Saturday, April 25, 2015
Friday, April 17, 2015
20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை! ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!
20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை!
ஆந்திர
சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!
செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி திருப்பதி
சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவின்
அதிரடிப்படை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான தமிழ்
இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது.
“சரண் அடையாததாலும், திருப்பி எங்களைத்
தாக்கியதாலும் என்கவுண்ட்டர் நடத்தவேண்டிய சூழ்நிலை” என்று ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசாங்கமும்
இந்தப் படுகொலையை நியாயப்படுத்துகின்றனர். ஆனால் பேருந்தில் பயணம் சென்றவர்களைக்
கைது செய்து சித்தரவதை செய்துதான் கொன்றார்கள் என்பதை “தோல் உரிக்கப்பட்ட கைகள்,
கருக்கப்பட்ட உடல்கள், அடித்துத் துன்புறுத்திய காயங்கள்” என்று தமிழ்த்
தொழிலாளர்கள் உடலில் இருந்த அத்தனை ரணங்களையும்” நேரடியான சாட்சிகளையும் கொண்டு தடய
அறிவியல் அறிஞர்களும், ஆந்திரப்பிரதேச சிவில் உரிமை அமைப்புகளும் நிரூபித்துள்ளன.
எனவே தமிழ்த் தொழிலாளர்கள் 20 பேர்களின் பச்சைப் படுகொலை சந்திரபாபு நாயுடு
அரசாங்கத்தின் “அரச பயங்கரவாதம்தான்” என்பது அம்பலப்பட்டுவிட்டது.
20
தமிழ்த் தொழிலாளர்களைச் சந்திரபாபுநாயுடு அரசாங்கம் சுட்டுக் கொன்றதற்கான காரணம்
என்ன?
Saturday, April 4, 2015
பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!
பா.ஜ.க. அரசே!
கார்ப்பரேட் நலன்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப்பெறு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயகவாதிகளே!
காங்கிரஸ் தலைமையிலான
ஐ.மு. கூட்டணி அரசாங்கமும் அதற்குப் பின்னர் வந்துள்ள தற்போதைய பா.ஜ.க. அரசாங்கமும்
விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்காகக் கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்த்து இன்று நாடெங்கும்
மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள்
நிலங்களை கையகப் படுத்துவதற்காகக் கொண்டுவந்த சட்டங்களின் தொடர்ச்சியேயாகும்.
பிரிட்டிஷ் காலனி
அரசு 1894ல், நிலத்தைக் கையகப் படுத்துவதற்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச்
சட்டத்தின் படி, அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால், உடனே
நிலம் கையகப்படுத்தப்படும். அரசுகொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டும்தான்
நீதிமன்றத்துக்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே
தவிர நிலம் கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இந்தச் சட்டம் காலனிய ஆட்சிக்குப்
பிறகும் தொடர்ந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே
பொதுநலன் என சித்தரித்து, விவசாயிகள் மற்றும் பழங்குடிமக்களின் நிலங்களை 1894 சட்டத்தின்
கீழ் கையகப்படுத்தி அதை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது. பல்லாயிரக்
கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவும், ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும்
கையகப்படுத்தப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகுமுதலாளிகளும்
முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்கள். வணிக நடவடிக்கைகள் மூலம் கொள்ளை லாபம் அடைந்துள்ளார்கள்.
Monday, January 26, 2015
இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் இந்தியாவை புதிய காலனியாக்கும் முயற்சியே! (மறு பதிவு)
இந்திய-அமெரிக்க ராணுவ
ஒப்பந்தம்
இந்தியாவை புதிய காலனியாக்கும்
முயற்சியே!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்ட
பிறகு, அமெரிக்கா தனது ராணுவக் கொள்கையின் அடிப்படையில்
எடுத்துள்ள முதல் நடவடிக்கை இந்திய-அமெரிக்க பாதுகாப்பு வரைவு ஒப்பந்தமாகும்; அதனுடைய இரண்டாவது நடவடிக்கை ஜார்ஜ்புஷ்-மன்மோகன்சிங் கூட்டறிக்கை ஆகும். அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்புக்கு அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ள விலைதான்
இந்தியாவிற்குத் தேவையான அணுசக்தி தொழில்நுட்ப தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா
அளித்துள்ள வாக்குறுதிகள். அமெரிக்கா தனது நீண்டகால யுத்ததந்திர நோக்கங்களை நிறைவேற்றிக்
கொள்வதற்காக இந்த ராணுவ ஒப்பந்தத்தை இந்தியா மீது திணித்துள்ளது. இந்திய அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் இரகசியமாக இந்த ஒப்பந்தத்தை செய்துகொண்டதின்
மூலம் மானவெட்கமின்றி தேசத்துரோக செயலில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள
இந்த வரைவு ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவுக்கு அடிபணியச் செய்யும் ஒப்பந்தமாகும். இந்த வரைவு ஒப்பந்தம் செயல் வடிவம் பெற்றால், இந்தியா தனது அரைகுறை இறையாண்மையையும் இழந்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் கீழ்
உள்ள ஒரு நாடாக மாற்றப்பட்டுவிடும். மேலும் அது அமெரிக்காவின்
உலக மேலாதிக்கத்துக்கும் ஆசியாவில் அதன் ராணுவ யுத்ததந்திர நோக்கங்களுக்கும் சேவை செய்யக்
கூடிய ஒரு கருவியாக இந்தியாவை மாற்றிவிடும்.
விரிவாகப்படிக்க >>>>>>>
Saturday, January 24, 2015
Friday, January 23, 2015
ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!
ஏகாதிபத்திய யுத்த வெறியன்
ஒபாமா வருகையை எதிர்ப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே ஜனநாயகவாதிகளே!
அமெரிக்க
ஜனாதிபதி பாரக் ஒபாமா, இந்துத்துவ பாசிச மோடியின் அழைப்பை ஏற்று இவ்வாண்டு குடியரசு
தினவிழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுகிறார். சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திக்கு
குறுநில மன்னன் அளிக்கும் விருந்தைப்போல் தலைநகரமே வெள்ளை மாளிகையாக மாற்றப்பட்டு விழிபிதுங்கி
நிற்கிறது. 2012-ல் இரண்டாம் எலிசபெத் ராணியை வரவேற்க அரசு அலுவலகங்களில் ’சுதந்திர’ தினக் கொண்டாட்டங்களை கைவிட்டது
மன்மோகன் கும்பலின் காங்கிரஸ் ஆட்சி. ‘குடியரசு’ தினத்தன்று எஜமானன் ஒபாமாவை மலர்ப் பல்லக்கில்
சுமந்து வருவதன் மூலம் புதியகாலனிய சேவையில் மன்மோகன் கும்பலையும் விஞ்சிவிட்டது மோடிகும்பல்.
ஒபாமாவின்
இந்திய வருகை மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டதாகும். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குப்
போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை எதிர்த்து இந்தியாவை தனது கூட்டணிக்குள் கொண்டுவருவது;
அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவை செய்யும் அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை
மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது; இந்திய நாட்டின் நிதித்துறை, பாதுகாப்புத் துறை,
அணுசக்தித் துறை போன்ற அனைத்துத் துறைகளையும் அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
திறந்துவிட நிர்ப்பந்திப்பதுடன் இந்துத்துவ மதவெறிப் பாசிச அமைப்புகளுக்கு ஊக்கம் அளித்தல்
போன்றவைகளே அவை.
Sunday, January 18, 2015
Friday, December 12, 2014
மருத்துவ, சுகாதாரத் துறைகளை அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய் மரணத்திற்கு காரணம்!
மருத்துவ, சுகாதாரத் துறைகளை
அரசாங்கம் கைவிட்டு, பன்னாட்டு, உள்நாட்டு
முதலாளிகள் கொள்ளையிடும் களமாக மாற்றுவதே மருத்துவ மனைகளில் தாய்-சேய்
மரணத்திற்கு காரணம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
நவம்பர் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 13 பச்சிளங்குழந்தைகள் மருத்துவ
வசதியின்றி மரணமடைந்தன. அதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள்
மரணமடைந்தன. ஒரே வாரத்தில் 20க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மரணமடைந்தது நாடு
முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தருமபுரிக்கு இத்தகைய மரணங்கள் புதிதல்ல. இம்மாவட்டத்தில் மாதம் 60 குழந்தைகள் வீதம் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றன.
பச்சிளங்குழந்தைகள் மட்டுமல்லாது அண்மையில் சத்தீஸ்கர்
மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கருத்தடை அறுவை சிகிச்சையின்போது, போலி மருந்துகள்
பயன்படுத்தபட்டதால் 12 தாய்மார்கள் உயிரிழந்தனர். இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவெனில்,
கருத்தடை அறுவை சிகிச்சிசையின் போது தாய்மார்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான்
முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்பதுதான்.
Thursday, December 4, 2014
சிங்கள இனவெறி இராஜபட்சே அரசே! தமிழ் மீனவர்கள் மீதான தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!
சிங்கள இனவெறி இராஜபட்சே
அரசே!
தமிழ் மீனவர்கள் மீதான
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
இராமநாதபுரம்
மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சார்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், புரசாத்ம் ,லாங்லெட்
ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுடன் ஈழத்தமிழ் மீனவர்கள் மூன்று பேரை சேர்த்து ஹெராயின்
போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி பொய்வழக்கு புனைந்து, இலங்கை கடற்படையினர் கைது செய்து,
2011ஆம் ஆண்டு சிறையிலடைத்தனர். மூன்று ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த
அக்டோபர் மாதம் 30ஆம் தேதி எட்டு தமிழ் மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு
உயர்நீதிம்னறம் உ த்தரவிட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கின.
ஐந்து
தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை முற்றிலும் இரத்துச் செய்து அவர்களை
உயிருடன் மீட்டுத்தர வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு
இலங்கை அரசு வசமுள்ள 79 விசைப் படகுகள், அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும்
மீட்டுத்தர வேண்உம் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மீனவர்களின் போராட்டம்
வெடித்துக் கிளம்பியது. 5 பேர் தூக்கை இரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும்
போராட்டத்தில் ஈடுபட்டன.
Friday, October 24, 2014
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதித்துறை ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை
வரவேற்போம்!
அன்பார்ந்த
உழைக்கும் மக்களே ! ஜனநாயகவாதிகளே !
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில்
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு
சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி மற்றும்
சுதாகரன் ஆகியோருக்குத் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதித்துள்ளது.
இதனால் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்ததுடன் பெங்களூரு பரப்பன அக்ராஹர சிறையிலும்
அடைக்கப்பட்டார். அத்துடன் அவர் 10 ஆண்டுகள் வரை
தேர்தலில் போட்டியிடவும் முடியாது.
ஜெயா கும்பலின் மீதான குற்றங்கள் நிரூபணம் ஆனது
பற்றி நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா தனது தீர்ப்பில் பின்வருமாறு கூறுகிறார்:
“66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில் ரூ.53
கோடி (ரு.53,60,49,954) வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது
சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச்
சேர்க்கப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) பொது ஊழியர் பொறுப்பில் இருந்த காலத்தில் இந்தக் குற்றத்தில்
ஈடுபட்டுள்ளார். அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13(i)(e)ன் படியும், மற்ற
மூன்று குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ள தால் இந்தியத் தண்டனைச்
சட்டம் 120(B)யின் படியும் குற்றமிழைத்துள்ளார். மற்ற மூவரும் முதல் குற்றவாளிக்கு
ஆதரவாகச் செயல்பட்டுள்ளதால் இந்தியத் தண்டனைச் சட்டம் 109ன் படி குற்றமாகிறது. எனவே
நான்கு பேரும் குற்றவாளிகளே” என்று தீர்ப்பளித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)







