இந்திய-அமெரிக்க ராணுவ
ஒப்பந்தம்
இந்தியாவை புதிய காலனியாக்கும்
முயற்சியே!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்ட
பிறகு, அமெரிக்கா தனது ராணுவக் கொள்கையின் அடிப்படையில்
எடுத்துள்ள முதல் நடவடிக்கை இந்திய-அமெரிக்க பாதுகாப்பு வரைவு ஒப்பந்தமாகும்; அதனுடைய இரண்டாவது நடவடிக்கை ஜார்ஜ்புஷ்-மன்மோகன்சிங் கூட்டறிக்கை ஆகும். அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ள விலைதான்
இந்தியாவிற்குத் தேவையான அணுசக்தி தொழில்நுட்ப தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா
அளித்துள்ள வாக்குறுதிகள். அமெரிக்கா தனது நீண்டகால யுத்ததந்திர நோக்கங்களை நிறைவேற்றிக்
கொள்வதற்காக இந்த ராணுவ ஒப்பந்தத்தை இந்தியா மீது திணித்துள்ளது. இந்திய அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் இரகசியமாக இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டதின்
மூலம் மானவெட்கமின்றி தேசத்துரோக செயலில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள
இந்த வரைவு ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிபணியச் செய்யும் ஒப்பந்தமாகும். இந்த வரைவு ஒப்பந்தம் செயல் வடிவம் பெற்றால், இந்தியா தனது அரைகுறை இறையாண்மையையும் இழந்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ்
உள்ள ஒரு நாடாக மாற்றப்பட்டுவிடும். மேலும் அது அமெரிக்காவின்
உலக மேலாதிக்கத்துக்கும் ஆசியாவில் அதன் ராணுவ யுத்ததந்திர நோக்கங்களுக்கும் சேவை செய்யக்
கூடிய ஒரு கருவியாக இந்தியாவை மாற்றிவிடும்.
விரிவாகப்படிக்க >>>>>>>
No comments:
Post a Comment
விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.