Tuesday, February 28, 2012

ஜெயாவின் இந்துத்துவப் பாசிசக் கூட்டணி, அரசுபயங்கரவாதம், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ...

ஜெயாவின் இந்துத்துவப் பாசிசக் கூட்டணி, அரசுபயங்கரவாதம், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

« சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க, ஆட்சியில் நீடிக்க ஜெயாவின் பா.ஜ.க.வுடனான இந்துத்துவப் பாசிசக் கூட்டணியை முறியடிப்போம்!

« ஊழல் வழக்குகளை முடக்க ஆச்சாரியாவை மிரட்டும் ஜெயா மீது நீதிமன்றமே நடவடிக்கை எடு!

« ஜெயா ஆட்சிக்கு எதிராக கட்சிக்குள்ளேயும் வெளியேயும் போராடுவோர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!

« சமச்சீர்க்கல்வி முடக்கம், கட்டண உயர்வுகள், மின்வெட்டு, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் உள்ளிட்ட ஜெயாவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Friday, February 10, 2012

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!



சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

அமெரிக்காவின் அடிமைச் சேவகன் மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை கடந்த நவம்பர் 24ஆம் தேதி எடுத்தது. பல்பொருள் விற்பனையில்51 சதவீதமும் (Multibrand retail), ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீதமும் (Single brand retail) அனுமதித்து, அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற ஏகாதிபத்தியப் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களுக்கு மாபெரும் இந்தியச் சந்தையை திறந்துவிடும் துரோகத்தைச் செய்துள்ளது. சோனியாவும், வருங்காலப் பிரதமர் கனவில் மிதக்கின்ற ராகுல் காந்தியும் இந்தத் துரோகத்திற்கு ஆசி வழங்கியுள்ளனர். வணிகர்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி 10ல் மன்மோகன் கும்பல் ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டது.