ஏகாதிபத்தியவாதிகளே!
- இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான “காமன்வெல்த் மாநாட்டை” இலங்கையில் நடத்தாதீர்!
- இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
- தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காகப் போராடுவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல்
13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மூலம் ஜனநாயகம்
வழங்குதல் என்ற கபட நாடகத்தின் பின்னால் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடி
மறைக்கிறது.தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன் மீதான
இன அழிப்புப் போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது. வரலாறு
காணாத இராணுவ மயமாக்கலின் கீழ் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இராஜபட்சேவின் கைக்கூலி விக்னேஸ்வரன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈழத்
தமிழினத்தை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்காத, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகம் என்பதைக்
கூட ஏற்காத, காவல், நிலம் போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும்
பறிக்கப்பட்டுவிட்ட ஒரு மாகாண சபையால் எள்முனை அளவுக்குக் கூட ஈழத் தமிழ் மக்களின்
உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. மாறாக, இராஜபட்சே கும்பலின் இன அழிப்புக்கு மௌன சாட்சியாகவே வடக்கு
மாகாண ஆட்சி அமையும்.