Tuesday, September 7, 2010

ஒபாமா வெண்புறா அல்ல! பிணம் தின்னிக் கழுகே!

ஒபாமா வெண்புறா அல்ல!

பிணம் தின்னிக் கழுகே!

« அமெரிக்க ஏகாதிபத்தியமே!

ஈராக், ஆப்கனை விட்டு வெளியேறு!

« புதிய காலனியதாசன் மன்மோகன் கும்பலே!

ஒபாமாவுக்கு சிவப்புக்கம்பள வரவேறு அளிக்காதே!

« இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் அமெரிகாவுடன் செய்துகொண்ட துரோக ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

« கள்ளத்தனமாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் வெளியிடு!

« பாராளுமன்ற ஒப்புதல் இன்றி ஏகாதிபத்தியங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள அனுமதிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 184 ஐ ரத்துச் செய்!

« அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!

« அமெரிக்காவின் புதிய காலனியாதிக்கப் பிடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்ய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

செப்டம்பர் 2010

Saturday, September 4, 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும்

«
தமிழ்மாய்க்கும் உலகமயமாக்கலை எதிர்ப்போம்!

« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அனுமதி கேட்டது.

மேற்கண்ட "பொதுக்கூட்டம் நடந்தால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்றும், தற்போது உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும்" என்று கூறி கூட்டம் நடத்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்துக்கு அனுமதிதர கோவை மாநகர காவல்துறை மறுத்து விட்டது. இவ்வாறு கருணாநிதி ஆட்சி கருத்துரிமையை மறுப்பது தனி ஒரு நிகழ்வல்ல.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கெதிரான எந்தவொரு ஜனநாயக நடவடிக்கையையும் கருணாநிதி அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மாநாட்டை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்தகைய சுவரொட்டிகளை அச்சடிக்கவேண்டாம் என அச்சக உரிமையாளர்கள் பலருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. தம் கண்டனத்தை தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சட்டவிரோதமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விட்டது காவல்துறை.

அரங்க கூட்டங்களை நடத்த முயன்றவர்கள் கூட காவல்துறையினரால் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. மாற்றுக் கருத்துக்களுக்கான இடத்தை மறுத்து திமுக அரசு போலீஸ் ராஜ்யத்தை நடத்தி வருகிறது. திமுக அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் ஜனநாயக வாதிகளையும் ஆளுங்கட்சியின் முறைகேடுகளுக்குத் துணைபோக மறுக்கும் அரசு அதிகாரிகளையும் பழிவாங்குகிறது.

ஏன் இந்த பாசிச ஒடுக்குமுறை?

2010 செப்டம்பர்-12 தியாகிகள் தினம்

2010 செப்டம்பர்-12 தியாகிகள் தினம்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

« மன்மோகன் கும்பலின் புதிய காலனிய உலகமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!
« நிலச்சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
« தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!
« ஆங்கிலம், இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவோம்!
« தமிழை ஆட்சிமொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
« மாவோயிஸ்டுகள் மீதான போர் மக்கள் மீதான போரே, போரை நிறுத்து! பேச்சுவார்த்தை தொடங்கு! புரட்சியாளர் ஆசாத்திற்கு வீரவணக்கம்!
« அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கருணாநிதி ஆட்சியின் பாசிசப் போக்கை முறியடிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு