Friday, April 26, 2013

மே நாளில் சூளுரைப்போம்


மே நாளில் சூளுரைப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!
      அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய வாதிகள் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது புதியகாலனி ஆதிக்கத்திற்காகத் தொடுத்துவரும் போர்கள் உக்கிரம் அடைந்துவரும் ஒரு சூழலில்: ஒடுக்கப்பட்ட நாடுகளும் தேசிய இனங்களும் அதனை எதிர்த்து நடத்திவரும் விடுதலைப் புரட்சிகள் எழுச்சிபெற்றுவரும் ஒரு சூழலில், இவ்வாண்டு மே நாள் இயக்கத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.

Saturday, April 20, 2013

மே நாளில் சூளூரைப்போம்!

மே நாளில் சூளூரைப்போம்!
«  அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தையும் யுத்தவெறிக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
«  நாடுகளின் விடுதலைக்காகவும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!
«  அமெரிக்காவின் ‘ஆசிய பசிபிக் நூற்றாண்டுத் திட்டத்தை’ எதிர்ப்போம்!
«  ஈழத் தமிழருக்கு எதிரான அமெரிக்க இந்திய கூட்டுச் சதிகளை முறியடிப்போம்!
«  இந்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைகளையும் தேசிய ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவோம்!
«  தாய்மொழி, தமிழ்மொழியை ஆட்சிமொழி பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!
«  தமிழர் நலன்காக்க, மீனவர் உரிமை காக்க கச்சத்தீவை மீட்கப் போராடுவோம்!
«  பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கான நிரந்தர வேலை ஒழிப்பு, ஒப்பந்தக் கூலிமுறை, வேலை நேரம் அதிகரிப்பு போன்ற கொத்தடிமை முறைகளை எதிர்த்துப் போராடுவோம்!
«  தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோம்!
«  புதியகாலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்! நிலச் சீர்த்திருத்தத்திற்காகப் போராடுவோம்!
«  சாதிவாத அரசியலை எதிர்ப்போம்! சாதி, தீண்டாமையை ஒழிக்கப் போராடுவோம்!
«  அந்நிய மூலதன ஆதிக்கத்தாலும் தொடரும் மின்வெட்டாலும் உழவு, தொழில், நெசவு சில்லரை வர்த்தகம் அழிவதை எதிர்த்துப் போராடுவோம்!
«  தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைக்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவோம்!
«  தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு முழுமையான நிவாரணம் வழங்காததை எதிர்த்துப் போராடுவோம்!
«  உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!
«  மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
மே 1, 2013

Sunday, April 14, 2013

கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழங்குவோம்!


ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை
வெல்க! வெல்க! வெல்கவே!

ஏகாதிபத்திய அமெரிக்காவின்
ஐ.நா….. தீர்மானம்
ஈழத்தமிழ் மக்களுக்கு
மாபெரும் துரோகம்! மாபெரும் துரோகம்!

அமெரிக்காவின் துரோகத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இன அழிப்பு போர்க்குற்றவாளி
இராஜபட்சே மீதான
சர்வதேச விசாரணை
கோரிக்கைக்கு எதிரான
அமெரிக்க இந்திய கூட்டுச் சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

ஈழத் தமிழரின் சுய நிர்ணய
உரிமைக்கான கோரிக்கை
பேரத்திற்கான ஒன்றல்ல!

தமிழ் ஈழ தனிநாடு ஒன்றே
ஈழத் தமிழ் மக்களின்
அரசியல் விடுதலை அடைவதற்கான
ஒரே வழி! ஒரே வழி!
  
தமிழ் ஈழத் தாயகத்தை
சிங்களமய மாக்கிடவும்
இராணுவமய மாக்கிடவும்
இலங்கைக்கு இந்தியா
துணை போவதை முறியடிப்போம்!

தமிழ் ஈழ மண்ணிலிருந்து
சிங்கள இனவெறி இராணுவத்தை
வெளியேற்றப் போராடுவோம்!

ஈழத் தமிழ் மக்களையெல்லாம்
சொந்த மண்ணில் குடியமர்த்த
போராடுவோம்! போராடுவோம்!
உலக மக்கள் ஒன்றுபட்டு
போராடுவோம்! போராடுவோம்!

Sunday, April 7, 2013

கண்டன ஆர்ப்பாட்டம்... அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகம்!


அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம்
ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!

இலங்கைக்கு எதிராக .நா. மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் .நா. தீர்மானம் ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் .நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசுக்கு எதிராக ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். “கடந்த ஆண்டு .நா. மனித உரிமைக் கழகம் வலியுறுத்திய தீர்மானத்தின்படி இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் குவித்துள்ள இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு பகுதியில் குடியமர்த்தி பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காணவேண்டும்என்று அந்த அறிக்கை வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் தீர்மானம் இருக்கும் என்ற அடிப்படையில்தான் அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆர்ப்பாட்டம்... அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் ஈழத் தமிழருக்கு மாபெரும் துரோகம்!


Wednesday, March 20, 2013


இன அழிப்பு போர்க்குற்றவாளி இராஜபட் சேவைக் கூண்டிலேற்றவும், தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்புக்கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக வாதிகளே!
.நா சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா ஒரு உப்பு சப்பில்லாத தீர்மானத்தை முன்வைத்துள்ளது. அந்தத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையிலான "டெசோ'' அமைப்பினரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசை நிர்பந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் போராடும் பெரும்பான்மை மாணவர்கள் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் வெறும் நாடகம் என்றும் இலங்கையில் சர்வதேச விசாரணை வேண்டியும் தமிழீழ தனிநாடு அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கானத் தீர்மானத்தை இந்தியா தனியாக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகின்றனர். இத்தகைய ஒரு சூழலில் ஈழத்தமிழரின் விடுதலைக்கான ஒரு சரியான நிலைபாட்டை எடுக்கவும், மாணவர்களின் போராட்டத்தை ஒரு பொது இயக்கமாக மாற்றுவதற்கும் மேற்கண்ட போக்குகளை பற்றி ஒரு பரிசீலனை செய்வது அவசியமாகும்.

