Saturday, September 21, 2013

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்! ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!!

தர்மபுரியில் போலீஸ் இராஜ்ஜியம்!
ஜெயா அரசே! 144 தடையை உடனே நீக்கு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

       ஜெயலலிதா அரசாங்கம் தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஓராண்டுக் காலமாக 144 தடை விதித்து மக்கள் மீது போலீஸ் ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சாதிக் கலவரங்களை தடுப்பது என்ற பேரால் 144 தடை நியாயப் படுத்தப்படுகிறது. ஆனால் இந்தத் தடையின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக் கலவரங்களைத் தூண்டியவர்கள் மீதோ, கலவரத்தை நடத்தியவர்கள் மீதோ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவே இல்லை. உண்மையானக் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை. மாறாக இத்தடையை தாழ்த்தப்பட்ட மக்களையும், அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களையும், எதிர்க் கட்சியினரையும் அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். இளவரசனின் இறுதி ஊர்வலத்தை நடத்தவும், அதில் தலைவர்கள் பங்கேற்பதையும் கூட தடை செய்தனர்.

       சாதி ரீதியாக ஒடுக்குவோருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் வித்தியாசம் இன்றி 144 தடைவிதிப்பது என்று கூறுவதும், சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதற்கு மாறாக - சாதித் தீண்டாமைக்கு எதிரான ஜனநாயக இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும், ஒடுக்குபவர்களுக்கு துணைபோவது தவிர வேறொன்றுமில்லை. 144 தடை மூலம் இன்று தர்மபுரி மாவட்டம் ம்என்றால் சிறைவாசம், “ஏன்என்றால் வனவாசம் என மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்றப்பட்டுவருகிறது.

Tuesday, August 27, 2013

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!

செப்டம்பர் 12 தியாகிகள் தினம்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!!
«  அந்நிய மூலதனத்திற்கு நாட்டைத் திறந்துவிட்டு அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் சோனியா-மன்மோகன் ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

«  இந்திய அரசே! ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்கும் 13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல், மோசடிகளை மூடி மறைக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

«  தமிழக அரசே! ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில பயிற்றுமொழித் திணிப்பைக் கைவிடு!

«    தமிழை ஆட்சிமொழி பயிற்றுமொழி ஆக்கப் போராடுவோம்!

«  அனைத்துத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!


« சாதிவெறிப் பிற்போக்கு முன்னணியை முறியடிப்போம், தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து அனைத்துச் சாதி உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபடுவோம்!



மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Wednesday, August 7, 2013

சாதி மறுப்பு, சுதந்திரக் காதல் திருமணங்களை ஆதரிப்போம்!


சாதி மறுப்பு, சுதந்திரக் காதல் திருமணங்களை ஆதரிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

பிற்படுத்தப்பட்ட சாதியான முக்குலத்தோர் சாதியைச் சார்ந்த சரண்யா என்கிற பெண்ணும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இராமகிருஷ்ணன் என்கிற இளைஞரும் ஒரே இடத்தில் வேலை செய்யும்போது ஒருவரை ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்ள விரும்பி பெண்ணின் தந்தை திரு முனியாண்டி அவர்களை அணுகினர். ஆளும் கட்சிப் பிரமுகரான அவர் இவர்களின் காதல் மணம், கலப்பு மணத்தை அங்கீகரிக்க மறுத்தார். தாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காகவே இராமகிருஷ்ணனை காவல்நிலையத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு விரட்டியடித்தார்.

பெற்ற மகள் சரண்யாவை வீட்டுக் காவலில் வைத்து விருப்பமில்லாத வேறொருவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சித்திரவதை செய்தனர். ஆனால் 5 மாதகால வீட்டுச் சிறையை உடைத்து வெளியேறிய சரண்யா, தான்விரும்பிய இராமகிருஷ்ணனை கரம்பிடிக்க எமது அமைப்பின் உதவியை நாடினார். எமது அமைப்பு அவர்களிருவருக்கும் 15.07.2013 அன்று பதிவுத் திருமணம் செய்துவைத்தது. இதனை அறிந்த சரண்யாவின் தந்தை மணமக்களுக்கும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய எமது அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் சேல் முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Thursday, July 11, 2013

இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை!



«  இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல, கொலை!

« கொலையாளிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே! 

காதலித்துக் கலப்புமணம் புரிந்த இளவரசனின் உடல், கடந்த 4ஆம் தேதியன்று தர்மபுரியில் இரயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாகக் காவல்துறையும், ஊடகங்களும் அது தற்கொலைதான் என்ற பிரச்சாரத்தை முடுக்கிவிட்டன. ஆனால் இளவரசனின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல; அது ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று அனைவராலும் கருதப்படுகிறது. 

இளவரசன் மரணம் என்பது ஒரு தனித்த சம்பவம் அல்ல. இராமதாசு, குரு போன்றோரின் தலைமையிலான பா.ம.க.வினரும், வன்னியர் சங்கக் காடையர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடுத்துவரும் சாதிவெறித் தாக்குதல்களின் ஒரு பகுதியேயாகும்.

Saturday, June 1, 2013

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்


முன்னுரை

சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞரணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகள் - 1983ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் ஈழத்தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் தேசிய இனப் பிரச்சினைப் பற்றிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் கோட்பாடுகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கியதாகும்.

Tuesday, April 30, 2013

பேரணி முழக்கள் முழங்குவோம்!

மே நாள் வாழ்க

மக்கள் ஜனநாயக         இளைஞர் கழகம்
வாழ்க வாழ்க            வாழ்கவே!

மார்க்சிய லெனினிய      மாவொ சிந்தனை
வெல்க வெல்க           வெல்கவே!

மே நாள் வாழ்க         மே நாள் வாழ்க
மேதினி போற்றும்       மே நாள் வாழ்க!

சூளுரைப்போம்          சூளுரைப்போம்
மேதினத்தில்             சூளுரைப்போம்!

மேலாதிக்க              வெறிபிடித்த
அமெரிக்க ஏகாதி         பத்தியத்தின்
புதிய காலனி            ஆதிக்கத்தை
முறியடிப்போம்          முறியடிப்போம்
அமெரிக்காவின்          ஆசிய பசுபிக்
நூற்றாண்டுத்            திட்டத்தை
எதிர்த்திடுவோம்          எதிர்த்திடுவோம்!

ஈழத் தமிழருக்கு         எதிரான
அமெரிக்க இந்திய        கூட்டுச் சதிகளை
முறியடிப்போம்          முறியடிப்போம்!

இந்திய                  விரிவாதிக்க கொள்கொகளை
தேசிய இன              ஒடுக்குமுறைக் கொள்கைகளை
எதிர்த்திடுவோம்          எதிர்த்திடுவோம்!
ஏகாதிபத்திய             பிடியிலிருந்து
நாடுகளை               விடுதலை செய்யவும்
தேசிய இனங்களின்       சுயநிர்ணய
உரிமைக்காகவும்         போராடுவோம்!

தாய்மொழியை           தமிழ்மொழியை
ஆட்சிமொழி ஆக்கிட     பயிற்றுமொழி ஆக்கிட
போராடுவோம்           போராடுவோம்!
அனைத்து தேசிய        மொழிகளையும்
ஆட்சிமொழி ஆக்கிடப்    போராடுவோம்
தமிழக மக்களின்         நலன் காக்க
மீனவரின் உரிமை       மீட்க
கட்சத்தீவை             மீட்பதற்காக
போராடுவோம்           போராடுவோம்!

பன்னாட்டு               உள்நாட்டு
பகாசூர                  கம்பெனிகள்
கொள்ளை லாபம்        அடிப்பதற்காக
தொழிலாளர்த்            தோழர்களை
கொத்தடிமை             களாக்குவதை
அனுமதியோம்           அனுமதியோம்!
நிரந்தர பணியிட         ஒழிப்பினையும்
ஒப்பந்தக் கூலி           முறையினையும்
வேலை நேர             அதிகரிப்பையும்
எதிர்த்து நின்று           போராடுவோம்!

தொழிலாளி              வர்க்கத்தின்
தொழிற்சங்க             ஜனநாயக
உரிமைகளுக்காகப்        போராடுவோம்!

தற்கொலைக்கு           விவசாயிகளை
தள்ளுகின்ற              நாசகற
புதிய காலனிய           வேளாண் கொள்கைகளை
முறியடிக்க              அணிதிரள்வோம்!
போராடுவோம்           போராடுவோம்
நிலச் சீர்த்திருத்தத்திற்கு போராடுவோம்!



அந்நிய மூலதன         ஆதிக்கத்தாலும்
தொடரும் மின்           வெட்டாலும்
அழியுது பார்             நெசவும், தொழிலும்
அந்நிய மூலதன         வருகையால்
அழியுது பார்             சில்லரை வணிகம்!

காவிரி முல்லை         பெரியாற்றில்
தமிழக உரிமை          பறிபோகுது
அண்டைய மாநிலங்களோ உரிமையை மறுக்குது
மத்திய அரசோ          பாராபட்சம் பார்க்குது
ஆற்று நீரின்             உரிமைக்காக
மத்திய மாநில           அரசுகளை
எதிர்த்துப் போராட        அணிதிரள்வோம்!

ஜெய அரசே             ஜெய அரசே
தமிழக வறட்சித்         திட்டத்திற்கு
போதுமான              நிதியினை
உடனே ஒதுக்கு          உடனே ஒதுக்கு!

சாதிவாத                அரசியலை
எதிர்த்திடுவோம்          எதிர்த்திடுவோம்
சாதி, தீண்டாமை         கொடுமைகளை
சவக்குழிக்கு             அனுப்பிடவே
போராடுவோம்           போராடுவோம்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே
ஒன்றுபடுவோம்          ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Friday, April 26, 2013

மே நாளில் சூளுரைப்போம்


மே நாளில் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள் உக்கிரம் அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள் எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள் இயக்கத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.