Wednesday, February 12, 2014

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய நாடாளுமன்றம்!

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய நாடாளுமன்றம்!

ê அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் புதிய காலனிய அரசியல், பொருளாதார கொள்கைகளை முறியடிப்போம்!
ê நாட்டை அரசியல் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
ê அந்நிய மூலதன ஆதிக்கத்திற்குச் சேவைசெய்யும் காங்கிரஸ் கும்பலின் பெருந்தேசியவாத, விரிவாதிக்கவாதப் பாசிசத்தை முறியடிப்போம்!
ê வளர்ச்சி என்ற பெயரால் புதிய காலனி ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் “கார்ப்பரேட் மோடி”யின் இந்துத்துவப் பாசிசத்தை முறியடிப்போம்!
ê காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியும் அந்நிய ஆதிக்கத்திற்கும் பாசிசத்திற்கும் சேவை செய்யும் “காளான்”களே!
ê பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊழலை எதிர்க்காமல் ஊழல் ஒழிப்பு நாடகமாடும் ஆம் ஆத்மியையும் தொண்டு நிறுவனங்களையும் தனிமைப்படுத்துவோம்!

êஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ பாசிச பா.ஜ.க.வுக்கு துணைபோவும் தமிழ் உணர்வாளர்களின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியை முறியடிப்போம்!
ê பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் உடைமைகளை பறிமுதல் செய்யப் போராடுவோம்!
ê வேளாண்துறையை கார்ப்பரேட் மயமாக்கி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கும் தேசவிரோதக் கொள்கைகளை முறியடிப்போம்!

  •       நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
ê நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமைக் கொடுமைகளை சவக்குழிக்கு அனுப்புவோம்!
ê தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்! தாய்த்தமிழை ஆட்சிமொழி, பயிற்று மொழியாக்கப் போராடுவோம்!
ê கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!
ê புதிய காலனியப் பொருளாதாரக் கொள்கைகளைக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!
ê மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
 மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு


1 comment:

  1. //* காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியும் அந்நிய ஆதிக்கத்திற்கும் பாசிச்சத்திற்கும் சேவை செய்யும் “காளான்”களே!// மூலத்தில் இருந்த ஒரு எழுத்துத் தவறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.(பாசிச்சத்திற்கும் ) என்பதை பாசிசத்துக்கும் எனத் திருத்திப் பிரசுரியுங்கள்.தற்செயலான ஒரு சிறு எழுத்துத் தவறு அந்தச் சொல்லை வேறொரு சொல்லாக மாற்றிவிட்டது! பாசிச் சத்து!!

    ReplyDelete

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.