Wednesday, April 30, 2014

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்

2014 - மே நாள் ஊர்வல முழக்கங்கள்


«  
மே நாள் வாழ்க மே நாள் வாழ்க!
மேதினி போற்றும் மேநாள் வாழ்க!
போர்நாள் வாழ்க போர் நாள் வாழ்க
பாட்டாளி வர்க்கப் போர்நாள் வாழ்க!

மே நாளில் சூளுரைப்போம்!

மே நாளில் சூளுரைப்போம்!

கருத்தாலும், கரத்தாலும் உழைக்கின்ற மக்களே!

                உலக முதலாளித்துவ நெருக்கடி மீளமுடியாமல் மென்மேலும் புதை குழியில் ஆழ்ந்து வருகின்றது. அதே வேளையில் நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும் மென்மேலும் சுமத்துகின்றனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். இத்தகைய சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளி வர்க்கமும், ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களும் கடுமையாகப் போரிட்டு வருகின்ற ஒரு சூழலில்தான் நாம் இந்த மே நாளை எதிர்கொள்கிறோம்.

Wednesday, April 23, 2014

புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

புதியகாலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்திக்கிறோம். இத்தேர்தல் எத்தகைய சூழலில் நடைபெறுகிறது?

உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்த ஒரு சூழலில்தான் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி -குறிப்பாக அமெரிக் காவில் 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் பரவியது. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் நெருக்கடியின் சுமைகளை ஒடுக்கப்பட்ட நாடுகள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் சுமத்திவிடும் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.

இந்திய அரசும் ஆளும் வர்க்கக் கட்சிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள தனது உலக மேலாதிக்கத்தையும், புதியகாலனி யாதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் எல்லாவிதமான நடவடிக்கைகளுக்கும் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன. அதன் விளைவாக இந்திய மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Sunday, March 9, 2014

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற 7 பேரின் விடுதலையை கோரிய ம.ஜ.இ.க. கடலூர், தர்மபுரி ஆர்ப்பாட்டத்திற்கு தடை!


ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற 7 பேரின் விடுதலையை கோரிய ம.ஜ.இ.க. ஆர்ப்பாட்டத்திற்கு தடை!
தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் கைது!

ê  7 பேரின் விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ், பா.ஜ.க. பாசிச கும்பல்களுக்குத் துணைபோகும் தமிழக காவல் துறையையும், தேர்தல் ஆணையத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம்!

ê  7 பேரின் விடுதலைக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
செல்:8098538384

Friday, March 7, 2014

இந்திய அரசே! ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமல்படுத்து!!



இந்திய அரசே! ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனே அமல்படுத்து!!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
     உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், குற்ற விசாரணை சட்டத்தின்படி அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி மாநில அரசே முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
   உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழக முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி இம்மூவரையும் விடுதலை செய்வதுடன், இவ்வழக்கில் ஏற்கனவே ஆயுள்தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் இரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து 7 பேரையும் விடுதலை செய்வது என்று முடிவு எடுத்தது. அது பற்றி மத்திய அரசின் முடிவை 3 நாட்களுக்குள் அறிவிக்கவேண்டும், இல்லையேல் தமிழக அரசு இவர்கள் ஏழுபேரையும் விடுதலை செய்யும் என்று அறிவித்தது.

Wednesday, February 12, 2014

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய நாடாளுமன்றம்!

புதிய காலனிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் சேவை செய்வதே இந்திய நாடாளுமன்றம்!

ê அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவை செய்யும் புதிய காலனிய அரசியல், பொருளாதார கொள்கைகளை முறியடிப்போம்!
ê நாட்டை அரசியல் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!
ê அந்நிய மூலதன ஆதிக்கத்திற்குச் சேவைசெய்யும் காங்கிரஸ் கும்பலின் பெருந்தேசியவாத, விரிவாதிக்கவாதப் பாசிசத்தை முறியடிப்போம்!
ê வளர்ச்சி என்ற பெயரால் புதிய காலனி ஆதிக்கத்திற்குச் சேவை செய்யும் “கார்ப்பரேட் மோடி”யின் இந்துத்துவப் பாசிசத்தை முறியடிப்போம்!
ê காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மூன்றாவது அணியும் அந்நிய ஆதிக்கத்திற்கும் பாசிசத்திற்கும் சேவை செய்யும் “காளான்”களே!
ê பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊழலை எதிர்க்காமல் ஊழல் ஒழிப்பு நாடகமாடும் ஆம் ஆத்மியையும் தொண்டு நிறுவனங்களையும் தனிமைப்படுத்துவோம்!

êஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ பாசிச பா.ஜ.க.வுக்கு துணைபோவும் தமிழ் உணர்வாளர்களின் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியை முறியடிப்போம்!
ê பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் உடைமைகளை பறிமுதல் செய்யப் போராடுவோம்!
ê வேளாண்துறையை கார்ப்பரேட் மயமாக்கி விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கும் தேசவிரோதக் கொள்கைகளை முறியடிப்போம்!

  •       நிலச் சீர்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
ê நிலப்பிரபுத்துவ சாதி, தீண்டாமைக் கொடுமைகளை சவக்குழிக்கு அனுப்புவோம்!
ê தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவோம்! தாய்த்தமிழை ஆட்சிமொழி, பயிற்று மொழியாக்கப் போராடுவோம்!
ê கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவோம்!
ê புதிய காலனியப் பொருளாதாரக் கொள்கைகளைக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைப் புறக்கணிப்போம்!
ê மக்கள் ஜனநாயக அரசமைக்க புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!
 மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு


Wednesday, November 6, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடுத்துவது எதிர்த்து...



நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்! தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!


நவம்பர் 7, தர்மபுரி சாதிக் கலவர நாள்!

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கச் சூளுரைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 

தர்மபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய மூன்று தாழ்த்தப்பட்டோர் கிராமங்கள் மீது, வன்னியச் சாதி வெறியர்கள் சாதி கலவரத்தை நடத்தி நாசப்படுத்தியது வரும் நவம்பர் 7 ஆம் தேதியுடன் ஓராண்டு காலம் முடிவடைகிறது. கலவரம் நடந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது முறையாக நடக்கவுமில்லை, அம்மக்களைச் சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவுமில்லை. சாதிக் கலவரத்தைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பேரில் ஓராண்டு காலமாகத் தர்மபுரியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள 144-தடை சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்தவில்லை. மாறாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள் மீதும், எதிர்க்கட்சியினர் மீதும் அடக்குமுறைகளை ஏவி ஒரு போலீஸ் இராஜ்ஜியமே நடந்து வருகிறது. 

Tuesday, October 22, 2013

இலங்கையில் “காமன்வெல்த் மாநாடு” நடத்துவதை எதிர்த்து ...

ஏகாதிபத்தியவாதிகளே!
  • இராஜபட்சே கும்பலின் இன அழிப்புப் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான “காமன்வெல்த் மாநாட்டைஇலங்கையில் நடத்தாதீர்!
  • இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!
  • தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பிற்காகப் போராடுவோம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
ஈழத் தமிழின அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பல் 13வது சட்டத்திருத்தம், வடக்கு மாகாணத் தேர்தல் மூலம் ஜனநாயகம் வழங்குதல் என்ற கபட நாடகத்தின் பின்னால் இன அழிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்கிறது.தொடர்ந்து காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் தன் மீதான இன அழிப்புப் போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது. வரலாறு காணாத இராணுவ மயமாக்கலின் கீழ் வடக்கு மாகாணத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இராஜபட்சேவின் கைக்கூலி விக்னேஸ்வரன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். ஈழத் தமிழினத்தை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்காத, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழர் தாயகம் என்பதைக் கூட ஏற்காத, காவல், நிலம் போன்ற முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்ட ஒரு மாகாண சபையால் எள்முனை அளவுக்குக் கூட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது. மாறாக, இராஜபட்சே கும்பலின் இன அழிப்புக்கு மௌன சாட்சியாகவே வடக்கு மாகாண ஆட்சி அமையும்.