Thursday, March 23, 2017

மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!

மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள இவ்வாண்டுக்கான (2017-18) நிதிநிலை அறிக்கை, அந்நிய மூலதனத்திற்கு இருந்துவந்த அரைகுறை தடைகள் முழுவதையும் அகற்றி, நாட்டை ஏகாதிபத்திய புதியகாலனியத்திற்கு முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. மறுபுறம் ஐந்து மாகாணத் தேர்தலை மனதில் கொண்டு விவசாயத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு என்ற வெற்று வார்த்தை ஜாலங்களைக் கொண்டு நெருக்கடியின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்துள்ளது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைக் கலைப்பதன் மூலம் அந்நிய முலதனத்திற்கான அனைத்துத் தடைகளையும் அகற்றுவது, அரசு-தனியார் பங்கேற்புத் (PPP) திட்டத்தின் மூலம் இரயில்வே உள்ளிட்டு அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதைத் தீவிரப்படுத்துவது; 500, 1000- உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பொருளாதாரம் என்ற பேரில் சில்லறை வர்த்தகத்தை அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவது; தொழிலாளர்களின் நலன் காக்கும் பல்வேறு சட்டங்களை ஒரே சட்டமாக்கித் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி மனித உழைப்பை மலிவான விலைக்குத் தாரைவார்ப்பதன் மூலம் மோடி கும்பல் புதிய காலனிய, புதியதாரளக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரு புதிய கட்டத்தைத் துவக்கியுள்ளது.

அந்நிய முதலீட்டுக்கான வாசலை அகலத் திறப்பது, இயற்கை மற்றும் கனிம வளங்களைப் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்குக் காணிக்கையாக்குவது, மலிவான மனித உழைப்பைத் தாரைவார்ப்பது என்ற புதிய காலனியச் சேவையை மானவெட்கமின்றி மோடி கும்பல் நியாயப்படுத்துகிறது. அந்நிய மூலதனத்தைச் சார்ந்த, ஏற்றுமதியைச் சார்ந்த உலகமயக் கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று குதர்க்கம் பேசுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன? எத்தகைய சர்வதேச சூழலில் இத்தகைய வாதத்தை மோடி கும்பல் முன்வைக்கிறது?

“கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை எடப்பாடி ஆட்சியை தூக்கியெறிவோம்!

“கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை எடப்பாடி ஆட்சியை தூக்கியெறிவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பின்பு, கிரிமினல் மாஃபியா சசிகலா கும்பல் சதித்திட்டம் தீட்டி அதிமுக கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவர் மீண்டும் இணைந்து 5 ஆண்டுகள் ஆனபின்புதான் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வரமுடியும், கட்சியின் பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அதிமுகவின் 20(5) அமைப்புச் சட்டவிதிகளை மீறி சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார். அடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க வைத்தார். தற்காலிக முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கினார். உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை நிச்சயம் என்று தெரிந்த பிறகும் எப்படியும் முதலமைச்சராகி விடவேண்டும் என்ற வெறியில் கவர்னரை நிர்ப்பந்தித்தார். உச்ச நீதிமன்றம் சசிகலாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்தவுடன், தனது எடுபிடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமனம் செய்து ஒரு பொம்மை ஆட்சியை தமிழக மக்கள் மீது திணித்துள்ளார். அதிமுக - பன்னீர் அணி, சசி அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அதிமுக-வினரும், தமிழக மக்களும் சசிகலாவின் இந்த சதிகளுக்கு கடும் எதிர்ப்புகளைக் காட்டிவருகின்றனர். இது தமிழகத்தில் ஒரு கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்துள்ளது.

Thursday, March 16, 2017

மகத்தான நவம்பர் சோசலிசப் புரட்சி நூற்றாண்டு நினைவாக ...

 மகத்தான நவம்பர் சோசலிசப் புரட்சி நூற்றாண்டு நினைவாக… 

சித்திரச் சோலைகளே ...

சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

சமரன் வெளியீட்டகம் - புதுமை பதிப்பகம் இணைந்து நடத்தும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடக்க விழா! நூல்கள் அறிமுகம்


Monday, March 6, 2017

மீத்தேன் திட்டத்தை முறியடித்தோம்! ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியையும் முறியடிப்போம்!


மீத்தேன் திட்டத்தை முறியடித்தோம்! ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியையும் முறியடிப்போம்!
ê  நீர், நிலம், உள்ளிட்ட கனிம வளங்கள், மூலப் பொருட்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதை அனுமதியோம்!
ê  மூல வளங்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதால் தொழில் வளர்ச்சியடையாது!
ê  மக்கள் ஜனநாயக அரசின் கீழ் பொதுத்துறையை கட்டி அமைப்பதே வளர்ச்சிக்கு வழி!
ê  நாட்டில் தொழில் வளர்ச்சி பெருக, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ம.ஜ.இ.க. தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்