அனைத்துத்
துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின்
புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! தேசபக்த ஜனநாயகவாதிகளே!!
மன்மோகன், சோனியா தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 16.07.2013 அன்று அந்நிய முதலீட்டிற்கான தடைகளை முழுவதுமாக அகற்றியுள்ளது. இதன்
மூலம் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி ஆதிக்கத்திற்கு
அகலக்கதவை திறந்துவிட்டுள்ளது.
இந்திய நாட்டின்
பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இராணுவத்
தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி
வழங்கியுள்ளது. அத்துடன் காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம்
திறந்துவிட்டு அந்நிய நிறுவனங்கள் நிதித்துறையை கொள்ளையடிப்பதற்கான வாசலை அகலத்
திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே வேளாண்மைத்துறை, சில்லறை
வணிகத்தில் திறந்துவிட்டதுடன் தற்போது பொருட்கள் பரிமாற்றம், மின்பரிவர்த்தனை போன்ற அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்குத்
திறந்துவிட்டுள்ளது.
விரிவாக படிக்க.... http://senthalamsamaran.blogspot.in/2013/09/blog-post.html
பாவம் விட்டுவிடுங்கள் அடிமைகள்தானே!
ReplyDeleteதரகு வர்க்க முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகள்,அடிவருடிகள்,புதுக்காலனிய அடிமைகள்,இவர்களால் என்ன செய்யமுடியும்.நாம் ஏகாதிபத்தியங்களை விடக்கூடாது.எப்படி அவர்களை எதிர்ப்பது,மோதி அழிப்பது என்பதுதான் புரியவில்லை!நீங்களாவது சொல்லுங்களேன்.