடுகளின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டுவருகின்றனர். பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இக்கருத்தையே ஓயாமல் பரப்பிவருகின்றன. ஆனால் சோவியத் யூனியனின் தலைவரும், தலைசிறந்த மார்க்சியவாதிகளுள் ஒருவருமான தோழர் ஸ்டாலின் சோசலிச ரசியா உள்ளிட்டு ஒடுக்கப்பட்ட மற்றும் சார்பு நாடுகளில் அந்நிய முதலீடுகளின் உதவியின்றி சுயேட்சையான தொழிற்துறை வளர்ச்சிக்கான ஒரு புதிய மாற்றுப் பாதையை முன்வைத்தார். 1925ஆம் ஆண்டு ஜூன் - 9ல் ஸ்லெர்ட்லாவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும்போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பாதையை முன்வைத்துள்ளார். இந்தப்பாதைதான் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளெல்லாம் கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டபோது, சோவியத் ரசியாவை அபரிமிதமான வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற ஒரு புதிய பாதையாகும்.

தொழிற்துறையில் மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகள் மூலதனத்தை எப்படி சேர்த்தன என்பதை வரலாற்று வழியில் தோழர் ஸ்டாலின் அதில் எடுத்துக் காட்டுகிறார். உலகத்தின் தொழிற்கூடம்என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலிருந்து உபரி மூலதனத்தைஉறிஞ்சுவதன் மூலம் வலிமை மிக்க தொழிற்துறையை கட்டி அமைத்தது. ஜெர்மனி, பிரான்ஸ் மீது போர்தொடுத்து, அந்நாட்டை தோற்கடித்து அதன் மீது அபராதம் விதித்து பெரும் தொகையை திரட்டியது. அதைக் கொண்டு தனது நாட்டின் தொழிற்துறையில் முதலீடு செய்தது. ஜார் கால ரசியா, மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து, அடிமைத்தனமான ஒப்பந்தங்களை ஏற்று கடும் நிபந்தனைகளின் கீழ் மூலதனத்தை பெற்று தொழிற்துறை வளர்ச்சிக்கு திட்டமிட்டது. மேற்கண்ட அனைத்து வழிகளும் பின்னிப்பிணைந்த வழியில்தான் அமெரிக்கா தொழில்வள நாடாக மாறியது என்பதை தோழர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். அத்துடன் மேற்கண்ட எந்த ஒரு பாதையும் சோசலிச ரசியாவிற்கு பொருந்தாது, அந்த வழிகளை ஏற்கவும் முடியாது என்று கூறி சுயேட்சையாக உள் நாட்டிலேயே மூலதனத்தை திரட்டிக் கொள்வதற்கும், அடிமைத்தனமான நிபந்தனைகள் இன்றி அந்நிய முதலீடுகள் பெற்று தொழிற்துறை வளர்க்கவும் ஒரு புதிய பாதையை இதில் அவர் முன்வைத்துள்ளார்.

இன்று அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் அந்நிய மூலதனத்திற்கு தடைகள் அனைத்தையும் அகற்றிவிட்டது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஆசிய ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தடையின்றி நுழைவதால் அந்நாடுகளில் தொழிற் வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக தொழிற்துறை சீரழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக படிப்படியாக அந்நிய முதலீட்டிற்கான கதவை முழுவதுமாக திறந்துவிட்டதால் தொழிற்துறை உற்பத்தி மைனஸ் 2 சதவீதமாகவும், விவசாயம் கடும் வீழ்ச்சியையும் சந்திக்கிறது. அந்நிய முதலீட்டிற்கு கதவை அகலக் திறந்ததால் உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி என நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிட்டது. அந்நிய முதலீடுகள் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை. மாறாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை சீரழிப்பதோடு நாட்டின் இறையாண்மையையும் அழித்து நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக்கி வருகிறது. அந்நிய முதலீடுகள், தாராளமயக் கொள்கைகள் இந்தியா போன்ற ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளை மட்டும் சீரழிக்கவில்லை. முதலாளித்துவ மையங்களான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்கூட பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. இன்று ஏகாதிபத்திய நிதி மூலதனம் 98 சதவீதம் உற்பத்தியல்லாத ஊக வாணிபத்திலும், பங்கு சந்தை மற்றும் லேவாதேவி மூலதனமானது செயல்படுகிறது. நிதி மூலதனம் என்றாலே பிற்போக்கு அழுகல் போக்கு என்ற லெனினின் கூற்றுக்கு சான்றாகவே திகழ்கிறது. வளர்ச்சி என்பதே ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் இனி சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் நாடுகளுக்கிடையிலும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தவண்ணம் உள்ளது. காலனிய நாட்டு மக்களும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் கடுமையாக சூரையாடப்படுவதால் மீள முடியாத மிகு உற்பத்தியின் நெருக்கடியில் நிதிமூலதனம் சிக்கியுள்ள இந்தப் பொருளாதார முறைகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையை தோழர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார். ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை நோக்கிய, மானுடத்தை முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்து மீட்கவல்ல அப்பாதையை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர ஆட்சியை உருவாக்கும் திசையை நோக்கி அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டிய தருணம் இது. அதற்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும்.

வெளியீடு : சமரன் வெளியீட்டகம்

28/141, மாதவரம் நெடுஞ்சாலை,

பெரம்பூர், சென்னை – 600 011

செல்: 9941611655

samaranpublisher@gmail.com,

samaranvelietagam@yahoo.com

செப்டம்பர் 2011

விலை 10/-

Thursday, September 6, 2012

செப்டம்பர்-12, தியாகிகள் தினம்!

செப்டம்பர்-12, தியாகிகள் தினம்!

தோழர் பாலன் நினைவு நீடுழி வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

1980 செப்டம்பர் 12ல், தருமபுரியில் புரட்சித் தோழர் பாலன் படுகொலை செய்யப்பட்ட நாளை ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக கடைபிடித்து வருகிறோம். 1947 ஆகஸ்ட் போலிச் சுதந்திரத்தை எதிர்த்து உண்மைச் சுதந்திரத்தை வேண்டியும், நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதித் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த தோழர்கள் சாரு, எல்.அப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நக்சல்பாரி தோழர்களின் தியாகத்தை போற்றும் நாளே இந்நாள். அத்துடன் 1947க்கு முன்பும், பின்பும் இந்திய நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் கனவை நனவாக்க சபதம் ஏற்கும் நாளே இந்நாள்.

Tuesday, September 4, 2012

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்! தோழர் பாலன் நினைவு நீடுழி வாழ்க!

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்!

தோழர் பாலன் நினைவு நீடுழி வாழ்க!

« சில்லரை வணிகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்துவிடுவதை முறியடிப்போம்!

« விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும் குழும விவசாயம், மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் போன்ற புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!

« பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள், தொழிலாளர் உழைப்பைச் சூறையாடுவதற்குக் கட்டவிழ்த்துவிட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

« பணிநீக்கம் செய்யப்பட்ட மாருதி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப வேலைக்கு எடு!

« ஊழலை ஒழிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான நவடிக்கை மட்டும் போதாது!

நாட்டின் வளங்களை லஞ்சலாவண்யம் மூலமாகச் சூறையாடும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளைக் கைது செய்! உடைமைகளைப் பறிமுதல் செய்!

« ஈழத்தமிழின அழிப்பைத் தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!

« உலகமய, தனியார்மயக் கொள்கைகளைத் தொடரும் ஜெயாவே! ஆடு, மாடு இலவசத்தைக் காட்டி ஏமாற்றாதே! கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை இலவசமாக வழங்கு!

« புதிய காலனி ஆதிக்கத்தை முறியடிப்போம்!

« மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

« மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Thursday, August 23, 2012

“அணுசக்தி காலாவதியாகிவிட்டது”, “அணு உலையை மூடு” என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்! இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்யப் போராடுவோம்!


« அணுசக்தி காலாவதியாகிவிட்டது”, “அணு உலையை மூடுஎன்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!
« இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்யப் போராடுவோம்!
« ஏகாதிபத்தியங்கள், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளின் இலாபவெறிக்காக இயங்கும் பழைய காலாவதியான அணு உலைகளை மூடு, புதிய தொழில்நுட்ப ரீதியிலான, பாதுகாப்பான அணு உலைகளை அனுமதி!
« மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி கூடங்குளம் அணு உலையைத் திற!
« அனல், புனல், காற்று, சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட தேசிய மின்திட்டத்திற்காகப் போராடுவோம்
http://senthalamsamaran.blogspot.in/2012/09/80.htmlப்பா
23.08.2012 
8098538384
நூல் கிடைக்கும் இடங்கள்:
Samaranpublisher@gmail.com
Samaranvelietagam@yahoo.com

Sunday, August 12, 2012

ஈழத்தமிழ்த் தேசிய இன அழிப்பை தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!

ஈழத்தமிழ்த் தேசிய இன அழிப்பை தொடரும் இராஜபட்சே-மன்மோகன் கூட்டணியை முறியடிப்போம்!

« மன்மோகன் கும்பலே!

· இலங்கையுடனான இராணுவம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்துசெய்!

· தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கு!

· தமிழக மீனவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை இராணுவத்தின் மீது இராணுவ நடவடிக்கை எடு!

« கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!

« ஈழத்தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, August 4, 2012

இந்தியாவின் அனைத்துத் துறைகளையும் அமெரிக்கக் கம்பெனிகளுக்கு திறந்துவிட நிர்ப்பந்திக்கும் ஒபாமாவின் ஆணையை முறியடிப்போம்!

  • மன்மோகன் கும்பலே சில்லரை வணிகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்து விடாதே!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தேசபக்திகொண்ட ஜனநாயகவாதிகளே!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 16ஆம் தேதி இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை அமெரிக்கக் கம்பெனிகளுக்குத் திறந்துவிட வேண்டும் என்று கூறினார்வெளிப்படையாக சில்லரை வர்த்தகம் என்று கூறினாலும் பாதுகாப்புத்துறை, பென்சன் திட்டம், காப்பீட்டுத்துறைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் முழுவதுமாக திறந்துவிட வேண்டும், அதற்கானத் தடைகளை முழுவதுமாக அகற்றவேண்டும் என்பதே ஒபாமாவின் கோரிக்கையாகும்.

Thursday, June 28, 2012

நூல் மதிப்புரை: அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்

அணு ஆற்றல் வேண்டுமா வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலை இந்த புத்தகத்தினை வாசிப்பதின் மூலம் நீங்கள் அறியலாம். இன்றைய கூடன்குளம் அணு உற்பத்தி நிலையம் மக்கள் மனதில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. அணு ஆற்றல் அழிவின் சக்தி என்றும் அதை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் அணு சக்தி என்பது தவிர்க்க முடியாத சக்தி என்று கூறுவதே இந்த நூலின் சாரம்.

