Tuesday, September 30, 2014

சொத்து குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

சொத்து குவிப்பு வழக்கில்
18 ஆண்டுகள் வளைந்து கொடுத்த நீதித்துறை
இறுதியாக ஜெயா கும்பலை தண்டித்துள்ளதை வரவேற்போம்!

«  ஜெயா கும்பல் மட்டுமே ஊழல்வாதிகள் அல்ல! அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் அந்நிய மூலதனத்திற்குச் சேவை செய்யும் ஊழல்வாதிகளே!

« ஊழலின் ஊற்றுக்கண் புதிய காலனிய தாரளமயக் கொள்கைகளே!

«  ஊழலை ஒழிக்க மோடி ஆட்சியின் புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Tuesday, September 9, 2014

கச்சத் தீவை மீட்போம்! தமிழர் நலனையும், மீனவர் உரிமைகளையும் பாதுகாப்போம்!

தொடர்புக்கு: செல்: 8098538384


முன்னுரை
கச்சத்தீவில் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் கொடூரமாக தாக்கப்படுவது தொடர்கிறது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகும் கூட இத்தகைய தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற 15 நிகழ்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த 319 மீனவர்கள் அவர்களது 62 படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். மோடி கேட்டுக்கொண்டதன் பேரால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் மீனவர்களின் படகுகள் இன்னமும் விடிவிக்கப்படவில்லை. கடந்த இரு தினங்களில் மீண்டும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறிய மோடி கும்பல் இன்று தமிழக மீனவர்களின் முதுகில் குத்துகிறது.

மோடி அரசே! நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!



தொடர்புக்கு: செல்: 8098538384

செப்டம்பர் 12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

மோடி அரசே! நாட்டின் பொருளாதாரத்தை

பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைப்படுத்தும்

தாராளமயக் கொள்கைகளைக் கைவிடு!



நக்சல்பாரிப் புரட்சி இயக்கத் தோழர் பாலன் தர்மபுரி மாவட்டத்தில் ஜனநாயகப் புரட்சிகரப் போரட்டத்திற்கு மக்களை அணிதிரட்டுவதில் முன்னணித் தோழராக செயல்பட்டார். புரட்சிகர இயக்கத்தை அழிக்கும் நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்திய நரவேட்டையில் 1980 செப்.12ல் தோழர் பாலன் கொல்லப்பட்டார். தோழர் பாலனின் நினைவு நாளை நாட்டின் விடுதலைக்கும், ஜனநாயகத்திற்கும் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூரும் நாளாகவும், அவர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கும் நாளாகவும் இந்நாளைக் கடைப்பிடித்து வருகிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மோடியின் தலைமையிலான இந்துத்துவப் பாசிச பா.ஜ.க.,  தேர்தலில் வென்று   அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன?

செப்டம்பர் 12 தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!


Wednesday, August 20, 2014

புதியகாலனிய தாராளக் கொள்கைகளின் தோல்விகளால் காங்கிரசின் வீழ்ச்சியும் - உலகளாவிய அனுபவங்களும்


நூலினை பெற தொடர்புக்கு
பேசி : 9941611655;
மின் அஞ்சல் :
samaranpublisher@gmail.com;
samaranvelietagam@yahoo.com

உள்ளடக்கம்:

முன்னுரை

இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமடையச் செய்வது எது?

வெளியுறவு நெருக்கடிகள்
(External Crisis)

வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கலுக்கு இடையிலான சமநிலை: அரசியல்- பொருளாதாரப் பின்புலம்

புதிய தாராளமயம் புதிய காலனியச் சார்பு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது

பிற்சேர்க்கை
முதலீட்டை விட 10 மடங்கு அதிக சலுகைகள்

முன்னுரை

நான்கு ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கத்துடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தைப் பலவீனமடையச் செய்வது எதுஎன்ற முதல் கட்டுரையில், நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு அது கடைப்பிடித்த புதியதாராள பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதற்காலப் பகுதியில் அதாவது 2003--2008 ஆண்டுகளின் காலப்பகுதியில் இந்தியா ஒரு உயர் வளர்ச்சியைச் சந்தித்தது. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) சராசரியாக 9 சதவீதம் என்ற என்றுமே காணாத வளர்ச்சியை எட்டியது. ஆனால் ஐ.மு.கூட்டணியின் இரண்டாவது காலப்பகுதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் பாதியாகக் குறைந்து வெறும் 4.7 சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்தது.

Wednesday, April 30, 2014

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்


«  
மே நாள் வாழ்க மே நாள் வாழ்க!
மேதினி போற்றும் மேநாள் வாழ்க!
போர்நாள் வாழ்க போர் நாள் வாழ்க
பாட்டாளி வர்க்கப் போர்நாள் வாழ்க!

மே நாளில் சூளுரைப்போம்!

மே நாளில் சூளுரைப்போம்!

கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற மக்களே!

                உலக முதலாளித்துவ நெருக்கடி மீளமுடியாமல் மென்மேலும் புதை குழியில் ஆழ்ந்து வருகின்றது. அதே வேளையில் நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மென்மேலும் சுமத்துகின்றனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். இத்தகைய சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் கடுமையாகப் போரிட்டு வருகின்ற ஒரு சூழலில்தான் நாம் இந்த மே நாளை எதிர்கொள்கிறோம்.

Wednesday, April 23, 2014

புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்திக்கிறோம். இத்தேர்தல் எத்தகைய சூழலில் நடைபெறுகிறது?

உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்த ஒரு சூழலில்தான் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி -குறிப்பாக அமெரிக் காவில் 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் பரவியது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் நெருக்கடியின் சுமைகளை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் சுமத்திவிடும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.

இந்திய அரசும் ஆளும் வர்க்கக் கட்சிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள தனது உலக மேலாதிக்கத்தையும், புதியகாலனி யாதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன. அதன் விளைவாக இந்திய மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.