Tuesday, September 24, 2013

இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான 13-வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!


இந்திய அரசே!
ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்கான
13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல்
மோசடிகளை மூடிமறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!

      சிங்கள இனவெறியன், இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல், இலங்கையில் போர்முடிந்து நான்கு ஆண்டுகள் முடிந்தப் பிறகும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண மறுத்துவருகிறது. ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறது. தற்போது திடீரென்று 13வது சட்டத்திருத்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, வடக்குமாகாணத் தேர்தலை நடத்தி ஜனநாயகம் வழங்குவது என்ற பேரில் ஈழத்தமிழினத்தின் மீதான இன ஒடுக்குமுறையை மூடி மறைப்பதுடன், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன்னை இன அழிப்புப் போர்க்குற்றத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறது.


      அண்மையில் இலங்கைக்குச் சென்ற ஐ.நா. மனித உரிமை கமிஷ்னர் நவனீதம் பிள்ளை, தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் பற்றியும்; போர் முடிந்தப் பிறகும் கூட அங்கு ஜனநாயகத்தின் குரல் நெறிக்கப்படுவது குறித்தும் ஆட்சியை எதிர்ப்பவர்கள் பத்திரிக்கையாளர் உட்பட காணமல் போவது தொடர்வது பற்றியும்; சிங்கள இனவெறி பாசிச ஆட்சியின் கொடூரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதையெல்லாம் மூடிமறைத்து காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பலின் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளை மூடிமறைக்கும் கபட நாடகங்களுக்குத் துணைபோகிறது.

விரிவாக படிக்க ... http://senthalamsamaran.blogspot.in/2013/09/13.html

Monday, September 23, 2013

அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!


அனைத்துத் துறைகளிலும் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் மன்மோகன் சோனியா கும்பலை முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தேசபக்த ஜனநாயகவாதிகளே!!

      மன்மோகன், சோனியா தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 16.07.2013 அன்று அந்நிய முதலீட்டிற்கான தடைகளை முழுவதுமாக அகற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி ஆதிக்கத்திற்கு அகலக்கதவை திறந்துவிட்டுள்ளது.


      இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தை விளைவிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் திறந்துவிட்டு அந்நிய நிறுவனங்கள் நிதித்துறையை கொள்ளையடிப்பதற்கான வாசலை அகலத் திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே வேளாண்மைத்துறை, சில்லறை வணிகத்தில் திறந்துவிட்டதுடன் தற்போது பொருட்கள் பரிமாற்றம், மின்பரிவர்த்தனை போன்ற அனைத்துத் துறைகளையும் அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.

விரிவாக படிக்க....  http://senthalamsamaran.blogspot.in/2013/09/blog-post.html

Saturday, September 21, 2013

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்! ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!!

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்!
ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

       ஜெயலலிதா அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144 தடை நியாயப் படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள் மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை. உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில் தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.

       சாதி ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144 தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் ம்என்றால் சிறைவாசம், “ஏன்என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.