Friday, May 1, 2015

மே நாள் ஊர்வல முழக்கங்கள்



மே நாளில் சூளுரைப்போம்! ஊர்வல முழக்கங்கள்


மே நாள் வாழ்க   மே நாள் வாழ்க!
மேதினிபோற்றும்    மேநாள் வாழ்க!
போர்நாள் வாழ்க   போர் நாள் வாழ்க
பாட்டாளிவர்க்க    போர்நாள் வாழ்க!!

மக்கள் ஜனநாயக   இளைஞர் கழகம்
வாழ்க  வாழ்க  வாழ்கவே!
மார்க்சிய- லெனினிய -மாவோ சிந்தனை
வெல்க வெல்க வெல்கவே!!

ஒடுக்கப் பட்ட மக்களின்
உரிமையினை  காத்திடும்
உறுதியினைக்  கூட்டிடும்
மேதினத்தை   வாழ்த்துவோம்….!

முதலாளித்துவ     நெருக்கடியில்
மூழ்கிக்கிடக்குது    உலகம் பார்…
அமெரிக்க, ஜப்பான், ஜெர்மனியில்
ஆலைகள் மூடல்   நடக்குது பார்…
முதலாளித்துவ      நெருக்கடியை
மக்கள் மீது     சுமத்துவதை
அனுமதியோம்     அனுமதியோம்.!

உலகின்பாதி    செல்வமெல்லாம்
ஒருசதவீத   கும்பலின் கையில்
குவிந்துகிடப்பதை     பாருங்கள்…
உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே
உண்டுக்கொழுத்தவன்    மாடியிலே
கைப்பற்றுவோம்   கைப்பற்றுவோம் 
கார்ப்பரேட்சொத்துக்களைகைப்பற்றுவோம்
பறிமுதல் செய்வோம் பறிமுதல் செய்வோம்
அந்நிய மூலதனத்தை பறிமுதல் செய்வோம்!
ஏகாதிபத்திய     அமெரிக்காவின்
உலக    மேலாதிக் கத்தை
முறியடிப்போம்   முறியடிப்போம்…!
அமெரிக்க          ஏகாதிபத்தியத்தின்
ஆசிய- பசிபிக்      திட்டத்தை
முறியடிப்போம்   முறியடிப்போம்!

இந்திய அரசே!  இந்திய அரசே!
இந்துத்துவப்பாசிச  மோடி அரசே
அமெரிக்காவின்      மேலாதிக் கத்திற்கு
அடிமைசேவை   புரிகின்ற
இராணுவ    ஒப்பந்தத்தை
அணுசக்தி    ஒப்பந்தத்தை
இரத்துச் செய்      இரத்துச் செய்!

‘மேக்இன் இந்தியா’      பேராலே
அமெரிக்க    ஏகாதி பத்தியத்தின்
புதிய காலனிய   களமாக
இந்தியநாட்டை   மாற்றுகின்ற
இந்துத்துவப் பாசிச    மோடி ஆட்சியை
முறியடிப்போம்      முறியடிப்போம்

“உழைப்பே வெல்லும்”   எனச் சொல்லி
பன் னாட்டுக்    கம்பனிகள்
கொள்ளை லாபம்     ஈட்டிடவே
தொழிலாளர்களை      கொத்தடிமை ஆக்கும்
சட்டத் திருத்தங்களை    கைவிடு
கைவிடு கைவிடு   மோடி கும்பலே கைவிடு!
 
அந்நிய மூலதனக்    கும்பல்களுக்கு
நாட்டின்ஆதார    வளங்களையெல்லாம்
தாரைவார்க்கும்      சட்டங்களாம்
நிலம்கையகப்படுத்தும்    சட்டத்தை
சுரங்க ஏல     சட்டங்களை
திரும்பப் பெறு       திரும்பப் பெறு!
விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளும்
”கார்ப்பரேட் மய” விவசாயமாம்
புதியகாலனிய       வேளாண் கொள்கையை
மோடி கும்பலே     கைவிடு!

”வளர்ச்சி” என்ற    பேராலே
ஏகாதிபத்திய     நெருக்கடிகளை
மக்கள் மீது      சுமத்தாதே!
கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை
தனியார் மயம்     ஆக்குவதை
வணிக மயம்     ஆக்குவதை
முறியடிப்போம் முறியடிப்போம்!

“மக்கள் பணம்” எனச் சொல்லி
”ஆதார்” அட்டை கொண்டு வந்து
இந்திய உணவு      கழகத்திற்கும்
நியாய விலை     கடைகளைக்கும்
மூடு விழா       நடத்தத் துடிக்கும்
மோடிகும்பலின்  சதிகளையே
முறியடிப்போம் முறியடிப்போம்!

மோடி அரசே!     மோடி அரசே!
இந்துத்துவப்பாசிச    மோடி அரசே
காவிரியில்        மேகதாது
அணைக்கட்டும்    திட்டத்தை
கர்நாடக அரசின்    திட்டத்தை
தடுத்து நிறுத்து       தடுத்து நிறுத்து!!
காவிரி மேலாண்மை வாரியத்தை
உடனே அமை  உடனே அமை
மோடி அரசே   உடனே அமை!!
கட்டாய       ஆட்சி மொழியாக
இந்திதிணிப்பை எதிர்த்திடுவோம்
தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க
போராடுவோம்      போராடுவோம்

பசுவதைத்       தடைச் சட்டம்
மதமாற்றத்      தடைச் சட்டம்
இராமர்கோவில் கட்டுவோமென்ற
இந்துத்துத்துவபாசிச    சட்டங்களை
அனுமதியோம்   அனுமதியோம்
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின்
இந்து ராஜ்ஜிய கனவுகளை
தகர்த்தெறிவோம் தகர்த்தெறிவோம்!!

ஊழல் குற்றவாளி ஜெயாவின் ”பினாமி”
”ஜீரோ” பன்னீர் ஆட்சியிலே
ஊழல் ஊழல்…. ஊழல்
அனைத்துத்துறைகளிலும்    ஊழல்
கிரானைட், மணல் மாஃபியாக்களின்
பிடியினிலே    தமிழகம்
வெளியேறு     வெளியேறு
ஆட்சியை விட்டு வெளியேறு!

உலகத் தொழிலாளர்களே
ஒடுக்கப்பட்ட தேசங்களே
ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்
ஏகாதிபத்திய வாதிகளை
சவக்குழிக்கு அனுப்பிடுவோம்
 மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.
01-05-2015


No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.