அணு ஆற்றலும் சமூக முன்னேற்றமும்
ஆசிரியர்: வில்லியம் பால்

சமரன் வெளியீட்டகம்
விலை: 30/-

தொடர்புக்கு: 9941611655
samaranpublisher@gmail.com,
samaranvelietagam@yahoo.com

பதிப்புரை

தோழர் வில்லியம் பால் பிரிட்டனில் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் சேர்ந்து பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டவர். 1920களில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மார்க்சிய சித்தாந்தத்தை பரப்புவதில் மிகச் சிறந்த ஆசிரியராக திகழ்ந்துள்ளார். பல்வேறு கம்யூனிச பத்திரிக்கைகளில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப்பின் வாடிக்கன் (போப்) தலைமையிலான கிறித்துவ திருச்சபையும், அமெரிக்காவின் இராணுவ விஞ்ஞானிகளும், நிதி மூலதனக் கும்பல்களும் அணுசக்திக்கு எதிராக பீதியூட்டி அணுசக்தியை ஏகபோகமாக்கிக்கொள்ள முயன்றனர். அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அது மனித சமுதாயத்திற்கு பேரழிவையே உண்டுபண்ணும், அணுசக்தியை ஆக்கசக்தியாக பயன்படுத்தவே முடியாது என்று பீதியூட்டி அணுசக்திக்கு எதிரான இயக்கத்தை தொடங்கி வைத்தனர். அணுசக்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதர்களுக்குக் கிடையாது என்று வாதிட்டனர். 1946ல் தோழர் பால் மார்க்சிய ஆசான்களின் வழிநின்று, இந்தப் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடுத்தார். அணுசக்தியை ஆக்க சக்தியாக மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த முடியும்; அணு ஆற்றலை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று உறுதியாக வாதிட்டார். வரலாற்றுப் பூர்வமாக இயற்கை ஆற்றல்களை நெருப்பு, நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அணுசக்திவரை எவ்வாறு மனிதன் அதை கட்டுக்குள் கொண்டுவந்தான் என்பதையும், அதனால் சமூகப் பொருளாதாரத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் எடுத்துரைத்துள்ளார். அணுசக்தி வரும் காலத்தில் எப்படி வளர்ச்சியடையும், அது எப்படி நவீன பொது உடமை சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக எடுத்துரைத்துள்ளார். நெருப்பு, நிலக்கரி, அணுசக்திக்கு எதிராக மேற்சொன்ன பிற்போக்கு சக்திகள் எப்படி அச்சத்தையும், பீதியையும் ஊட்டி சமூக வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டன என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர்.

தோழர் வில்லியம் பால், மார்க்சிய மூலவர்களில் ஒருவரான எங்கெல்ஸ் இயற்கை சக்திகளை மனிதன் எவ்வாறு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறான் என்பதையும்; ஏகபோக முதலாளித்துவத்தின் காலகட்டத்தில் மூலதனம் உச்சபட்ச வளர்ச்சியடைந்து எப்படி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு விலங்காக மாறிவிட்டது என்பதையும்; இனி தனியுடைமை அடிப்படையிலான, இலாப நோக்கத்தின் அடிப்படையிலான முதலாளித்துவ பொருளுற்பத்தியை தொடர முடியாது என்பதையும், உற்பத்தி சாதனங்களை அரசுடைமை ஆக்குவதன் மூலமே சமூக வளர்ச்சியடைய முடியும் என்பதையும் தனது கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ள அடிப்படையிலேயே தமது நிலைபாட்டை முன்வைத்துள்ளார். எங்கெல்ஸ் கூறுவதாவது “செயல்வன்மை வாய்ந்த சமூக சக்திகள் நாம் அவற்றைப் புரிந்து கொள்ளாமலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் இருக்கும்வரை இயற்கை சக்திகளைப் போலவே கண்மூடித்தனமாகவும் பலாத்காரமாகவும் நாசகரமாகவும் செயல்படுகின்றன. ஆனால் நாம் அவற்றைப் புரிந்துகொண்டது அவற்றின் செயலையும் திசைவழியையும் பலன்களையும் மனத்தால் பற்றிக்கொண்டதும், பிறகு அவற்றை நம் சித்தாந்தத்திற்கு கீழ்படியச் செய்து அவற்றைக் கொண்டு நமது நோக்கங்களை ஈடேற்றிக்கொள்வது முற்றிலும் நம்மையே பொறுத்ததாகும். முக்கியமாக இது பேராற்றல் கொண்ட இன்றைய உற்பத்தி சக்திகளுக்கு மிகவும் பொருந்துவதாகும்...

ஆனால் அவற்றின் தன்மை புரிந்துகொள்ளப்பட்டதும், ஒன்றுபட்டு வேலை செய்யும் உற்பத்தியாளர்களுடைய கரங்களில் ஆட்டிப்படைக்கும் பூதங்களாக ஆதிக்கம் புரியாமல் மனமுவந்து பணிபுரியும் பணியாளர்களாக அவற்றை மாற்றிவிடலாம். இந்த வேறுபாடு புயலின் போது இடியிலுள்ள மின்விசையின் அழிவு சக்திக்கும் தந்தியிலும் வோல்ட்டா மின்வில்லிலும் பணிந்து செயல்படும் மின் விசைக்கும் உள்ளது போன்றதாகும். நாசம் விளைவிக்கும் பெரும் தீயிற்கும் மனிதனுக்கு சேவைபுரியும் நெருப்புக்குமுள்ள வித்தியாசமாகும்

மேலும் ஏகபோக முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடுவது “டிரஸ்ட்டுகளின் சுதந்திரமானப் போட்டி அதற்கு நேர் முரணானதாகிறது ஏகபோகமாகிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் உறுதியான திட்டம் ஏதும் இல்லாத பொருளுற்பத்தி படையெடுத்துவரும் சோசலிச சமுதாயத்தின் உறுதிவாய்ந்த திட்டவழியிலான பொருளுற்பத்தியிடம் சரணடைகிறது. இதுவரை இன்னமும் இது முதலாளிகளுடைய ஆதாயத்துக்காகவும் அனுகூலத்துக்காகவும் ஆனதே என்பது மெய்தான். ஆனால் இந்தச் சுரண்டல் இப்படி அப்பட்டமாக இருப்பதால் இது தகர்க்கப்பட்டே ஆக வேண்டும். இலாப வெறியர்களது ஒரு சிறு கும்பல் இப்படிப் பட்டவர்த்தனமாக சமூகத்தைச் சுரண்டுவதற்கு ஏற்பாடு செய்து டிரஸ்டுகள் நடத்தும் பொருளுற்பத்தியை எந்த தேசமும் சகித்துக் கொண்டிருக்காது.

எப்படியும், டிரஸ்டுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாகிய அரசு கும்பல் பொருளுற்பத்தியின் நெறியாண்மையை ஏற்கவேண்டிவரும். அரசின் உடைமையாக மாற்றப்பட வேண்டிய இந்த அவசியம் தகவல் தொடர்புக்கும் போக்குவரத்துக்குமாகிய மாபெரும் ஏற்பாடுகளான அஞ்சல் நிலையம், தந்தி, ரயில்வே ஆகியவற்றில் எல்லாவற்றிகும் மேலாக உணரப்படுகிறது மேற்கண்ட மார்க்சிய அடிப்படைகளில் ஊன்றி நின்று தோழர் பால் இக்கட்டுரையை எழுதியுள்ளார்.

அன்றையக் காலக்கட்டத்தைவிட இன்று முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் அராஜகம் பல ஆயிரம் மடங்கு தலைவிரித்தாடுகையில்; மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு பல ஆயிரம் மடங்கு பெருகியுள்ள இன்றைய சூழலில்; மனித குலத்தின் ஆற்றல் தேவைகள் பன்மடங்கு அதிகரித்து வருகின்ற ஒரு சூழலில் இன்றும் கூட அணுசக்திக்கு எதிரான பிற்போக்கு சக்திகளின் அழிவுவாதத்தை முறியடிப்பதற்கும்; அணு ஆற்றலை விடுவித்து 100ல் 99 பேராக உள்ள பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் இந்தக் வெளியீடு பயனுள்ள பங்களிப்பை செய்யும். 1946லேயே இப்படி ஒரு போராட்டத்தை தொடங்கிவைத்த தோழர் வில்லியம் பால் போற்றுதலுக்குரியவரே. இதை நாடு தழுவிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன் உள்ள முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

Wednesday, June 20, 2012

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

சோனியா மன்மோகன் கும்பலே, பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப் பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சோனியா மன்மோகன் கும்பலின் தலைமையிலான ஜ.மு. கூட்டணியின் மத்திய ஆட்சி, கடந்த மே 24ஆம் தேதி இரவு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி வரலாறு காணாத அளவில் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. அத்துடன் டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளையும் உயர்த்த வேண்டும் என்று கூறி எறியும் நெருப்பில் எண்ணெய் வார்த்து வருகிறது. இக்கும்பல் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளில் 40 முறை பெட்ரொல் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளது.

Saturday, June 9, 2012

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப்பெறு!

சோனியா, மன்மோகன் கும்பலே!

பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பப்பெறு!

« எண்ணெய் விலையைக் குறைக்கவும் சுதந்திர வர்த்தகத்தை உருவாக்கவும் அமெரிக்காவின் புதிய காலனி ஆதிக்கத்தையும் டாலர் ஆதிக்கத்தையும் முறியடிப்போம்!

இந்திய அரசே!

« அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்துச் செய்!

« ஈரான் உள்ளிட்ட எண்ணெய்வள நாடுகளுடன் சுதந்திர ஒப்பந்தம் செய்!

« டாலருக்கு மாற்றாக ரூபாய், யூரோ நாணய அடிப்படையில் வர்த்தகம் செய்!

« பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலை நிர்ணய அதிகாரத்தை தனியாரிடமிருந்து பறித்தெடு! அரசே விலை நிர்ணயம் செய்!

« மத்திய, மாநில அரசுகளே! பெட்ரோலியப் பொருட்கள் மீது விலை என்ற பேரால் 40 சதவீதம் வரிவிதிக்கும் கொள்கையைக் கைவிடு!

« எண்ணெய், எரிவாயு வளத்தின் மீதான தனியார் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டு! அனைத்தையும் அரசுடைமையாக்கு!

« உற்பத்தி வீழ்ச்சிக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும் காரணமான உலகமயக் கொள்கைகளைக் கைவிடு!

« எண்ணெய் ஆதிக்கத்தில் அமெரிக்க ஏகபோகத்தை எதிர்க்காமல், தரகுமுதலாளித்துவ வரிக்கொள்கையை எதிர்க்காமல் விலையைக் குறை என ஆளும்வர்க்கக் கட்சிகள் போடும் கூப்பாடு மக்களை ஏமாற்றவே!

« எண்ணெய் விலையைக் குறைக்க அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் இந்திய அரசின் சரணாகதிப் பாதையையும் எதிர்த்துப் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Monday, April 30, 2012

மரணப்படுக்கையிலிருக்கும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற உலக மக்களை பலிகொடுக்கும் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராடுவோம்!


2012 - மே நாள் வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
      அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய வாதிகள், உலகமுதலாளித்துவப் பொதுநெருக்கடியின் சுமைகளை, தங்கள் நாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதும் திணிப்பதை எதிர்த்து - உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் எழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திவரும் ஒரு சூழலில் இவ்வாண்டு மேநாளை சந்திக்கிறோம்.

Friday, April 20, 2012

கொடுங்கோல் ஜெயா அரசே!

« பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!
« ஆட்சிக்கு வந்தப்பின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!
« மூடநம்பிக்கையில் வாக்களித்த மக்களே! இப்போதாவது உணர்ந்துப் போராட முன்வாருங்கள்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா அரசாங்கம் அண்மையில் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. இக்கட்டண உயர்வு மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் மீது கூடுதலாக ரூ.7,874 கோடி சுமையை சுமத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குப்பின் வெறும் ரூ.740 கோடியை மட்டும் குறைத்து கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டுக் கொடுமையோடு இந்த கட்டண உயர்வும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்துக் கட்டணத்தையும், பால் விலையையும் கடுமையாக உயர்த்தி மக்கள் மீது ரூ.11,000 கோடியை சுமத்தினார். பட்ஜெட்டில் ரூ.1,500 கோடிக்கு புதிய வரியையும் விதித்தார். இவ்வாறு தொடர்ந்து கட்டண உயர்வுகள் மற்றும் விலை உயர்வுகள் மூலம் மக்கள் மீது தாங்கமுடியாத அளவிற்கு சுமைகளைச் சுமத்தியுள்ளார் ஜெயலலிதா. இந்தச் சுமைகளைத் தாங்க முடியாமல் தமிழக மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Sunday, April 8, 2012

மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெறு!

கொடுங்கோல் ஜெயா அரசே!

மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெறு!

  • ஆட்சிக்கு வந்தபின் மக்கள் மீது ஏற்றிய சுமைகள் அனைத்தையும் இறக்கு!
  • மூட நம்பிக்கையில் வாக்களித்த மக்களே! இப்போதாவது உணர்ந்து போராட முன்வாருங்கள்!

மின்சாரக் கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி....

ஆர்ப்பாட்டம்

சென்னை, தஞ்சை, கடலூர், தருமபுரி

20.04.2012, வெள்ளி மாலை 5 மணி

Sunday, March 18, 2012

ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் சோனியா மன்மோகன் கும்பலைக் கண்டித்து

அமெரிக்காவின் “ஜெனிவா தீர்மானம்இலங்கை மீதான மேலாதிக்க நோக்கம் கொண்டதே!

« இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலை கூண்டில் ஏற்றுவோம்!

« ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சோனியா-மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளிகளே!

« அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பேரால் இராஜபட்சேவுக்கு ஆதரவு அளிப்பது சிங்களப் பேரினவாதப் பாசிசத்தையே வலுப்படுத்தும்!

« ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கும்!

« சிங்களப் பேரினவாத இராணுவப் பாசிசத்திலிருந்து ஈழத்தமிழரை விடுதலை செய்யப் போராடுவோம்!

« தமிழீழப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்றப் போராடுவோம்!

« நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போராடுவோம்!

« தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றப் போராடுவோம்!

« வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து அதை ஈழத் தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!

« சிங்களப் பேரினவாத பாசிசத்திற்கு எதிரான இலங்கை வாழ் இரு இனமக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஜனநாயகத்தை நிலைநாட்டும்!

ஆர்ப்பாட்டம்

22.03.2012 வியாழன் மாலை 4 மணி

பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

மார்ச், 2012

Thursday, March 15, 2012

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!

முல்லைப் பெரியாற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெருவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணைக்கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!

Thursday, March 1, 2012

அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கை”களே!

அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கைகளே!

« உலகமக்களுக்கு ஆபத்து அணு உலைகளால் மட்டுமல்ல! அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களால்தான் பேராபத்து!

« அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களை நிர்மூலமாக்கப் போராடுவோம்!

« அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் மின்னுற்பத்தியைப் பெருக்க அல்ல! நாட்டை அடிமைப்படுத்தவே!

« இந்திய அரசே! அமெரிக்காவுடனான அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

« பாதுகாப்பற்ற பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை மூடு! பாதுகாப்பு அம்சங்கள் உள்ள புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை அனுமதி!

« உரியபாதுகாப்பு மற்றும் இழப்பீட்டை உத்தரவாதம் செய்து கூடங்குளம் அணு உலையைத் திற!

« நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் அணுசக்தி ஒப்பந்தங்கள் செய்த காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்ப்போம்!

« ஏகாதிபத்தியங்களிடம் நிதி பெற்று இயங்கும் தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்ய மறுக்கும் புதியகாலனிய தாசன் மன்மோகன் கும்பலை எதிர்ப்போம்!

« நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அனல், புனல், காற்றாலை, அணு மின்சாரம் என அனைத்தும் தழுவிய “தேசிய மின்கொள்கை உருவாக்கப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

மார்ச் 2012

Tuesday, February 28, 2012

ஜெயாவின் இந்துத்துவப் பாசிசக் கூட்டணி, அரசுபயங்கரவாதம், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ...

ஜெயாவின் இந்துத்துவப் பாசிசக் கூட்டணி, அரசுபயங்கரவாதம், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

« சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க, ஆட்சியில் நீடிக்க ஜெயாவின் பா.ஜ.க.வுடனான இந்துத்துவப் பாசிசக் கூட்டணியை முறியடிப்போம்!

« ஊழல் வழக்குகளை முடக்க ஆச்சாரியாவை மிரட்டும் ஜெயா மீது நீதிமன்றமே நடவடிக்கை எடு!

« ஜெயா ஆட்சிக்கு எதிராக கட்சிக்குள்ளேயும் வெளியேயும் போராடுவோர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!

« சமச்சீர்க்கல்வி முடக்கம், கட்டண உயர்வுகள், மின்வெட்டு, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் உள்ளிட்ட ஜெயாவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு