தொடர்புக்கு: செல்: 8098538384
செப்டம்பர் – 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர்
பாலன்
நினைவு
நீடூழி
வாழ்க!
மோடி
அரசே! நாட்டின் பொருளாதாரத்தை
பன்னாட்டு
கம்பெனிகளுக்கு
அடிமைப்படுத்தும்
தாராளமயக்
கொள்கைகளைக்
கைவிடு!
நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி
மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில்
முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு
எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன்
கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும்
நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் இந்நாளைக்
கடைப்பிடித்து வருகிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி
படுதோல்வி அடைந்தது. மோடியின் தலைமையிலான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க., தேர்தலில்
வென்று அறுதிப் பெரும்பான்மையுடன்
ஆட்சியைப் பிடித்துள்ளது. இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான
காரணம் என்ன?