Monday, August 22, 2016

செப்-12, தியாகிகள் நினைவு நாள்! தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!


செப்-12, தியாகிகள் நினைவு நாள்!
தோழர் பாலன் நினைவு நீடூழி வாழ்க!

*      அந்நிய மூலதனத்திற்கும், அமெரிக்காவின்புதியகாலனியாதிக்கத்திற்கும்
சேவை செய்வதே இந்துத்துவப் பாசிசம்!

*        உலகமேலாதிக்க அமெரிக்காவின்இளைய பங்காளி”,
இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!

*      இந்துத்துவப் பாசிச ஆட்சியுடன்கூடிக்குலாவும்” 
பாசிச காங்கிரசை தனிமைப்படுத்துவோம்!

*    .தி.மு., தி.மு. இரண்டுமே அந்நிய மூலதனத்திற்கும்,    
இந்துத்துவப் பாசிசத்திற்கும் துணைபோகும் கட்சிகளே!

*    ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு
மக்கள் அணியைக் கட்டுவோம்!

*    வங்கிகள், காப்பீடு, இரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை
தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவோம்!

*    கல்வி, மருத்துவம், சுகாதாரத்தில் அரசின் பொறுப்பை கைவிட்டு 
வணிகமயமாக்குவதை எதிர்த்து முறியடிப்போம்!

*    புதிய காலனியகார்ப்பரேட்வேளாண்மைக் கொள்கைகளை முறியடிப்போம்
நிலச் சீர்திருத்தத்திற்காக போராடுவோம்!

*   தேசிய இனங்கள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய
சுய நிர்ணய உரிமைக்காக போராடுவோம்!

*    காஷ்மீரில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்து!
படைகளை திரும்பப் பெறு!

*    சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெறு!

*    ஆங்கில, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்ப்போம்!
தமிழ் மொழி உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளையும்
ஆட்சி மொழியாக்க போராடுவோம்!

*    மத, சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம்!
சாதிகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Saturday, July 30, 2016

ஜனநாயக உரிமைப் பறிப்பை எதிர்த்துத் தொடரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

ஜனநாயக உரிமைப் பறிப்பை எதிர்த்துத் தொடரும்
வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தமானது வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக்குகிறது. இம்என்றால் வனவாசம், ‘ஏன்என்றால் சிறைவாசம் என வழக்கறிஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தக் கருப்புச் சட்டம் நீதித்துறை பாசிசத்தின் வெளிப்பாடேயாகும். இக்கருப்புச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள். இறுதியாகப் பல்லாயிரக் கணக்கான வழக்கறிஞர்கள் அணிதிரண்டு சென்னை உயர் நீதிமன்ற முற்றுகையில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்களின் முற்றுகைப் போராட்டத்திற்குப் பிறகும் கூட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற மறுத்துவிட்டது. மாறாக போராடும் வழக்கறிஞர்களை மிரட்டும் விதமாக 126 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி தமிழக அரசு 29 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்து 5-பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. இத்தகைய சூழலில் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்று, இடைநீக்கம் செய்தவர்கள் பணிக்குத் திரும்பும் வரை நீதிமன்றப் புறக்கணிப்புத் தொடரும் என்று தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது. வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடர்கிறது.

நீதித்துறைப் பாசிசம்

Saturday, May 7, 2016

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிப்பதோடு, அது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்து வருகின்ற ஒரு சூழலில் தமிழகச் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பலமுனைப் போட்டிகள் நிலவும் இத்தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வேலைவாய்ப்பைப் பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. இவ்வாறு இக்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தால் நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழகச் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? என்பதை இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதன் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.

Sunday, May 1, 2016

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மேநாளில் சூளுரைப்போம்!!

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மேநாளில் சூளுரைப்போம்!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் நீடிப்பதோடு, அது இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்து வருகின்ற ஒரு சூழலில்; தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள ஒரு சூழலில் இவ்வாண்டு மேநாளை எதிர்கொள்கிறோம். பலமுனைப் போட்டிகள் நிலவும் இத்தேர்தலில் பல்வேறு கூட்டணிகள் வேலைவாய்ப்பைப் பெருக்குவோம், விலைவாசியைக் குறைப்போம், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. இவ்வாறு இக்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி அமைத்தால் நிறைவேற்றுவார்களா? அல்லது அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? என்பதை இன்றைய சர்வதேசிய, தேசிய அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதன் மூலமாகத்தான் புரிந்துகொள்ள முடியும்.

எட்டு ஆண்டுகளாகத் தொடரும் முதலாளித்துவ நெருக்கடி

2008-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய நிதி நெருக்கடி என்ற முதலாளித்துவ மிகு உற்பத்தி நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் உலகப் பொருளாதாரம் இருண்டு வருகிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலை குறித்து, அண்மையில் (ஏப்ரல் 3) .எம்.எப். செயலாளர் கிறிஸ்டின் லாகர்டே கூறியதாவது: “உலகப் பொருளாதாரத்தின் இயக்கம் நின்றுவிட்டது, அரசாங்கங்கள் நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்என்று எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “2007-2009 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து உலகப் பொருளாதாரம் மீளவில்லை. மீட்சி என்பது மிகவும் மெதுவாகவும், மிகவும் பலவீனமாகவும் உள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் 2007-09 ஆம் ஆண்டுகளின் நிதி நெருக்கடியின் பின் விளைவுகளை இன்னமும் எதிர்கொள்கின்றன. அதிகரித்துக் கொண்டே செல்லும் அரசாங்கக் கடன்கள், முதலீடுகள் குறைந்துக் கொண்டே போவது, வேலையின்மை பெருகிக்கொண்டே செல்வது எனும் வடிவில் எதிர்கொள்கின்றன. உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் முந்தைய கணிப்புகளைவிட அதாவது 3.4 சதவீதத்தை விட வீழ்ச்சியடையும்என்று கூறுகிறார். அத்துடன் அரசாங்கங்கள் சீர்திருத்தக் கொள்கைகளைத் தொடர்வதுடன் கட்டமைப்புத் துறைகளில் அரசாங்கமே முதலீடு செய்வதுதான் வளர்ச்சிக்கு வழி என வலியுறுத்துகிறார்.

Wednesday, April 20, 2016

நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்! முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க மே நாளில் சூளுரைப்போம்!!



நாடாளுமன்றவாத மாயையில் மக்களை ஆழ்த்தும்
தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க
மே நாளில் சூளுரைப்போம்!!

ê நாடு எதிர்கொண்டிருக்கும் வேலையின்மை, தொழில்துறை வீழ்ச்சி, வேளாண்மை நெருக்கடி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணம் உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் உலகமய, தனியார்மய கொள்கைகளே!

ê உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் கடைப்பிடித்தது, ஆக்கிரமிப்புப் போர்களும், பாசிசமுமே!

ê பொருளாதார மீட்சிக்கும் வேலை வாய்ப்பு பெருக்கவும் வேளாண்மை நெருக்கடியிலிருந்து மீளவும், அந்நிய மூலதனத்தை சார்ந்த மோடி அரசின்மேக் இன் இந்தியாதிட்டம் தீர்வல்ல!

ê ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இந்துத்துவ பாசிச கொள்கைகளை முறியடிக்க புதிய காலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம், ஜனநாயகத்துக்காகப் போராடுவோம்!

ê ஆளும் வர்க்கக் கட்சிகள், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் மூலமே நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்று உருவாக்கும் மாயையை முறியடிப்போம்!

ê அடிப்படைப் பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டு ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு முழக்கங்களை முன்நிறுத்துவது மோசடியே!

ê தமிழக சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்! மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

ê உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு