வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின்
மறுவாழ்வுக்காகப் போராடுவோம்!
- இந்திய அரசே! தமிழக வெள்ளப் பேரிடரை தேசியப் பேரிடராக அறிவி!
- அடையாறு,கூவம்,கொசஸ்தலை ஆறுகளின் வெள்ள நீர் வடிகால் வாய்கால்கள் திட்டங்களை உடனே செயல்படுத்து!
- வெள்ளப் பேரிடரிலிருந்து மீள ரியல் எஸ்டேட்,மணல்,கிரானைட்,கல்விக் கொள்ளையர்களின் ஆறு,ஏரி,குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்று!தூர்வாரி மராமத்துப் பணிகளை நிறைவேற்று!
- வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு வாழ்தாரத்தை உத்திரவாதம் செய்யும் விதத்தில் அதே பகுதியில் வீடுகட்டிக்கொடு!
- பெரும்பான்மை வேலைவாய்ப்பை வழங்ககூடிய தேசிய முதலாளிகள், சிறு,குறுந் தொழில்களுக்கு நிவாரணம் வழங்கு! வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கு! பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கு!
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு! வட்டியில்லாக் கடன் வழங்கு! ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்!
- மக்களின் மறுவாழ்வுக்காகவும் நதிநீர் இணைப்பு திட்டத்திற்காகவும் நிதி உத்திரவாதம் செய்ய இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறை! கருப்புப் பணத்தைக் கைப்பற்று!
- பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு அளித்துவரும் ஊக்கத்தொகை, வரிச் சலுகையை ரத்துச்செய்! அவர்கள் மீது வெள்ளநிவாரண வரிப்போடு!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.