Sunday, March 17, 2013

இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!


இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்றவும், தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு கோரியும் நடக்கும் மாணவர் போராட்டம் வெல்க!

«  அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் – மேலாதிக்கம் நோக்கம் கொண்டதே, இராஜபட்சேவை கூண்டிலேற்றவும் அல்ல, ஈழத்தமிழர்களின் விடுதலைக்கானதும் அல்ல!
«  இலங்கையை – அமெரிக்கா, சீனா மேலாதிக்கவாதிகளின் போட்டிக்களமாக மாற்றுவதை அனுமதியோம்!
«  சோனியா, மன்மோகன் ஆட்சி – இன அழிப்பைத் தொடரும் இராஜபட்சேவின் கூட்டாளியே! போர்க்குற்றவாளிகளே!
«  கருணாநிதியின் டெசோ - அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தர இந்தியாவை நிர்ப்பந்திப்பது – தமிழின துரோகத்தின் தொடர்ச்சியே!
«  இரட்டை வேட ஜெயா அரசே! மாணவர் போராட்டத்தின் மீதான அடக்குமுறைகளை கைவிடு!
«  தமிழீழத்திற்கான மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday, February 10, 2013

இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!


இராமதாஸ் கும்பலின், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான
அனைத்து சமுதாய மக்களின் பாதுகாப்பு முன்னணியைமுறியடிப்போம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
      தருமபுரி மாவட்டத்திலுள்ள நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய ஊர்களில் வசித்துவந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், அவர்களின் உடைமைகள் மீதும் பா.ம.க.வைச் சார்ந்த வன்னிய சாதிவெறியர்கள், திட்டமிட்டு ஒரு சாதிவெறித் தாக்குதலை நடத்தி முடித்தனர். முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொளுத்தினர். வன்னியச் சாதியைச் சார்ந்த ஒரு பெண், தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து கலப்புமணம் புரிந்துகொண்டதைக் காரணம் காட்டி இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.
      கடந்த நவம்பர் 7ல், தருமபுரியில் நடந்த அந்தக் கலவரம் அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிக் கலவரத்தை வன்னியச் சாதிவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் மேலிருப்புக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் வீடுகளையும் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. தர்மபுரி கலவரத்திற்கு பின்பு பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தாழ்த்தப்பட்டச் சாதி மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்பு ஒன்றை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

Friday, January 25, 2013

அமெரிக்காவின் புதியகாலனிய ஆதிக்கமும் “அரபு வசந்தமும்”


சமரன் வெளியீட்டகம் : தொடர்புக்கு: 9941611655

முன்னுரை
                அமெரிக்க ஏகாதிபத்தியம், வடக்கு ஆப்பிரிக்கா முதல் மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வரை தனது புதிய காலனிய ஆதிக்கத்தை திணிக்கவும், தனது உலக மேலாதிக்கத்தை நிறுவவும் அந்நாடுகளின் மீது அரசியல் பொருளாதார, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்றும்; சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமைகளை காப்பது, ஊழல் ஆட்சியை ஒழிப்பது என்றும் நாமகரணங்களை சூட்டிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் துவங்கி, ஈராக், லிபியா இன்று சிரியா என்று ஒவ்வொரு நாடாக தனது பொம்மை ஆட்சிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உண்மையில் அந்தப் பிரதேசங்களில் கிடைக்கும் எண்ணெய், எரிவாயு மூலப்பொருட்களை கைப்பற்றுவதற்காக நடத்துவதுதான் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்புகளும் ஆக்கிரமிப்புப் போர்களும்.

Monday, January 21, 2013

இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!


இராமதாஸ் கும்பலின் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான “அனைத்து சமுதாய மக்கள் பாதுகாப்பு முன்னணியை” முறியடிப்போம்!

«  கலப்புத் திருமண மறுப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுப்பு, வன்கொடுமைக்கு ஆதரவு என தமிழ்ச் சமுதாயத்தை பின்னோக்கி இழுக்கும் எதிர்ப்புரட்சியை முறியடிப்போம்!
«  சாதி தீண்டாமை ஆணாதிக்கத்திற்கு முடிவுகட்ட ஜனநாயக இயக்கங்களைக் கட்டியமைப்போம்!
«  சாதி ஆதிக்க எதிர்ப்புரட்சி வன்முறையை மக்களின் புரட்சிகர வன்முறையால் வெல்வோம்!
«  ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி 2013

Friday, January 4, 2013

கூடங்குளம் அணு உலையைத் திற! - ஆர்ப்பாட்டம்


கூடங்குளம் அணு உலையைத் திற!


கூடங்குளம் அணு உலையைத் திற!

          கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்திக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆனபின்பும், எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், மக்களைத் திரட்டிப் போராடுவதன் மூலமும் எப்படியாவது அணு உலையை மூடிவிடவேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசாங்கமோ நட்ட ஈடு, மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்துவைத்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அணுமின் நிலையத்தை திறப்பதற்கு முழுமுயற்சி செய்யவில்லை. உச்சநீதிமன்றம் அணுசக்தி அரசியலையோ, தொண்டு நிறுவனங்களின் உள்ளார்ந்த நோக்கங்களையோ புரிந்துகொள்ள மறுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அணு உலையை மூடச்சொல்வோம் எனக் கூறியது. அணு உலை மீதானத் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு என்பது சிந்துபாத் கன்னித்தீவு கதைப்போல் தொடர்கிறது.