நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மே நாளில் சூளுரைப்போம்!!
ê நாடு எதிர்கொண்டிருக்கும் வேலையின்மை, தொழில்துறை வீழ்ச்சி, வேளாண்மை நெருக்கடி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் உலகமய, தனியார்மய கொள்கைகளே!
ê உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் கடைப்பிடித்தது, ஆக்கிரமிப்புப் போர்களும், பாசிசமுமே!
ê பொருளாதார மீட்சிக்கும் வேலை வாய்ப்பு பெருக்கவும் வேளாண்மை நெருக்கடியிலிருந்து மீளவும், அந்நிய மூலதனத்தை சார்ந்த மோடி அரசின் “மேக் இன் இந்தியா” திட்டம் தீர்வல்ல!
ê ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இந்துத்துவ பாசிச கொள்கைகளை முறியடிக்க புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம், ஜனநாயகத்துக்காகப் போராடுவோம்!
ê ஆளும் வர்க்கக் கட்சிகள், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் மூலமே நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்று உருவாக்கும் மாயையை முறியடிப்போம்!
ê அடிப்படைப் பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டு ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு முழக்கங்களை முன்நிறுத்துவது மோசடியே!
ê தமிழக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
ê உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.