Thursday, March 15, 2012

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!

முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!

முல்லைப் பெரியாற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெருவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணைக்கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!

Thursday, March 1, 2012

அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கை”களே!

அணுக்கதிர்வீச்சு ஆபத்துகளுக்கு அடிப்படை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலின் “ஆற்றல் கொள்கைகளே!

« உலகமக்களுக்கு ஆபத்து அணு உலைகளால் மட்டுமல்ல! அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களால்தான் பேராபத்து!

« அமெரிக்கா குவித்துவைத்துள்ள அணு ஆயுதங்களை நிர்மூலமாக்கப் போராடுவோம்!

« அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் மின்னுற்பத்தியைப் பெருக்க அல்ல! நாட்டை அடிமைப்படுத்தவே!

« இந்திய அரசே! அமெரிக்காவுடனான அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ரத்துச் செய்!

« பாதுகாப்பற்ற பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை மூடு! பாதுகாப்பு அம்சங்கள் உள்ள புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான அணு உலைகளை அனுமதி!

« உரியபாதுகாப்பு மற்றும் இழப்பீட்டை உத்தரவாதம் செய்து கூடங்குளம் அணு உலையைத் திற!

« நாட்டை அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தும் அணுசக்தி ஒப்பந்தங்கள் செய்த காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்ப்போம்!

« ஏகாதிபத்தியங்களிடம் நிதி பெற்று இயங்கும் தொண்டு நிறுவனங்களைத் தடைசெய்ய மறுக்கும் புதியகாலனிய தாசன் மன்மோகன் கும்பலை எதிர்ப்போம்!

« நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அனல், புனல், காற்றாலை, அணு மின்சாரம் என அனைத்தும் தழுவிய “தேசிய மின்கொள்கை உருவாக்கப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

மார்ச் 2012

Tuesday, February 28, 2012

ஜெயாவின் இந்துத்துவப் பாசிசக் கூட்டணி, அரசுபயங்கரவாதம், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ...

ஜெயாவின் இந்துத்துவப் பாசிசக் கூட்டணி, அரசுபயங்கரவாதம், மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

« சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க, ஆட்சியில் நீடிக்க ஜெயாவின் பா.ஜ.க.வுடனான இந்துத்துவப் பாசிசக் கூட்டணியை முறியடிப்போம்!

« ஊழல் வழக்குகளை முடக்க ஆச்சாரியாவை மிரட்டும் ஜெயா மீது நீதிமன்றமே நடவடிக்கை எடு!

« ஜெயா ஆட்சிக்கு எதிராக கட்சிக்குள்ளேயும் வெளியேயும் போராடுவோர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!

« சமச்சீர்க்கல்வி முடக்கம், கட்டண உயர்வுகள், மின்வெட்டு, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் உள்ளிட்ட ஜெயாவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Friday, February 10, 2012

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!



சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

அமெரிக்காவின் அடிமைச் சேவகன் மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை கடந்த நவம்பர் 24ஆம் தேதி எடுத்தது. பல்பொருள் விற்பனையில்51 சதவீதமும் (Multibrand retail), ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீதமும் (Single brand retail) அனுமதித்து, அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற ஏகாதிபத்தியப் பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களுக்கு மாபெரும் இந்தியச் சந்தையை திறந்துவிடும் துரோகத்தைச் செய்துள்ளது. சோனியாவும், வருங்காலப் பிரதமர் கனவில் மிதக்கின்ற ராகுல் காந்தியும் இந்தத் துரோகத்திற்கு ஆசி வழங்கியுள்ளனர். வணிகர்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி 10ல் மன்மோகன் கும்பல் ஒரு பொருள் விற்பனையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டது.

Thursday, January 19, 2012

பேருந்து,பால்,மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!!

ஜெயா அரசே!!

பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வுகளைத் திரும்பப் பெறு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விழிபிதுங்கி அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜெயா அரசு பேருந்து, பால், மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி மக்கள் வயிற்றில் பேரிடியை இறக்கியுள்ளது. சாதாரண பேருந்துக் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ 6.25 ஆகவும் உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ 11000 கோடியளவில் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றியுள்ளது. இதனால் ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம் மாதம் ஒன்றுக்கு ரூ 1000த்திலிருந்து 1500 வரை கூடுதலாக செலவழிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tuesday, January 10, 2012

நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!!

நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!!

அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இந்தியாஎன்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான ஜன் லோக்பால்சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதிலிமிருந்து நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆகஸ்டு 16-ஆம் தேதி டெல்லியில் நடந்த உண்ணா விரதத்தின்போது பல லட்சம் பேர் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது, சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சிக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Tuesday, December 6, 2011

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 3

« தமிழ்மாய்க்கும் உலகமயமாக்கலை எதிர்ப்போம்!

« கருணாநிதி அரசின் பாசிச ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 2

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

மொழி குறித்த மார்க்சிய லெனினியம் - பாகம் 1

பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு!

பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறு!

ஜெயா அரசே! பேருந்து, பால், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப்பெறு!

« பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு வழங்கும், சலுகைகளை நிறுத்து! அவர்கள் மீது வரிகளைப்போடு!

« உலக வங்கியின் ஆணைக்கு அடிபணிந்து மக்கள் மீது கட்டணச் சுமைகளை ஏற்றும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!

« மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடுங்கோல் ஜெயா ஆட்சியை எதிர்த்து அணி திரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, October 8, 2011

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

உலகமயக் கொள்கைகளால் வரும் தீமைகளைத் தடுக்க அதிகாரமற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த விவசாயிகளே, தொழிலாளர்களே, ஜனநாயகவாதிகளே!

மத்திய, மாநில அரசுகள் ஏகாதிபத்திய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை செயல்படுத்திவரும் இன்றைய சூழலில்; நிலம், நீர், கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், டாட்டா, பிர்லா, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளிடமும் தாரைவார்க்கும் சூழலில்; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்புகளை கைவிட்டு இவற்றை தனியார்மயம், வணிகமயமாக்கிவரும் சூழலில் மாநகராட்சியிலிருந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால், மேற்கண்ட தேசவிரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க முடியுமா?

Sunday, September 25, 2011

பரமக்குடியில் 7 பேர் படுகொலை சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

பரமக்குடியில் 7 பேர் படுகொலை
சாதிவெறிப் பாசிசத்தை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

பரமக்குடியில் செப்டம்பர் 11ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜான்பாண்டியனை கைது செய்ததைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரைக் கொன்று தமது உயர்சாதி வெறியை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. மதுரையிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்து மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். தேடுதல் வேட்டை எனும் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு, கிராமம் கிராமமாக காவல் துறையினர் மிரட்டி வருகின்றனர். போலீசுக்குப் பயந்து ஒளிந்து கொண்ட இருவர் பாம்புக்கடித்தும், ஒருவர் தவறி விழுந்தும் மாண்டுவிட்டனர். 144 தடை உத்தரவு தொடர்கிறது. இவ்வாறு இம்மாவட்டம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஜெயலலிதாவின் காவல்துறை ஒரு அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது.