Thursday, November 7, 2013
Wednesday, November 6, 2013
நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்! தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!
நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்!
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா
நகர் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது, வன்னியச் சாதி வெறியர்கள்
சாதி கலவரத்தை நடத்தி நாசப்படுத்தியது வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் ஓராண்டு
காலம் முடிவடைகிறது. கலவரம் நடந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் தமிழக அரசு
பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது முறையாக
நடக்கவுமில்லை, அம்மக்களைச் சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவுமில்லை.
சாதிக் கலவரத்தைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பேரில் ஓராண்டு
காலமாகத் தர்மபுரியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள 144-தடை சாதி வெறியர்களைக்
கட்டுப்படுத்தவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக
இயக்கங்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் அடக்குமுறைகளை ஏவி ஒரு போலீஸ்
இராஜ்ஜியமே நடந்து வருகிறது.
Monday, November 4, 2013
Tuesday, October 22, 2013
இலங்கையில் “காமன்வெல்த் மாநாடு” நடத்துவதை எதிர்த்து ...
ஏகாதிபத்தியவாதிகளே!
- இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான “காமன்வெல்த் மாநாட்டை” இலங்கையில் நடத்தாதீர்!
- இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
- தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காகப் போராடுவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல்
13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மூலம் ஜனநாயகம்
வழங்குதல் என்ற கபட நாடகத்தின் பின்னால் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடி
மறைக்கிறது.தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன் மீதான
இன அழிப்புப் போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது. வரலாறு
காணாத இராணுவ மயமாக்கலின் கீழ் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இராஜபட்சேவின் கைக்கூலி விக்னேஸ்வரன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈழத்
தமிழினத்தை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்காத, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகம் என்பதைக்
கூட ஏற்காத, காவல், நிலம் போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும்
பறிக்கப்பட்டுவிட்ட ஒரு மாகாண சபையால் எள்முனை அளவுக்குக் கூட ஈழத் தமிழ் மக்களின்
உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. மாறாக, இராஜபட்சே கும்பலின் இன அழிப்புக்கு மௌன சாட்சியாகவே வடக்கு
மாகாண ஆட்சி அமையும்.
Tuesday, September 24, 2013
இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான 13-வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
இந்திய அரசே!
ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான
13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல்
மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த்
மாநாட்டில் பங்கேற்காதே!
அன்பார்ந்த உழைக்கும்
மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!
சிங்கள இனவெறியன், இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல், இலங்கையில் போர்முடிந்து
நான்கு ஆண்டுகள் முடிந்தப் பிறகும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு
அரசியல்தீர்வு காண மறுத்துவருகிறது. ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத்
தொடர்கிறது. தற்போது திடீரென்று 13வது சட்டத்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதன்
மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, வடக்குமாகாணத் தேர்தலை நடத்தி ஜனநாயகம் வழங்குவது
என்ற பேரில் ஈழத்தமிழினத்தின் மீதான இன ஒடுக்குமுறையை மூடி மறைப்பதுடன், காமன்வெல்த் மாநாட்டை
இலங்கையில் நடத்துவதன் மூலம் தன்னை இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்தும்
தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.
அண்மையில் இலங்கைக்குச் சென்ற ஐ.நா. மனித உரிமை கமிஷ்னர் நவனீதம்
பிள்ளை, தமிழர் பகுதியில்
குவிக்கப்பட்டுள்ள இராணுவம் பற்றியும்; போர் முடிந்தப் பிறகும் கூட அங்கு ஜனநாயகத்தின் குரல்
நெறிக்கப்படுவது குறித்தும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் பத்திரிக்கையாளர் உட்பட காணமல்
போவது தொடர்வது பற்றியும்; சிங்கள இனவெறி பாசிச ஆட்சியின் கொடூரத்தையும்
வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதையெல்லாம் மூடிமறைத்து காங்கிரஸ் கட்சியும் இந்திய
அரசும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பலின் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை
மூடிமறைக்கும் கபட நாடகங்களுக்குத் துணைபோகிறது.
விரிவாக படிக்க ... http://senthalamsamaran.blogspot.in/2013/09/13.html
Monday, September 23, 2013
அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!
அனைத்துத்
துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின்
புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! தேசபக்த ஜனநாயகவாதிகளே!!
மன்மோகன், சோனியா தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 16.07.2013 அன்று அந்நிய முதலீட்டிற்கான தடைகளை முழுவதுமாக அகற்றியுள்ளது. இதன்
மூலம் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி ஆதிக்கத்திற்கு
அகலக்கதவை திறந்துவிட்டுள்ளது.
இந்திய நாட்டின்
பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இராணுவத்
தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி
வழங்கியுள்ளது. அத்துடன் காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம்
திறந்துவிட்டு அந்நிய நிறுவனங்கள் நிதித்துறையை கொள்ளையடிப்பதற்கான வாசலை அகலத்
திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே வேளாண்மைத்துறை, சில்லறை
வணிகத்தில் திறந்துவிட்டதுடன் தற்போது பொருட்கள் பரிமாற்றம், மின்பரிவர்த்தனை போன்ற அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்குத்
திறந்துவிட்டுள்ளது.
விரிவாக படிக்க.... http://senthalamsamaran.blogspot.in/2013/09/blog-post.html
Saturday, September 21, 2013
தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்! ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!!
தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்!
ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஜெயலலிதா
அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக்
கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144 தடை நியாயப்
படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக்
கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள்
மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை.
உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட
மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர
ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே
பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில்
தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.
சாதி
ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144
தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப்
பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு
தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர
வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் “ம்”
என்றால் சிறைவாசம், “ஏன்” என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு
போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.
Saturday, September 14, 2013
Saturday, September 7, 2013
Tuesday, September 3, 2013
Tuesday, August 27, 2013
செப்டம்பர் 12 தியாகிகள் தினம்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!
செப்டம்பர் 12 தியாகிகள் தினம்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!
« அந்நிய மூலதனத்திற்கு
நாட்டைத் திறந்துவிட்டு அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை
செய்யும் சோனியா-மன்மோகன் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
« இந்திய அரசே! ஈழத்
தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்கும் 13வது
சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல், மோசடிகளை
மூடி மறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
« தமிழக அரசே! ஆரம்பப்
பள்ளிகளில் ஆங்கில பயிற்றுமொழித் திணிப்பைக் கைவிடு!
« தமிழை ஆட்சிமொழி
பயிற்றுமொழி ஆக்கப் போராடுவோம்!
« அனைத்துத் தேசிய
இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
« சாதிவெறிப் பிற்போக்கு
முன்னணியை முறியடிப்போம், தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும்
ஜனநாயகவாதிகளும் ஒன்றுபடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்,
தமிழ்நாடு
Thursday, August 8, 2013
Wednesday, August 7, 2013
சாதி மறுப்பு, சுதந்திரக் காதல் திருமணங்களை ஆதரிப்போம்!
சாதி மறுப்பு, சுதந்திரக் காதல்
திருமணங்களை ஆதரிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!
பிற்படுத்தப்பட்ட சாதியான முக்குலத்தோர் சாதியைச்
சார்ந்த சரண்யா என்கிற பெண்ணும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த
இராமகிருஷ்ணன் என்கிற இளைஞரும் ஒரே இடத்தில் வேலை செய்யும்போது ஒருவரை ஒருவர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். பெற்றோரின்
அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்பி பெண்ணின் தந்தை திரு முனியாண்டி அவர்களை
அணுகினர். ஆளும் கட்சிப் பிரமுகரான அவர் இவர்களின் காதல் மணம், கலப்பு மணத்தை அங்கீகரிக்க மறுத்தார். தாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காகவே
இராமகிருஷ்ணனை காவல்நிலையத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு
விரட்டியடித்தார்.
பெற்ற மகள் சரண்யாவை வீட்டுக் காவலில் வைத்து
விருப்பமில்லாத வேறொருவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சித்திரவதை செய்தனர்.
ஆனால் 5 மாதகால வீட்டுச் சிறையை உடைத்து வெளியேறிய சரண்யா, தான்விரும்பிய இராமகிருஷ்ணனை கரம்பிடிக்க எமது அமைப்பின் உதவியை நாடினார்.
எமது அமைப்பு அவர்களிருவருக்கும் 15.07.2013 அன்று பதிவுத் திருமணம்
செய்துவைத்தது. இதனை அறிந்த சரண்யாவின் தந்தை மணமக்களுக்கும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய எமது அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் சேல்
முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Friday, July 12, 2013
Thursday, July 11, 2013
இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை!
« இளவரசனின்
மரணம் தற்கொலை அல்ல, கொலை!
« கொலையாளிகள்
மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
காதலித்துக் கலப்புமணம் புரிந்த இளவரசனின் உடல், கடந்த 4ஆம் தேதியன்று தர்மபுரியில் இரயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாகக் காவல்துறையும், ஊடகங்களும் அது தற்கொலைதான் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. ஆனால் இளவரசனின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல; அது ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று அனைவராலும் கருதப்படுகிறது.
இளவரசன் மரணம் என்பது ஒரு தனித்த சம்பவம் அல்ல. இராமதாசு, குரு போன்றோரின் தலைமையிலான பா.ம.க.வினரும், வன்னியர் சங்கக் காடையர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுத்துவரும் சாதிவெறித் தாக்குதல்களின் ஒரு பகுதியேயாகும்.
Sunday, July 7, 2013
Friday, June 7, 2013
Saturday, June 1, 2013
ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்
முன்னுரை
சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞரணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகள் - 1983ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் ஈழத்தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் தேசிய இனப் பிரச்சினைப் பற்றிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் கோட்பாடுகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கியதாகும்.
Tuesday, April 30, 2013
பேரணி முழக்கள் முழங்குவோம்!
மே நாள் வாழ்க
மக்கள்
ஜனநாயக இளைஞர்
கழகம்
வாழ்க
வாழ்க வாழ்கவே!
மார்க்சிய
லெனினிய மாவொ சிந்தனை
வெல்க
வெல்க வெல்கவே!
மே
நாள் வாழ்க மே நாள் வாழ்க
மேதினி
போற்றும் மே
நாள் வாழ்க!
சூளுரைப்போம்
சூளுரைப்போம்
மேதினத்தில்
சூளுரைப்போம்!
மேலாதிக்க
வெறிபிடித்த
அமெரிக்க
ஏகாதி பத்தியத்தின்
புதிய
காலனி ஆதிக்கத்தை
முறியடிப்போம்
முறியடிப்போம்
அமெரிக்காவின் ஆசிய பசுபிக்
நூற்றாண்டுத் திட்டத்தை
எதிர்த்திடுவோம் எதிர்த்திடுவோம்!
ஈழத்
தமிழருக்கு எதிரான
அமெரிக்க
இந்திய கூட்டுச்
சதிகளை
முறியடிப்போம் முறியடிப்போம்!
இந்திய
விரிவாதிக்க கொள்கொகளை
தேசிய
இன ஒடுக்குமுறைக் கொள்கைகளை
எதிர்த்திடுவோம் எதிர்த்திடுவோம்!
ஏகாதிபத்திய பிடியிலிருந்து
நாடுகளை விடுதலை செய்யவும்
தேசிய இனங்களின் சுயநிர்ணய
உரிமைக்காகவும் போராடுவோம்!
தாய்மொழியை தமிழ்மொழியை
ஆட்சிமொழி
ஆக்கிட பயிற்றுமொழி ஆக்கிட
போராடுவோம்
போராடுவோம்!
அனைத்து
தேசிய மொழிகளையும்
ஆட்சிமொழி
ஆக்கிடப் போராடுவோம்
தமிழக
மக்களின் நலன் காக்க
மீனவரின்
உரிமை மீட்க
கட்சத்தீவை
மீட்பதற்காக
போராடுவோம் போராடுவோம்!
பன்னாட்டு உள்நாட்டு
பகாசூர கம்பெனிகள்
கொள்ளை லாபம் அடிப்பதற்காக
தொழிலாளர்த் தோழர்களை
கொத்தடிமை களாக்குவதை
அனுமதியோம் அனுமதியோம்!
நிரந்தர பணியிட ஒழிப்பினையும்
ஒப்பந்தக் கூலி முறையினையும்
வேலை நேர அதிகரிப்பையும்
எதிர்த்து நின்று போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின்
தொழிற்சங்க ஜனநாயக
உரிமைகளுக்காகப் போராடுவோம்!
தற்கொலைக்கு விவசாயிகளை
தள்ளுகின்ற
நாசகற
புதிய
காலனிய வேளாண் கொள்கைகளை
முறியடிக்க அணிதிரள்வோம்!
போராடுவோம் போராடுவோம்
நிலச்
சீர்த்திருத்தத்திற்கு போராடுவோம்!
அந்நிய
மூலதன ஆதிக்கத்தாலும்
தொடரும்
மின் வெட்டாலும்
அழியுது
பார் நெசவும், தொழிலும்
அந்நிய
மூலதன வருகையால்
அழியுது
பார் சில்லரை வணிகம்!
காவிரி
முல்லை பெரியாற்றில்
தமிழக
உரிமை பறிபோகுது
அண்டைய
மாநிலங்களோ உரிமையை மறுக்குது
மத்திய
அரசோ பாராபட்சம் பார்க்குது
ஆற்று
நீரின் உரிமைக்காக
மத்திய
மாநில அரசுகளை
எதிர்த்துப்
போராட அணிதிரள்வோம்!
ஜெய
அரசே ஜெய அரசே
தமிழக
வறட்சித் திட்டத்திற்கு
போதுமான
நிதியினை
உடனே
ஒதுக்கு உடனே ஒதுக்கு!
சாதிவாத அரசியலை
எதிர்த்திடுவோம் எதிர்த்திடுவோம்
சாதி, தீண்டாமை கொடுமைகளை
சவக்குழிக்கு அனுப்பிடவே
போராடுவோம் போராடுவோம்!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட
தேசங்களே
ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர்
கழகம், தமிழ்நாடு
Friday, April 26, 2013
மே நாளில் சூளுரைப்போம்
மே
நாளில் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகவாதிகளே!
அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள்
ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள் உக்கிரம்
அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து
நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள் எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள்
இயக்கத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.
Wednesday, April 24, 2013
Saturday, April 20, 2013
மே நாளில் சூளூரைப்போம்!
மே நாளில் சூளூரைப்போம்!
« அமெரிக்காவின்
புதியகாலனி ஆதிக்கத்தையும் யுத்தவெறிக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
« நாடுகளின்
விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!
« அமெரிக்காவின்
‘ஆசிய பசிபிக் நூற்றாண்டுத் திட்டத்தை’ எதிர்ப்போம்!
« ஈழத்
தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!
« இந்திய
அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப்
போராடுவோம்!
« தாய்மொழி,
தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
« தமிழர்
நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!
« பன்னாட்டுக்
கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை
நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!
« தொழிலாளர்களின்
தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!
« புதியகாலனிய
வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
« சாதிவாத
அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!
« அந்நிய
மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப்
போராடுவோம்!
« தமிழகத்தின்
ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!
« தமிழகத்தை
வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!
« உலகத்
தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
« மார்க்சிய-லெனினிய-மாவோ
சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மே 1, 2013
Sunday, April 14, 2013
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழங்குவோம்!
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!
ஏகாதிபத்திய அமெரிக்காவின்
ஐ.நா….. தீர்மானம்
ஈழத்தமிழ் மக்களுக்கு
மாபெரும் துரோகம்! மாபெரும் துரோகம்!
அமெரிக்காவின் துரோகத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
இன அழிப்பு போர்க்குற்றவாளி
இராஜபட்சே மீதான
சர்வதேச விசாரணை
கோரிக்கைக்கு எதிரான
அமெரிக்க இந்திய கூட்டுச் சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
ஈழத் தமிழரின் சுய நிர்ணய
உரிமைக்கான கோரிக்கை
பேரத்திற்கான ஒன்றல்ல!
தமிழ் ஈழ தனிநாடு ஒன்றே
ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் விடுதலை அடைவதற்கான
ஒரே வழி! ஒரே வழி!
தமிழ் ஈழத் தாயகத்தை
சிங்களமய மாக்கிடவும்
இராணுவமய மாக்கிடவும்
இலங்கைக்கு இந்தியா
துணை போவதை முறியடிப்போம்!
தமிழ் ஈழ மண்ணிலிருந்து
சிங்கள இனவெறி இராணுவத்தை
வெளியேற்றப் போராடுவோம்!
ஈழத் தமிழ் மக்களையெல்லாம்
சொந்த மண்ணில் குடியமர்த்த
போராடுவோம்! போராடுவோம்!
உலக மக்கள் ஒன்றுபட்டு
போராடுவோம்! போராடுவோம்!
Subscribe to:
Posts (Atom)