ஜனநாயக உரிமைப் பறிப்பை எதிர்த்துத்
தொடரும்
வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும்
மக்களே, ஜனநாயகவாதிகளே!
சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தமானது வழக்கறிஞர்களின் ஜனநாயக
உரிமைகளைப் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக்குகிறது. ‘இம்’ என்றால் வனவாசம், ‘ஏன்’
என்றால் சிறைவாசம் என வழக்கறிஞர்கள் மீது கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ள இந்தக் கருப்புச் சட்டம் நீதித்துறை பாசிசத்தின் வெளிப்பாடேயாகும்.
இக்கருப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக
நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள்.
இறுதியாகப் பல்லாயிரக் கணக்கான வழக்கறிஞர்கள் அணிதிரண்டு சென்னை உயர் நீதிமன்ற
முற்றுகையில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின் முற்றுகைப் போராட்டத்திற்குப் பிறகும் கூட சென்னை
உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற மறுத்துவிட்டது.
மாறாக போராடும் வழக்கறிஞர்களை மிரட்டும் விதமாக 126 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி தமிழக அரசு 29 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து
5-பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இத்தகைய சூழலில் சட்டத் திருத்தத்தைத்
திரும்பப் பெற்று, இடைநீக்கம் செய்தவர்கள் பணிக்குத் திரும்பும் வரை நீதிமன்றப் புறக்கணிப்புத்
தொடரும் என்று தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்
குழு முடிவு செய்துள்ளது. வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம்
தொடர்கிறது.
நீதித்துறைப் பாசிசம்