Thursday, December 4, 2014

சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே! தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!


சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே!
தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சார்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், புரசாத்ம் ,லாங்லெட் ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்கள் மூன்று பேரை சேர்த்து ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி பொய்வழக்கு புனைந்து, இலங்கை கடற்படையினர் கைது செய்து, 2011ஆம் ஆண்டு சிறையிலடைத்தனர். மூன்று ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி எட்டு தமிழ் மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிம்னறம் உ த்தரவிட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கின.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை முற்றிலும் இரத்துச் செய்து அவர்களை உயிருடன் மீட்டுத்தர வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு இலங்கை அரசு வசமுள்ள 79 விசைப் படகுகள், அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் மீட்டுத்தர வேண்உம் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்களின் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. 5 பேர் தூக்கை இரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.


தற்போது தமிழ் மக்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க 5 தமிழக மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய இசைவு தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை இராஜபட்சே கும்பல் கசியவிட்டுள்ளது. இது தமிழ் மக்களின் போராட்டத்தை திசைதிருப்பும் ஒரு சதிச் செயலாகும். அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும்வரை, எட்டு தமிழர்களும் விடுவிக்கப்படாதவரை தமிழ் மக்களின் போராட்டம் தொடரவேண்டும். எட்டுத் தமிழர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்ற நிபந்தனை அடிப்படையில் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அவ்வாறின்றி ஈழத்தமிழ் மக்களின் ஆதரவாளர்கள் அவசரப்பட்டு போராட்டத்தை கைவிட்டிருக்கக் கூடாது. எனவே இராஜபட்சே அரசின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வரும்வரை – எட்டுத் தமிழர்களின் விடுதலையும் உத்திரவாதம் செய்யப்படுவரை போராட்டத்தை தொடவதுதான் நியாயமானதாகும். எனவே இந்தப் போராட்டத்தை தொடவது அவசியமாகும். 

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமையை மறுத்து – இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உண்மையான காரணம் என்ன? சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் ஈழத்தமிழின அழிப்பை தொடர்வதுதான் உண்மையான காரணமாகும். அத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாத வரை தமிழக மீனவர்களின் பிரச்சினைகளும் தீரப்போவதில்லை.

ஈழத் தமிழின அழிப்பு தொடர்கிறது

பயங்கரவாதத்தை ஒழித்த பின்பே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறி இறுதி யுத்தத்தில் ஈழத்தமிழர்கள் ஒரு லட்சம் பேரை சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் கொன்றொழித்தது. விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டோம், யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்து 5 ஆண்டுகள் கழிந்த பின்பும் இராஜபட்சே கும்பல் எந்தவிதமான அரசியல் தீர்வையும் வழங்கத் தயாரில்லை. இந்திய இலங்கை துரோக ஒப்பந்தத்தின் படியான 13வது அரசியல் சட்டத்திருத்தத்தையும் அமல்படுத்த மறுத்துவிட்டது. வடக்குமாகாண அதிகாரத்தை ஆளுனரே தன்கையில் எடுத்துக் கொண்டுவிட்டார். மாகாண அரசாங்கம் வெறும் பொம்மை அரசாங்கமாக மாற்றப்பட்டுள்ளது. மாறாக சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் இன அழிப்பை வேறுவிதத்தில் தொடர்கிறது.

“புலி வரப்போகிறது” என்று அச்சமூட்டி தமிழர் பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்குமேல் இராணுவம் நிறுத்தபப்ட்டுள்ளது. தமிழர் பகுதி இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மிக மோசமாக உள்ளது. தமிழர்களின் நிலங்களை இராணுவத்தினர் கைப்பற்றி, அதில் பயிரிட்டு தமிழர்களுக்கே விற்கின்றனர். தமிழர்களின் குடியிருப்புகள், கல்லூரிகள், கோயில்களை அழித்து பொழுதுபோக்கு இடங்களாகவும், கோல்ப் விளையாட்டு மைதானங்களாகவும், நீச்சல் குலங்களாகவும் மாற்றப்படுகின்றன.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டு சிங்களர்கள் குடியேற்றப்படுகின்றனர். அண்மைக்காலங்களில் 92 தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயரை சூட்டியுள்ளனர். இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுவரும் வீடுகள் இராணுவத்தினருக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இராணுவத்தினருக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையம் சிங்களர்களின் காலனியாகிவிட்டது. ஈழத்தமிழர்கள் உண்ண உணவின்றியும் உடுக்க உடையின்றியும், வாழ வழியின்றியும் உள்ளனர். தமிழர்களின் சமூகக் கலாச்சாரங்கள் சீரழிவுக்கு உள்ளாகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் புலிகளுடன் தொடர்பு என்று இராணுவம் சித்தரவதை செய்கிறது. இவ்வாறு சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் ஈழத்தமிழினத்தை அழித்துவருகிறது.

இராஜபட்சே கும்பலின் இன அழிப்புக்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் எதிர்பு வலுக்கின்றன. ஐ.நா. மனித உரிமை அமைப்பு இன அழிப்புப் போரின் போது இலங்கை இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்களுக்கான விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளது. போர்க்குற்றம் என்ற வாள் இராஜபட்சே தலையில் தொங்கிக்கொண்டுள்ளது. மேலும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் விடுதலைப் புலிகல் அமைப்பு மீதான தடையை நீக்கி அந்த இயக்கம் விடுதலைப் போராட்ட இயக்கம் என அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பலுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்கள் பெருகி வருகின்றன. இத்தகைய சூழலில்தான் சிங்கள இனவெறி இலங்கை அரசின் சட்டத்திட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு மூன்றாவது முறையாக முடிசூட்டிக்கொள்ள இராஜபட்சே கும்பல் தேர்தலை சந்திக்கிறது. இலங்கையில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை கட்டியமைத்துள்ளது. 

இந்தச் சூழ்நிலைமைகளில்தான் அண்மையில் இந்தியா வந்திருந்த வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்று அபயக் குரல் எழுப்பியுள்ளார். இலங்கையில் 13வது சட்டத்திருத்தம் மேலும் திருத்தி அமைக்கப்பட்டாலும் அது நன்மைபயக்காது. தமிழர்களின் தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அந்நிய தலையீடு இன்றி அத்தகைய சட்டங்களை மாற்ற முடியாது. இதற்கு மோடி அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மோடி கும்பலோ சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

ஈழத்தமிழின அழிப்புக்கு துணைபோகும் மோடி கும்பல் 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையில் கவுரமான அரசியல் தீர்வு என்றும் மோடி கும்பல் சவடால் அடித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை மீதான மேலாதிக்க நலன்களிலிருந்து சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமான பகுதி இல்லை என்றும், கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்களுக்கு பாரம்பர்யமான மீன்பிடிப்பு உரிமையும் இல்லை என்றும் கூறி தமிழக மீனவர்களின் முதுகில் குத்தியது. அத்துடன் இராஜபட்சே கும்பலின் ஈழத்தமிழின அழிப்புக்குத் துணைபோகிறது. ஈழத் தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது. 

அண்மையில் புதுதில்லியில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லியும், இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளரும் இராஜபட்சேயின் தம்பியுமான கோத்தபய இராஜபட்சேவும் இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தினர். சிங்கள இனவெறி இரானுவத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு பாதுகாப்புத்துறை சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி, ஆயுதம், பயிற்சி ஆகியவற்றை இலங்கை அரசுக்கு இந்தியா வழங்குவதை உறுதி செய்தது. சிங்கள உயர் இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் இராணுவ கல்லூரிகளில் படிக்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. மீன்வர் பிரச்சினை, கடற்படை ரோந்து பணி ஒத்துழைப்பு என இருநாட்டு இராணுவ கூட்டு நடவடிக்கை பற்றியும் முடிவுசெய்துள்ளது. இலங்கையில் சீனாவின் பிடியை அகற்றுவது என்று கூறி சிங்கள இனவெறி இராஜபட்செ கும்பலுக்கு பக்கபலமாக மோடி ஆட்சி செயல்படுகிறது. இவ்வாறு மோடி ஆட்சி ஈழத்தமிழின அழிப்பை தொடரும் சிங்கள இனவெறியன் இராஜபட்சே அரசுக்கு செய்துவ் அரும் அனைத்து உதவிகளையும் கைவிடவேண்டும். இலங்கை அரசுடன் இந்தியா செய்துகொண்டுள்ள அரசியல் பொருளாதார இராணுவ உடன்படிக்கைகள் அனைத்தையும் கைவிடவேண்டும்.

ஆனால் மோடி கும்பலோ, “இலங்கை அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க வேண்டும், இராஜ்பட்சே போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும்” என்ற தமிழர்களின் கோரிக்கையை உதாசினப்படுத்திவிட்டு, சிங்கள இனவெறியின் தந்தையான அனாகரிக தர்மபாலாவுக்கு தபால்தலை வெளியிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுக்கிறது. அத்துடன் பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சாமி போர்க்குற்றவாளி இராஜபட்சேவுக்கு “பாரத ரத்னா” பட்டம் வழங்கவேண்டும் என்று கூறுவது தமிழ் மக்களின் கோபங்களையும், வேதனைகளையும் கிளறிவிடுகிறது. ஒரு புறம் இலங்கை இனவெறி அரசுக்கு ஆதரவும் பாராட்டும் தெரிவிக்கும் மோடி ஆட்சி மறுபுறம் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்று கூறுகிறது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

அண்மையில் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்தது தவறு என்றும், விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஒரு விடுதலை இயக்கம் என்று கூறி தடையை அகற்றியுள்ளது. ஆனால் இந்திய அரசு “விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டையும் சேர்ந்த அகண்ட ஈழம் அமைப்பதற்காக போராடுகிறது என்றும், இந்திய அரசியல் தலைவர்கலின் உயிருக்கு போராடுகிறது என்றும், இந்திய அரசியல் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்” என்றும் பொய்யானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தடையை நீடிக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இத்தடை மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் உச்சமாகவே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்ற இனக் கொலை போரை “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று நியாயப்படுத்தப்பட்டது.

போரிட்ட ஒரு பகுதியினருக்கு எதிராக தடைவிதித்து இனப்படுகொலைக்குத் துணைபோன அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இந்தியா போன்ற நாடுகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட நாடுகளேயாகும். அவைகளும் போர்க்குற்றத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். இன்று ஐரோப்பிய யூனியனின் இந்தத் தீர்ப்பை பின்பற்றி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும் என்று தமிழக மக்கள் போராடுவது ஒடுக்கப்பட்ட இனத்திற்கு ஆதரவான நியாயமான கோரிக்கையாகும்.
எனவே எட்டு தமிழர்களின் தூக்குத் தண்டனையை எதிர்த்தும் தமிழக மீனவர்களின் கச்சத்தீவில் மீன்பிடிப்பு உரிமையை மீட்பதற்கும், ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் போராட அனைத்து உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.

மோடி அரசே!
  • தூக்குத் தண்டனையிலிருந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடு!
  • சிங்கள இனவெறி இலங்கை அரசுடனான அரசியல், பொருளாதார, இராணுவ உறவுகளைத் துண்டித்துக்கொள்!
  • விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
  • ஈழத் தமிழின அழிப்பைத் தொடர்வதற்கான இராஜபட்சே மோடி கும்பலின் கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
நவம்பர் 2014

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.