Thursday, September 1, 2011

ஊழல் ஒழிப்பு மக்கள் இயக்கத்தை ஒடுக்கும் சோனியா, மன்மோகன் ஆட்சியை எதிர்ப்போம்!

 புதிய காலனிய ஆட்சிமுறையைப் பயன்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்திற்கு கொடுக்கும் விலையே ஊழல்!

 ஊழலுக்கு ஊற்றுக்கண்ணான உலகமய, தனியார்மய கொள்கைகளைக் கைவிடு!
ஊழல் செய்யும் பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

 நிதிமூலதனத்திற்கும் தரகுமூலதனத்திற்கும் சேவை செய்யும் சட்டங்களை எதிர்ப்போம்! தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப் போராடுவோம்!

 ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவாலும் ஊழலை ஒழிக்க முடியாது!

 கதர்ச் சட்டைகளின் ஊழலைக்காட்டி, காவிச்சட்டைகள் ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் நாடகங்களைக் கண்டு ஏமாறாதீர்!

 ஆளும் ‘கதரும்’ பாசிசமே! எதிர்க்கும் ‘காவி’யும் பாசிசமே!

 ஊழல் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!

 ஊழலை ஒழிக்க மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.