Sunday, February 25, 2018
Saturday, February 3, 2018
தமிழக அரசே! பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!
தமிழக அரசே! பேருந்துக்
கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
“கிரிமினல் மாஃபியா ஜெயா”வின் சிஷ்ய கோடிகள் எடப்பாடி-பன்னீர் ஆட்சி பேருந்துக் கட்டணத்தை
இரண்டு மடங்கு உயர்த்தி ஏழை எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. அரசுப்
பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாத சம்பளத்தில் 25 சதவீதத்தை பேருந்துக் கட்டணத்திற்கு
செலவழிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் விலை உயர்வுகளால் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள மக்கள் மீது பேரிடியாக
இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு இறங்கியுள்ளது.
தற்போதைய
இந்தக் கட்டண உயர்வுமட்டுமல்ல, எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்கவும், டீசல்
விலை உயர்வு அல்லது பிற காரணங்களால் பேருந்துக் கட்டணங்களை ஆண்டுதோறும் அல்லது தேவை
ஏற்படும்போதெல்லாம் அரசாங்கத்தைக் கேட்காமல் அதிகாரிகளே உயர்த்திக் கொள்ளலாம் என்ற
துரோகத்தையும் துவக்கி வைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பொம்மைகளாக்கி
கட்டணங்களை உயர்த்தும் அதிகாரத்தை அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைத்துவிட்டது. நித்தம்நித்தம்
கட்டண உயர்வு என்ற அதிர்ச்சியில் மக்களைத் தள்ளியுள்ளது. இந்த அநியாய பேருந்துக் கட்டண
உயர்வுக்கு எதிரான மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்துக்
கிளம்பியுள்ளன.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!!
தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான உயர்சாதி வெறியர்களின் தாக்குதல்களுக்கு
எதிராக அணிதிரள்வோம்!!
தமிழக அரசே! உயர்சாதி வெறியர்களின் மீது நடவடிக்கை எடு!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகவாதிகளே!!
தருமபுரியில்
பா.ம.க மற்றும் வன்னிய சாதி அமைப்புகள் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்தை நடத்தத் திட்டமிட்டு
வருகின்றன. நல்லம்பள்ளி வன்னியர் சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியங்கா, தாழ்த்தப்பட்ட
சாதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ராஜ்குமாரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து
வந்தார். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பவே வீட்டை விட்டு வெளியேறி ராஜ்குமாரை சாதி மறுப்பு
காதல் திருமணம் செய்து கொண்டார்.
சாதிக் கலவரத்தைத் தூண்டும் வன்னிய
சாதி அமைப்புகள்
உடனடியாக
வன்னிய சாதியைச் சேர்ந்த 300 பேர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நல்லம்பள்ளி சந்தையின்போது
சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டினர். பிரியங்காவை ராஜ்குமார் கடத்திவிட்டதாகவும், உடனடியாக
பிரியங்காவை ஒப்படைக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
அத்துடன் பிரியங்காவை ஒப்படைக்காவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவோம்
என மிரட்டல் விடுத்தனர். அன்று இரவே சாதி வெறியர்கள் 6-பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும்
பகுதியில் நுழைந்தனர். அதில் மூன்று பேர் ராஜ்குமார் வீட்டையும், வாகனங்களையும் அடித்து
நொறுக்கியதுடன் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திருப்பித்
தாக்கவே ஓடிவிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)