Saturday, September 26, 2015

ஈழத் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், இந்தியாவின் விரிவாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!


ஈழத் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையை மறுத்து, கொலைகாரர்களையே நீதிபதிகளாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும், இந்தியாவின் விரிவாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!
*  சர்வதேச விசாரணையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று கூறும் சிங்கள இனவெறி இலங்கை அரசை எதிர்ப்போம்!
*  சர்வதேச விசாரணை கோரும் தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்தை ஏற்க மறுத்து சிங்கள இனவெறி அரசுக்குத் துணைபோகும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!
*  தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காக அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2015

Thursday, September 24, 2015

ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தினரின் சாதி, தீண்டாமை வன்கொடுமை கொள்கைகளின் விளைவே டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு!


ஆட்சியாளர்கள் அதிகார வர்க்கத்தினரின் சாதி, தீண்டாமை வன்கொடுமை கொள்கைகளின் விளைவே டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு!
*  ஜெயா அரசே!
·         விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு காரணமான எஸ்.பி. செந்தில்குமாரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
·         கோகுல்ராஜை கொலைசெய்த யுவராஜை உடனே கைது செய்!
*  சாதி, தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராகவும், சாதிவெறியர்களுக்கு எதிராகவும் அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
* மத, சாதி சார்பற்ற மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செப்டம்பர் 2015

Wednesday, September 9, 2015

செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!


செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!

அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும்
இந்துத்துவப் பாசிச மோடி, ஜெயா ஆட்சியில்
நாடு ஓட்டாண்டி ஆவதும்,
மத, சாதிவெறிக் கலவரங்கள்
தலைவிரித்தாடுவதுமான அவலங்கள்!

அவலங்களை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட
தரகு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ
நாடாளுமன்றவாத எதிர்க் கட்சிகள்
மாற்றுத் திட்டத்துடன்
ஒன்றுபட முடியாத கையாலாகாத்தனம்!

அவலநிலையைப் போக்க
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தும்,
மத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்தும்
அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து
மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

       செப்டம்பர் 12, நக்சல்பாரிப் புரட்சித் தோழர் பாலன், அன்றைய பாசிச எம்.ஜி.ஆர். ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட நாள். அந்நாளை, தோழர்கள் சாரு மஜூம்தார், எல்.அப்பு போன்ற தலைவர்கள் உள்ளிட்டு இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகப் போராடி உயிர் நீத்த அனைத்து புரட்சித் தியாகிகளின் நினைவைப் போற்றும் நாளாகவும், அவர்களின் கனவை நனவாக்க உறுதி ஏற்கும் நாளாகவும் கடைப்பிடித்து வருகிறோம்.

இந்துத்துவப் பாசிச பா.ஜ.க. மோடி தலைமையிலான மத்திய ஆட்சியும், ஜெயலலிதா தலைமையிலான மாநில ஆட்சியும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் கொள்கைகளையும், நாட்டை அமெரிக்காவின் புதிய காலனிய சுரண்டல் களமாக மாற்றுகின்ற உலகமய, தனியார்மயக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. “வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பேரால் அமல்படுத்தப்படும் இத்தகைய தேசத்துரோகக் கொள்கைகள் உலக முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகின்றன. புதியகாலனிய தாராளக் கொள்கைகளால் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை, மதவெறி, சாதிவெறிக் கலவரங்கள் என வரலாறு காணாத அவலங்கள் தலைவிரித்தாடுகின்றன. இவ்வாறு மோடி ஆட்சியில் மதவாத, சாதிவாதப் பாசிசம் தலைவிரித்தாடுகிறது.

Sunday, August 16, 2015

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!


பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த கார்ப்பரேட் நலன்களுக்கான “நிலம் கையகப்படுத்தும் சட்டம்-2013” சட்டத்தைத் திருத்தி, அதைவிட ஒரு கொடிய சட்டத்தை நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி யுள்ளது. ஆனால் அச்சட்டத்திற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. எப்படியாவது அச்சட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என மோடி கும்பல் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.

மன்மோகன் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த சட்டமானாலும் அல்லது தற்போது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டமானாலும் இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்கள் “பொதுநலன் என்ற பேரில் இந்திய நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகக் கொண்டு வந்த “1894-நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்ற காட்டு மிராண்டிச் சட்டத்தின் தொடர்ச்சியே யாகும். அச்சட்டத்தின்படி அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால் உடனே நிலம் கையகப்படுத்தப்படும். அரசு கொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால்  மட்டும்தான் நீதிமன்றத்திற்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே ஒழிய, நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இச்சட்டம் காலனிய ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்தது.

Wednesday, August 12, 2015

ஜெயலலிதா ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்களும், கலவரங்களும் தொடர்கின்றன!


ஜெயலலிதா ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறி தாக்குதல்களும், கலவரங்களும் தொடர்கின்றன!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

மேல்சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தருமபுரி இளவரசனை அடுத்து சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர், பறையர் சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் வேளாள கவுண்ட சாதிப்பெண்ணை காதலித்ததற்காக தலைத்துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு இரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டுள்ளார். கோகுல்ராஜ் கொலையை தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற சாதிய அமைப்பின் தலைவர் யுவராஜ் கும்பல்தான் செய்துள்ளது. இவர் ‘காதலை பிரிப்போர்’ சங்கம் அமைத்து காதலர்களை பிரிப்பதையும் அவர்களைத் தாக்குவதையும் ஒரு வேலையாகக் கொண்டு செயல்படுவதாக அவரின் கூட்டாளிகள் 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அடுத்து, கோகுல்ராஜ் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சி விலகும் முன்பே சேலம் வாழப்பாடி அருகில் உள்ள சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வன்னிய சாதியைச் சேர்ந்த பெண்ணை சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதால், சோமம்பட்டி தலித் மக்களின் வீடுகளுக்கு வன்னிய சாதிவெறியர்கள் தீவைத்து கொளுத்தி சாதிக் கலவரத்தை நடத்தி முடித்தனர். மேலும் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் செந்தில் காதலித்தார் என்பதற்காக ஒரு கை, ஒரு கால் வெட்டப்பட்டு இரயில் தண்டவாளத்தில் போடப்பட்டபிறகு தப்பியுள்ளார்.

Saturday, July 11, 2015

இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய களமாக மாற்றுவதை எதிர்த்து அணிதிரள்வோம்!



இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி
நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய களமாக மாற்றுவதை எதிர்த்து அணிதிரள்வோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

நரேந்திரமோடி தலைமையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந் ததை பெரும் சாதனையாக அக்கட்சி நாடு முழுவதும் கொண்டாடு கிறது. ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் கடைப்பிடித்த நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க ஆதரவு மற்றும் புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளைத்தான் மூர்க்கத் தனமாக அமல்படுத்தி வருகிறது. அது மென்மேலும் நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை தீவிரப் படுத்தியே வருகிறது. “நல்ல காலம் வருகிறது”, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு, ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறுதிகளெல்லாம் பகற் கனவாய் போய்விட்டன. “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்கில் இந்தியா”, “மேக் இன் இந்தியா” என்ற பேரில் நாடு அந்நிய மூலதனத்தின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் புதிய காலனிய களமாக மாற்றப்படுகிறது. அந்நிய மூலதனத்தை ஈர்த்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பது என்ற கனவு கலைந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் பேரழிவை நோக்கிப் பயணிக்கிறது. பங்குச் சந்தை வேகமாக சரிந்துகொண்டு வருகிறது. ரூபாயின் மதிப்பும் அதலபாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைகிறது. மோடியை நம்பிய கார்ப்பரட்டுகளே “நல்ல காலம் வருமா” என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர். மோடி ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்குச் சேவை செய்வது, புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தி நாட்டை அமெரிக் காவின் புதிய காலனியாக மாற்றுவது, இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டியமைத்து இந்திய அரசை பாசிச மயமாக்குவது ஆகிய மூன்று பேரபாயத்தில் நாட்டை நிறுத்தியுள்ளது.

Thursday, June 4, 2015

ம.ஜ.இ.க. நடத்தும் சென்னை ஐ.ஐ.டி. முன் ஆர்ப்பாட்டம் - ஜூன் 8 – 2015, காலை 10 மணி


ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றதை எதிர்ப்போம்!



ஊழல் பெருச்சாளி ஜெயலலிதா

மீண்டும் பதவி ஏற்றதை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதலமைச்சராகவும் பதவி ஏற்றுவிட்டார். 18 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இவ்வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா, ஊழல் அரசியல்வாதிகள் அச்சப்படும் அளவுக்கு - ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினார்.

ஆனால், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமியோ, இதற்கு நேர் எதிராக ஜெயலலிதாவின் வருமானம் பற்றிய கூட்டல் கணக்கில் மோசடி செய்து ஊதிப்பெருக்கிக் காட்டி, அவருடைய வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டி, மொத்த வருமானத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பின் மதிப்பு 8.12 சதவீதம்தான் என்று கூறி, ஊழலை நியாயப்படுத்தி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் கொடுந்தீர்ப்பை வழங்கி நீதிதேவதையையே சோரம்போகச் செய்துவிட்டார்.   

Friday, May 1, 2015

மே நாள் ஊர்வல முழக்கங்கள்



மே நாளில் சூளுரைப்போம்! ஊர்வல முழக்கங்கள்


மே நாள் வாழ்க   மே நாள் வாழ்க!
மேதினிபோற்றும்    மேநாள் வாழ்க!
போர்நாள் வாழ்க   போர் நாள் வாழ்க
பாட்டாளிவர்க்க    போர்நாள் வாழ்க!!

மக்கள் ஜனநாயக   இளைஞர் கழகம்
வாழ்க  வாழ்க  வாழ்கவே!
மார்க்சிய- லெனினிய -மாவோ சிந்தனை
வெல்க வெல்க வெல்கவே!!

Thursday, April 30, 2015

மே நாள் வாழ்க! மே நாளில் நாம் சூளுரைக்க



மே நாள் வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிரையும் கொடுத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் நாளே இம் மே நாள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதுதான் இம்மேநாளின் இந்திய மக்களின் சர்வதேசிய, தேசிய கடமையாகும்.

சரிந்துவரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின், தனது தலைமையின் கீழ் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பைக் கட்டியமைக்கும் அமெரிக்காவின் கனவு தகர்ந்துவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரில் தனக்கு அடிபணியாத நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பொம்மை ஆட்சிகளை நிறுவுவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது கட்டுப்பாட்டை நிறுவுவது என்ற அமெரிக்காவின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கவில்லை.

மே நாள் பொதுக்கூட்டம் திருச்சி