Monday, November 26, 2012
தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!
தருமபுரியில்... சாதிவெறியை ஏதிர்த்து கிளர்ந்தெழுவோம்!
தருமபுரி
அருகே செல்லன் கொட்டாய் வன்னிய சாதியைச் சேர்ந்த இளம்பெண் திவ்யாவும், நத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த
இளைஞர் இளவரசன் என்பவரும் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டார்கள். அதை எதிர்த்து
பா.ம.க.வைச் சேர்ந்த சாதி வெறியர்கள் நத்தம்,
கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது ஒரு கொடிய சாதி வெறித் தாக்குதலைத்
தொடுத்துள்ளனர். இனிமேல் யாரும் காதலித்து கலப்புத் திருமணம் புரியக்கூடாது என்பதற்காக
திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் இந்த சாதிக் கலவரம்.
Sunday, November 11, 2012
சாதி வெறியை எதிர்த்து கிளர்ந்தெழுவோம்.
தர்மபுரியில்... சாதி வெறியை
எதிர்த்து கிளர்ந்தெழுவோம்!
« காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் ஜனநாயக உரிமை!
« தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிவெறி தாக்குதல் நடத்திய பா.ம.க
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடு!
« தாழ்த்தப்பட்டோர் மீது சாதி வெறியர்கள் தொடுக்கும் வன்கொடுமைகளை
முறியடிக்க அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு
போராடுவோம்!
« நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் சாதியத்தையும் ஒழிக்க மக்கள் ஜனநாயகப்
புரட்சிக்கு அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)