போர்க்குற்றவாளி இராசபட்சேவை கூண்டிலேற்று!
இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதி!
சிங்களப் பேரினவாத, புத்த மதவாத இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற முப்பதாண்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அப்போர் மூள்வதற்கு மூல காரணமான தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்கிறது. தேசிய இன ஒழிப்புப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் உலகச் சட்டங்கள் அனைத்தையும் மீறி வன்னி மக்களை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த இனப்படுகொலை பெரும் போர்க் குற்றமாகும். அது மட்டுமின்றி, போர் முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகும் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத இராசபட்சே அரசின் இன ஒழிப்பு பாசிச ஒடுக்குமுறை தொடர்கிறது.