Sunday, April 30, 2017

2017 - மே நாள் ஊர்வலம் முழக்கங்கள்!

2017 - மே நாள் ஊர்வலம் முழக்கங்கள்

மேதினி போற்றும் மேநாள்!
பாட்டாளி வர்க்கப் போர்நாள்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!

அமெரிக்க டிரம்ப் கும்பலின்
இனவெறிப் பாசிசம் முறியடிப்போம்!
மூன்றாம் உலகப் போருக்கான
தயாரிப்புகளை முறியடிப்போம்!

ஏகாதிபத்திய அமெரிக்காவின்
டிரம்ப் கும்பலே! டிரம்ப் கும்பலே!
சிரியா மீது கை வைக்காதே!
வட கொரியா மீது கை வைக்காதே!

மோடி அரசே! மோடி அரசே!
அமெரிக்க டிரம்ப் கும்பலின்
இனவெறிப் பாசிசப் போக்கிற்கு
துணைபோகாதே! துணைபோகாதே!

அமெரிக்க டிரம்ப் கும்பலின்
மூன்றாம் உலகப் போர் வெறிக்கு
துணை போகாதே! துணை போகாதே!
அனுமார் படையாய் மாறாதே!

வேளாண்மை நெருக்கடிக்கும்
விவசாயிகள் தற்கொலைக்கும்
காரணமான கொள்கைகளை
கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

பன்னாட்டு கார்ப்பரேட்களுக்கு
அளித்துவரும் சலுகைகளை
அனைத்து வரிச் சலுகைகளை
ரத்து செய்! ரத்து செய்!
மோடி அரசே ரத்து செய்!

உள்நாட்டு கார்ப்ப ரேட்டுகள்
வாங்கிய கடன்கள் வாராக் கடன்களை
உடனடியாக வசூல் செய்!
மோடி அரசே வசூல் செய்!

விவசாயிகள் வாங்கியுள்ள
கடன்களனைத்தையும் ரத்து செய்!
மோடி அரசே ரத்து செய்!

காவிரி மேலாண்மை வாரியத்தை
உடனே அமைக்க நடவடிக்கையெடு!
மோடி அரசே நடவடிக்கையெடு!

ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை
கைவிடுக! கைவிடுக!
மோடி அரசே கைவிடுக!

நதிநீர் இணைப்புத் திட்டத்தை
உடனடியாக செயல்படுத்து
மோடி அரசே செயல்படுத்து!

வங்கிகள், ஆயுள் காப்பீடு
நெய் வேலி நிலக்கரிச் சுரங்கம்
சேலம் இரும்பாலை உள்ளிட்ட
பொதுத்துறை நிறுவனம் அனைத்தையுமே
தனியாருக்குத் தாரை வார்ப்பதை
அனுமதியோம்! அனுமதியோம்!

கேசுவல் காண்டிராக்ட் அவுட் சோர்சிங்
ஒப்பந்த கூலி முறைகளினை
ஒழித்துக்கட்டப் போராடுவோம்!

ரத்தம் சிந்தி இன்னுயிர் ஈந்து
போராடிப் பெற்ற உரிமையினை
எட்டுமணி நேர வேலையுரிமையை
பறிப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
பனிரெண்டுமணி வேலை நாளை
ஒழித்துகட்டப் போராடுவோம்!

முதலாளிகளின் நலன்களைக் காக்க
தொழிலாளர் நலச் சட்டங்களை
திருத்தாதே! திருத்தாதே!
மோடி கும்பலே திருத்தாதே!
உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தை
கொத்தடிமை ஆக்குவதை
எதிர்த்து நின்று போராடுவோம்!

மால்கள் திறப்பதை அனுமதித்து
ஆன்லைன் வர்த்தகம் அனுமதித்து
சில்லரை வணிகத் துறையினிலே
கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள்
ஏகபோகமாய் கோலோச்ச
சில்லரை வணிகத்தை மோடி கும்பல்
காவு கொடுப்பதை எதிர்த்திடுவோம்!
ஆன்லைன் வர்த்தகம் தடைசெய்ய
போராடுவோம்! போராடுவோம்!

கல்வி மருத்துவம் சுகாதார
சமூக நலத் திட்டங்களை
வணிகமயம் ஆக்குவதை
எதிர்த்து நின்று போராடுவோம்!

ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத
ஆதிக்கத்தை முறியடிபோம்!
அன்னைத் தமிழையும் அனைத்து மொழியையும்
ஆட்சி மொழியாய் பயிற்று மொழியாய்
அரியணை ஏற்றப் போராடுவோம்!

ஆங்கிலம் இந்தி ஆதிக்கத்திற்கு
கருவியாகச் செயல்படும்
மெட்ரிக்குலேசன் பள்ளிகளை
இழுத்து மூடப் போராடுவோம்!

பொதுக் கல்வித் திட்டத்தை
தாய் மொழி வழியில் அமல்படுத்த
போராடுவோம்! போராடுவோம்!

பாசிச மோடி கும்பலின்
இந்துத்துவப் பாசிச
தேசியக் கொள்கையினை
எதிர்த்து நின்று முறியடிபோம்!

மோடி கும்பலே, மோடி கும்பலே!
காஷ்மீர் மக்கள் மீதான
இனவெறிப் பாசிச யுத்தத்தை
உடனே நிறுத்து! உடனே நிறுத்து!
காஷ்மீர் மக்கள் மத்தியிலே
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை
உடனே நடத்து உடனே நடத்து!

அனைத்து தேசிய இனங்களின்
சுயநிர்ணய உரிமை தன்னை
வென்றெடுக்கப் போராடுவோம்!

காவிக் காடையன் மோடி கும்பலின்
இந்துமதவாப் பாசிசத்தை
சாதி வாதப் பாசிசத்தை
எதிர்த்து நின்று முறியடிப்போம்!

நாட்டின் விடுதலை ஜனநாயகம்
வென்றெடுத்து நிலைநாட்ட
மக்கள் ஜனநாயக அரசமைக்க
புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு
அணிதிரள்வோம்! அணி திரள்வோம்!

உலகத் தொழிலாளர்களே
ஒடுக்கப்பட்ட தேசங்களே
ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!

மே நாள் வாழ்க மே நாள் வாழ்க!
மேதினி போற்றும் மேநாள் வாழ்க!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, April 29, 2017

2017-மே நாள் வாழ்க!

2017-மே நாள் வாழ்க!

கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற உழைப்பாளி மக்களே...!!

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் மேதின தியாகிகளை நினைவுகூரும் நாளாக கடைப்பிடித்து வருகிறோம். இவ்வாண்டு மே-நாளில், அமெரிக்காவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள டிரம்ப் கும்பல் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்தவும், நிதிமூலதன கார்பரேட் கும்பலை மீட்கவும் இனவெறி பாசிசத்தைக் கட்டியமைப்பதுடன் உலக மக்கள் மீது ஒரு மூன்றாம் உலகயுத்தத்தை திணித்து வருவதை எதிர்த்தும்; மோடி அரசாங்கம் கடைப்பிடித்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும், நெருக்கடிகளின் சுமைகளை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது சுமத்துவதையும் எதிர்த்து, இந்துமதவெறி பாசிசத்தை எதிர்த்தும் போராட சூளுரை ஏற்பதே சர்வதேச, தேசியக் கடமையாகும்.

உலகப் பொருளாதார மந்தநிலை தொடர்கிறது

இன்றைய உலகம் பொருளாதார மற்றும் நிதிநெருக்கடியில் மூழ்கிக் கிடக்கிறது. 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.2 சதவீதமாக மிகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது. 2017-இல் அது 2.7 சதவீதமாக வளரும் என்ற எதிர்பார்ப்பும்கூட அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளால் அல்ல; இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளை நம்பித்தான் கூறப்படுகிறது. ஆனால் பொருளாதார மந்தத்திலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் நிலவும் குழப்பம், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் உலகமயக் கொள்கைகளைக் கைவிட்டு காப்புக் கொள்கைகளுக்கு மாறுவது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியது போன்ற காரணங்களால் உலகப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என ஐ.நா.வின் ஆய்வு எச்சரிக்கிறது.

Monday, April 17, 2017

2017 - மே நாளில் சூளுரைப்போம்!

மே நாளில் சூளுரைப்போம்!

é அமெரிக்க டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசத்தையும் மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புகளையும் முறியடிப்போம்!

é டிரம்ப் கும்பலே, சிரியா, வடகொரியா மீது கைவைக்காதே!

é மோடி அரசே! டிரம்ப் கும்பலின் இனவெறிப் பாசிசத்திற்கும் போர்வெறிக்கும் துணைபோகாதே!

é வேளாண்மை நெருக்கடிக்கும் விவசாயிகள் தற்கொலைக்கும் காரணமான கார்ப்பரேட் வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!

é பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு அளித்து வரும் வரிச் சலுகைகளை ரத்து செய்!

é உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன்களை வசூல் செய்!

é விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்!

é காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!

é ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதை கைவிடு!

é நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்து!

é வங்கிகள், காப்பீடு உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!

é ஒப்பந்த கூலிமுறையையும் 12 மணி நேர வேலைநாளையும் எதிர்த்துப் போராடுவோம்!

é முதலாளிகளின் நலன்களுக்காக தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!

é வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்கு சில்லறை வணிகத்தை காவு கொடுப்பதை எதிர்ப்போம்!

é ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யப் போராடுவோம்!

é கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வணிகமயமாக்குவதை எதிர்ப்போம்!

é ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்!

é தமிழை-தாய்மொழியை ஆட்சி மொழி, பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

é மெட்ரிக்குலேசன் பள்ளிகளை இழுத்து மூடு! பொதுக் கல்வித் திட்டத்தை அமல்படுத்து!

é மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிச தேசிய கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!

é காஷ்மீர் தேசிய இனத்தின் மீதான உள்நாட்டு போரை உடனே நிறுத்து!

é தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்!

é மோடி கும்பலின் இந்துமதவாத, சாதிவாத பாசிசத்தை எதிர்த்துப் போராடுவோம்!

é மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

é உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

é மே நாள் வாழ்க!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு





Thursday, March 23, 2017

மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!

மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி கும்பலின் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள இவ்வாண்டுக்கான (2017-18) நிதிநிலை அறிக்கை, அந்நிய மூலதனத்திற்கு இருந்துவந்த அரைகுறை தடைகள் முழுவதையும் அகற்றி, நாட்டை ஏகாதிபத்திய புதியகாலனியத்திற்கு முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. மறுபுறம் ஐந்து மாகாணத் தேர்தலை மனதில் கொண்டு விவசாயத்திற்கும், கிராமப்புறங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு என்ற வெற்று வார்த்தை ஜாலங்களைக் கொண்டு நெருக்கடியின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்துள்ளது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைக் கலைப்பதன் மூலம் அந்நிய முலதனத்திற்கான அனைத்துத் தடைகளையும் அகற்றுவது, அரசு-தனியார் பங்கேற்புத் (PPP) திட்டத்தின் மூலம் இரயில்வே உள்ளிட்டு அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதைத் தீவிரப்படுத்துவது; 500, 1000- உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பொருளாதாரம் என்ற பேரில் சில்லறை வர்த்தகத்தை அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவது; தொழிலாளர்களின் நலன் காக்கும் பல்வேறு சட்டங்களை ஒரே சட்டமாக்கித் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி மனித உழைப்பை மலிவான விலைக்குத் தாரைவார்ப்பதன் மூலம் மோடி கும்பல் புதிய காலனிய, புதியதாரளக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரு புதிய கட்டத்தைத் துவக்கியுள்ளது.

அந்நிய முதலீட்டுக்கான வாசலை அகலத் திறப்பது, இயற்கை மற்றும் கனிம வளங்களைப் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் வேட்டைக்குக் காணிக்கையாக்குவது, மலிவான மனித உழைப்பைத் தாரைவார்ப்பது என்ற புதிய காலனியச் சேவையை மானவெட்கமின்றி மோடி கும்பல் நியாயப்படுத்துகிறது. அந்நிய மூலதனத்தைச் சார்ந்த, ஏற்றுமதியைச் சார்ந்த உலகமயக் கொள்கைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே வழி என்று குதர்க்கம் பேசுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன? எத்தகைய சர்வதேச சூழலில் இத்தகைய வாதத்தை மோடி கும்பல் முன்வைக்கிறது?

“கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை எடப்பாடி ஆட்சியை தூக்கியெறிவோம்!

“கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை எடப்பாடி ஆட்சியை தூக்கியெறிவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பின்பு, கிரிமினல் மாஃபியா சசிகலா கும்பல் சதித்திட்டம் தீட்டி அதிமுக கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஒருவர் மீண்டும் இணைந்து 5 ஆண்டுகள் ஆனபின்புதான் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வரமுடியும், கட்சியின் பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அதிமுகவின் 20(5) அமைப்புச் சட்டவிதிகளை மீறி சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார். அடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க வைத்தார். தற்காலிக முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கினார். உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை நிச்சயம் என்று தெரிந்த பிறகும் எப்படியும் முதலமைச்சராகி விடவேண்டும் என்ற வெறியில் கவர்னரை நிர்ப்பந்தித்தார். உச்ச நீதிமன்றம் சசிகலாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்தவுடன், தனது எடுபிடி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமனம் செய்து ஒரு பொம்மை ஆட்சியை தமிழக மக்கள் மீது திணித்துள்ளார். அதிமுக - பன்னீர் அணி, சசி அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அதிமுக-வினரும், தமிழக மக்களும் சசிகலாவின் இந்த சதிகளுக்கு கடும் எதிர்ப்புகளைக் காட்டிவருகின்றனர். இது தமிழகத்தில் ஒரு கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்துள்ளது.

Thursday, March 16, 2017

மகத்தான நவம்பர் சோசலிசப் புரட்சி நூற்றாண்டு நினைவாக ...

 மகத்தான நவம்பர் சோசலிசப் புரட்சி நூற்றாண்டு நினைவாக… 

சித்திரச் சோலைகளே ...

சித்திரச் சோலைகளே!
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே

சமரன் வெளியீட்டகம் - புதுமை பதிப்பகம் இணைந்து நடத்தும் நவம்பர் புரட்சி நூற்றாண்டு தொடக்க விழா! நூல்கள் அறிமுகம்


Monday, March 6, 2017

மீத்தேன் திட்டத்தை முறியடித்தோம்! ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியையும் முறியடிப்போம்!


மீத்தேன் திட்டத்தை முறியடித்தோம்! ஹைட்ரோ கார்பன் திட்ட மோசடியையும் முறியடிப்போம்!
ê  நீர், நிலம், உள்ளிட்ட கனிம வளங்கள், மூலப் பொருட்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதை அனுமதியோம்!
ê  மூல வளங்களையும், மனித உழைப்பையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதால் தொழில் வளர்ச்சியடையாது!
ê  மக்கள் ஜனநாயக அரசின் கீழ் பொதுத்துறையை கட்டி அமைப்பதே வளர்ச்சிக்கு வழி!
ê  நாட்டில் தொழில் வளர்ச்சி பெருக, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

ம.ஜ.இ.க. தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்


Wednesday, February 22, 2017

கிரிமினல் மாஃபியா” சசிகலா கும்பலின் பொம்மை – எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிவோம்!


கிரிமினல் மாஃபியாசசிகலா கும்பலின்
பொம்மை எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிவோம்!

ê சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பதவி விலகக்கோரி முற்றுகையிடுவோம்!

ê “A1 அம்மா” பெயரால் ஆட்சியமைக்க உரிமை கோரும் ஓ.பி.எஸ். கும்பலை ஆதரிக்காதீர்!

ê A1, A2 கிரிமினல் கும்பல்களுடன் சமரசம் செய்துகொள்ளும் திருத்தல்வாத, முதலாளித்துவ கட்சிகளை புறக்கணியுங்கள்!

ê தமிழக ஆளும் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் ஆதாயம் தேடும் இந்துத்துவ பா.ஜ.க.வின் சதிகளை முறியடிப்போம்!

ê தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் உரிமையுள்ள மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

ê ஊழல் மாஃபியா ஆட்சியை ஒழிக்க மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு