Thursday, March 16, 2017

மகத்தான நவம்பர் சோசலிசப் புரட்சி நூற்றாண்டு நினைவாக ...

 மகத்தான நவம்பர் சோசலிசப் புரட்சி நூற்றாண்டு நினைவாக… 

சித்திரச் சோலைகளே ...

சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே


நித்தம் திருத்திய நேர்மையினால்
மிகு நெல்விளை நன்னிலமே!
உனக்கெத்தனை மாந்தர்கள்
நெற்றி வியர்வை இறைத்தனர் காண்கிலமே

தாமரை பூத்த தடாகங்களே!
உமைத்தந்த அக்காலத்திலே
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!

மாமிகு பாதைகளே!
உமை இப்பெரு வையமெலாம் வகுத்தார்
அவர் ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே!
உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ?
நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

கீர்த்திகொள் போகப்பொருட்புவியே!
உன்றன் கீழிருக்கும் கடைக்கால்
எங்கள் சீர்த்தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே!
உம்மைச்சாரும் புவிப்பொருள் தந்ததெவை?
தொழிலாளார் தடக்கைகளே! தாரணியே!
தொழிலாளர் உழைப்புக்குச்சாட்சியும் நீயன்றோ?
பசி தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே
சிங்க ஏறுகள் ஏங்கிடுமோ?
இனிப்புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே
பெரும் புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார்
இனிக்கெஞ்சும் உத்தேசமில்லை
சொந்த வலிவுடையார் இன்ப வாழ்வுடையார்
இந்த வார்த்தைக்கு மோசமில்லை
 பாவேந்தர் பாரதிதாசன்


 சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
பாவேந்தர் பாரதிதாசன்

 சர்வதேசிய கீதம்

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதரே
பாரில் கடையரே எழுங்கள் வீறு கொண்டு தோழரே
கொட்டு முரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புதுவுலக வாழ்வதில் திளைத்திட

பண்டைய பழக்கமென்னும் சங்கிலியறுந்தது
பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது
இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்

முற்றிலும் தெளிந்த முடிவான போரிதாகுமே
முகமலர்ச்சியோடு உயிர்த் தியாகம் செய்ய நில்லுமே
பற்றுக் கொண்ட மனிதசாதி யாவும் ஒன்ற தாகுமே
படிமிசைப் பிரிந்த தேச பாஷையும் ஓர் ஐக்கியம்

பாரதோ மமதையின் சிகரத்திறு மாந்துமே
பார்க்கிறான் சுரங்க, மில், நிலத்தின் முதலாளியே
கூறிடில் அன்னார் சரித்திரத்திலொன்று கண்டதே
கொடுமை செய்து உழைப்பின் பலனை கொள்ளை கொண்டு நின்றதே

மக்களின் உழைப்பெல்லாம் மறைத்து வைத்து ஒரு சிலர்
பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்ற தறிகிவீர்
இக்கணம் அதைத் திரும்ப கேட்பதென்ன குற்றமோ
இல்லை நாம் நமக்குறிய பங்கைக் காட்டி கேட்கின்றோம்
தொன்று தொட்டுழைத்த விவசாயி தொழிலாளி நாம்
தோழராயினோம் உழைப்போர் யாவரேனும் ஓர்குலம்
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்கு சொல்லலாம்
உழைப்பவர் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெலாம்

வேலை செய்ய கூலியுண்டு வீணர்கட்கிங்கிடமில்லை
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங்கிடமில்லை
நாளை எண்ணி வட்டி சேர்க்கும் யமலிகட்கிங்கிடமில்லை
நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை

பாடுபட்டு உழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளிதில்
காடுவெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குமுண்டாக்குவோம்

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.